Wednesday, October 31, 2012

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சுமார் 200,000 தாதியருக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் இதனால் வெளிவாரி பட்டப்படிப்பிற்கான அனுமதியினை மட்டுப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாளியை கொலை செய்து மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கையர்!

சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றம்......

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றப்படுகிறது. இது வரையும் சில வானொலிகள் 5 வரையான அலைவரிசைகளையும் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக புதிய வானொலிகளுக்கு அலைவரிசைகளை ஒதுக்கமுடியவில்லை.

அத்துடன் பல வானொலிகளின் நிகழச்சிகளுக்கு தடைகளையும் ஏற்படுத்தின. இதன் காரணமாக நாளை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவால் ஒரு வானொலிக்கு இரு அலைவரிசை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கேட்கும் சில தமிழ் வானொலிகளும் புதிய அலைவரிசைகளும்

சூரியன் எப்.எம்-- 103.4 MHz மற்றும் 103.6 MHz

சக்தி எப்.எம்-- 103.9 MHz மற்றும் 104.1 MHz

வெற்றி எப்.எம்-- 90.4MHz மற்றும் 90.6 MHz

வசந்தம் எப்.எம்-- 102.6 மற்றும் 102.8 MHz

அலை எப்.எம்-- 91.4

Tuesday, October 30, 2012

இலங்கையில் மீன் மழை

கந்தளாய் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் இந்த சிறிய மீன்களை காணக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு மாத நீண்ட வரட்சியின் பின்னர் நேற்று கந்தளாய் பிரதேசத்தில் கன மழை பெய்தது.

இதன் போது மழை நீருடன் தரையில் சிறிய மின்களும் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் லீலரட்ன விளையாட்டரங்கில் சுமார் 3-4 அங்குல அளவுடைய மீன்கள் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையுடன் தரையில் விழுந்த மீன்கள் குளத்து மீன் வகையினைச் சார்ந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது.

Sunday, October 28, 2012

The Best Annual Report and Accounts Competition of National Schools 2012



சம்மாந்துறை தேசிய பாடசாலை அகில இலங்கை ரீதியாக தெரிவூ செய்யப்பட்ட சிறந்த பாடசாலை அபிவிருத்தி கணக்கரிக்கையில் 2012 இல்  அம்பாறை மாவட்ட முதலாம் இடத்தை  பெற்றுள்ளது கடந்த 27.10.2012 கொழும்பு BMICH இல் நடைபெற்ற இவ் விருது வழங்கும் வழாவில் கௌரவ கல்வி அமைச்சர் சகல மாவட்டத்தில் இருந்தும் செய்யப்பட்ட வெற்றியாளருக்கு கௌரவித்து சான்றுதலும் வழங்ஙூகப்பட்டன சம்மாந்றை தேசிய பாடசாலை சார்பில் கல்லுரி முதல்வர் எஸ். அபூபக்கர் அவர்களும் கணக்கியல் ஆசிரியர் நசீர் அவர்களும் பங்குபற்றினர் aat  பணிப்பாளர்களும் கல்வி அமைச்சின் சயலாளர் எஸ். எம் கோட்டபாய ஜெயரத்ன அவர்களும் கல்ந்து சிறப்பித்த படங்களாகும் 

Thursday, October 25, 2012

பிள்ளை நேயம் உள்ளதா?

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் பிள்ளை நேயம் உள்ளதா?




இலங்கை கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளை சிலவற்றை பிள்ளை நேயப் பாடசாலைகளாக பிரகடனப்படுத்தி பிள்ளை நேயத்தை இப்பாடசாலைகளில் மேற்கொள்ளும் திட்டத்திற்குகமைவாக,
இந் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களாக யுனிசெப் மற்றும் அவுஸ்ரெலின் எயிட் என்ற இரு நிறுவனங்களும் இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை வழங்கி வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

பிள்ளை நேயப்பாடசாலையின் அடிப்படையிலான ஆறு பரிமாணங்களாக.
  1. 01. பிள்ளைகளின் உரிமைகள்
  2. 02. பால் நிலை சமத்துவம்
  3. 03. கற்றல் பேறுகளின் விருத்தி
  4. 04. பிள்ளையின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்
  5. 05. மாணவர்களின் குடும்பப் பிண்ணனி
  6. 06. சிறுவர் நேயக் கொள்கைகள்

என்பவையே இவைகளாகும். மேற்கூறிய செயற்பாடுகளின் செறிவு பற்றி நேரடியான ஆய்வினை செய்வதற்காக யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள் இப்பாடசாலையில் ஆய்வினை  2012.10.25 மேற்கொண்டனர்.

அத்துடன் இப்பாடசாலையை   மென்மேலும் விருத்தி செய்தி எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகள் ஒரு துடுப்பாக அமைக்கூடுமென இப்பிரநிதிகளும் இப்பாடசாலை சமூகமும் ஆருடம் தெரிவித்துள்ளன. 

thaha naleem

களை கட்டியுள்ள சம்மாந்துறை பெருநாள் விற்பனை


சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள பெருநாள் விற்பனை கூடங்கள் களைகட்டியுள்ளன.

எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில்  பெருநாள் வர்ததக நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பெருமளவான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். 
வீதிப் போக்குவரத்துகளிற்கு இடையூறில்லா வண்ணம் பாதையோர வர்த்தகர்களிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் சம்மாந்துறையிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள்  பாதணி  வர்த்தக நிலையங்கள், பலசரக்குக்கடைகள் என்பவற்றிலும் மக்கள் பெருமளவில் பெருநாட் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.





திவிநெகும வேலைத்திட்டம் - பயிர்விதைகள் வினியோகம்

திவிநெகும வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பயிர்விதைகள் வழங்கிவைக்கும் நிகழ்வவொன்று இன்று (2012-10-25) சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்ததோடு  திவிநெகும திட்டத்தைப்பற்றி மக்களுக்கு விளக்கமளித்தார். மற்றும் பயிர்விதைகளின் வினியோகத்தினையும் தொடக்கி வைத்தார். பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மரநடுகையும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.








Tuesday, October 23, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பல்லூடக நிலையத்திற்கான அடிக்கல் நடப்பட்டது

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று மஹிந்தோதயா தகவல்தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
கல்லூரி அதிபர் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் அதிபர் அவர்களும் அடிக்கல் நட்டனர். மேலும் மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறியதுடன் அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

Monday, October 22, 2012

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி!


இவ்வாண்டின் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்



நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்

இந்த பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னோடி கருத்தரங்குகளை நடத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருத்தரங்குகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி முதல்  25ஆம்திகதி வரை சகல பாடசாலைகளிலும் நடத்தப்படும் எனவும் அதற்கான செயல்முறை விளக்கம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார் .


இதேவேளை,இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 5,37,393 பேர் தோற்றுவதாகவும் இதில் 1லட்சத்து 50,968 பேர் பாடசாலை மட்டத்தில் தோற்றுபவர்கள் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஏ புஷ்பகுமார தெரிவித்தார்.


மூன்று லட்சத்து 20ஆயிரம் பேர் இப்பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

26ஆம் திகதிய அரச விடுமுறை ரத்து!


எதிர்வரும் அக்டோபர் 26ஆம் திகதி அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.


26ஆம் திகதி அரசாங்க ,வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும் முஸ்லீம்களின் 'ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜுப்பெருநாள் 27ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்கமிட்டி கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 26ஆம் திகதிய அரச விடுமுறைரத்துச்செய்யப்பட்டுள்ளது.


எனினும்  ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகிய  27ஆம் திகதி சனிக்கிழமை  அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாகபிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது.

அவசியம் ஏற்பட்டாடல் கருத்துக்கணிப்பு நடத்துவோம்!


-அமைச்சர் பசில் ராஜபக்ஷ தகவல்-
திவிநெகும சட்டமூலத்துக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் உரிய தீர்வை வழங்குவார்கள். அவசயம் ஏற்பட்டால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்;தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது-

திவிநெகும சட்டமூலத்துக்கு இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே இன்று முக்கிய தடையாக இருக்கின்றனர். தமது அரச விரோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வடபகுதி பொது மக்களையே இவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
சமுர்தி மற்றும் திவிநெகும தி;ட்டங்கள் மூலம் வட பகுதி வரிய மக்கள் அடையப்போகும் நன்மைகளை இவர்கள் தடுக்கின்றனர்.

2001 முதல் 2004 ஆண்டு காலப் பகுதியில் இவர்கள் புலிகளின் பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் நுழைந்தனர். எனவே பொது மக்களுக்கு புலிகள் நன்மை செய்தாலும் தீமைகள் செய்தாலும் அவற்றின் முழுப்பொறுப்பையூம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே ஏற்கவேண்டும்.

வட பகுதி மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய அடிப்படை வசதிகளை புலிகள் அழித்தனர். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகளை இவர்கள் நிர்மூலமாக்கினர். தொழிற்சாலைகளை தகர்த்தனர். இறுதியாக மக்களின் உயிர்களையூம் பறித்தனர்.

சமுர்தித் திட்டம் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் இந்த வருடம் வரையில் வடக்கில் அது செயற்படவில்லை. கிளிநொச்சி- மன்னார் - முல்லைத் தீவூ ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தித் திட்டம் செயல்படவில்லை. அன்று புலிகள் என்ன செய்தார்களோ அதனையே இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்கின்றனர்.

வட பகுதி மக்களின் முக்கிய பிரச்சினை தீர்க்க அரசாங்கம் "பிம் சவிய' திட்டத்தை முன்வைத்தது. எனினும் அத்திட்டத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் அத்திட்டம் முடக்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து சுமார் 60 வருடங்களில் கிடைக்காத அடிப்டை வசதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைiயிலான அரசாங்கம் வட பகுதி மக்களுக்கு வழங்கியது. புலிகள் இல்லாதொழித்த வசதிகளையூம் அதற்கு மேலான வசதிகளையூம் இன்றை அரசு செய்துள்ளதுஇ

ஆனால் அடிக்கடி வெளிநாடு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அங்கு பொய்களைக் கூறி அரசின் நல்ல திட்டங்களைத் தாமதப்டுத்துகின்றனர்.

வெளிநாடுகள் இலங்கைக்கு வழங்கும் கடன் உதவிகள் மறறும் உதவிகளைத் தடுக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இலங்கைக்கு உதவி வழங்குங்கள் என்று அவர்கள் ஒருபோதும் வெளிநாடுகளிடம் இதுவரைக் கோரிக்கை விடவில்லை.

வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே நாம் திவி நெகும் திட்டத்தை முன்னெடுக்கிறௌம். மாகாணசபை அதிகாரங்களில் நடவடிக்கைகளில் நாம் தலையிட மாட்டோம். தமிழ் மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட நிருவாக முறையொன்றை அவர்களுக்கு நாம் வழங்குவோம் என்றும் அமைச்சர் கூறினார். 

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பம்!


ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கை தொடர்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இந்த கூட்டத் தொடர் அரசாங்கத்திற்கு எந்தவொரு வகையிலும் பாதகமாக அமையாது என  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.


யு.பி.ஆர். எனப்படும் சர்வதேச தவணைமுறை மீளாய்வுக் கூட்டத் தொடரில் நவம்பர் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பிலான கலந்தாலோசிப்புகள் இடம்பெறும்.


இக்கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொள்வதுடன் இவருக்கு மேலதிகமாக விசேட குழுவொன்று ஜெனீவா செல்ல தயாராகவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.


ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகள் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்படி யு.பி.ஆர். கூட்டத் தொடருக்கு சமுகம் அளிப்பது வழக்கம். அந்த வகையிலேயே எமது இலங்கை அரசாங்கம் சார்பிலான பிரதிநிதிகளும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் வகையில் ஜெனீவா நோக்கி பயணம் செய்யவுள்ளனர்.

இக்கூட்டத் தொடர் குறித்த சரியான விளக்கம் கொண்டிராத பல்வேறு ஊடகங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கப் பிரதிநிதிகளை வரவழைத்திருப்பதாகவும் இதனால் இலங்கை அரசாங்கம் நெருக்கடிக்கு முகம் கொடுக்கவிருப்பதாகவும் தவறான செய்திகளை பிரசுரித்து வருகின்றன. இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் செயலாளர் அமுனுகம மறுப்புத் தெரிவித்தார்.


யு.பி.ஆர். கூட்டத் தொடர் என்பது ஐ.நா. உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகளுக்கு ஒரு பரீட்சை போன்றதென்றே கூறலாம். இலங்கை இரண்டாவது தடவையாகவே எதிர்வரும் முதலாம் திகதி இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்கிறது.


நீதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீள்குடியமர்வு புனர்வாழ்வு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இக்கூட்டத் தொடரில் தங்களது துறை சார்பில் விளக்கமளிப்பர்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் நோக்கிய எமது பாதையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் இது எமக்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறினார்.


மேலும் இக்கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதகமாக அமையாதென சுட்டிக்காட்டிய அவர் ,தற்போது இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள விதம் ஆகியன தெளிவுபடுத்தப் பட்டுள்ளமையினால் இக்கூட்டத் தொடரில் பாரிய சிக்கல்கள் எதுவும் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே, இலங்கை இதில் கலந்து கொள்வது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் கூறினார். 

உலக சக்தி மாநாட்டில் ஜனாதிபதி உரை!



உலக சக்தி மாநாடு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார். இந்த மாநாடு 24ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறுகின்றது.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ- வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி ஆகியோர் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர்.

நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை


நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகக் கிடைக்கும் அதிகளவு முறைப்பாடுகளே இதற்குக் காரணமாகும். அங்குள்ள நிர்வாகத்தினர் இதனை பெருமளவு அலட்சியப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சில சம்பவங்களில் வார்த்தையளவிலும் உணர்ச்சிகரமாகவும் பௌதீக ரீதியாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதாக அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை உருவாக்குவதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு போதுமான தராதரங்களோ, விதிகளோ இல்லாமை இந்நிலையை மேலும் தூண்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை நிர்வகிப்பதற்கான பலமான சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. யாரிடம் பொருளாதார ரீதியாக அதற்கான இயலுமை இருக்கிறதோ அவர்களே இதனைத் தொடங்குகின்றனர். இப்பாடசாலைகளில் சிறுவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளும் காணப்படுவதில்லை. அத்துடன் ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவதுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விதிகளையும் பிரமாணங்களையும் தயாரிப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட அதிகார சபை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


(நன்றி மீள்பார்வை)

Sunday, October 21, 2012

அல்-வஸத் மாணவர்களின் கண்காட்சி







சம்மாந்துறை அல்வஸத் பாலர் பாடசாலையில் நேற்று (2012-10-20) சனிக்கிழமை கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கைப்பணிகளும், அவர்களின் ஆக்கத்திறனைத் தூண்டக்கூடிய வித்தியாசமான பல்வகை ஆக்கப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள் பெற்றோர் மற்றும் சிறுவர்கள் பலரும் பாலர் மாணவர்களின் இக்கண்காட்சியைக் காணவந்திருந்தனர்.

Friday, October 19, 2012

சம்மாந்துறை மண்ணின் முதலாவது முப்தி


  


சம்மாந்துறை சமீட்புரத்தைச் சேர்ந்த முஹத்திஸ் ஏ.எல். முஹம்மது ஸாஜித் அலி  அவர்களே சம்மாந்துறை மண்ணின் ஆன்மீக வரலாற்றில் முதன்முதலாக முப்தியாக தடம்பதித்துள்ளார்.  இவரின்  குத்பாப் பிரசங்கமும் பாராட்டு விழாவும் இன்று (2012-10-19) சம்மாந்துறை பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது

 பொதுமக்கள் பெரும்பாலானோரும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில்   கலந்துகொண்டனர்.


Thursday, October 18, 2012

வேலைவாய்ப்பு


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வு


 Green Flowers விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 18-10-2012ம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.00 மணிக்கு, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு  தினம்-2012. நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. பிரெய்ல் புள்ளி முறையில்  பரீட்சைகளில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அமைப்பினால் வெள்ளைப் பிரம்புகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி U.L.M.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மீன்களின் சுனாமி - சூரை மீன்கள் படையெடுப்பு

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பெருமளவான மீன்கள் படையெடுத்து வருகின்றன.
பெருமளவிலான மக்கள் இதனைப் பார்வையிடச் செல்கின்றனர். மீனவர்களும் அதிகளவான மீன்களைப் பிடித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் மீன்கள் மலிவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

நிந்தவூர் மதீனா வித்தியாலயதிற்கு கௌரவம்






2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM .ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார். மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.

இதன் மூலம் தான்  கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகாணதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தங்க மகன் ஆஷிக் அவர்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17 .10 .2012 )தனது சொந்த பாடசாலையான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் அஹமது தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீ, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி SM ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி SLM சலீம், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான MI இப்ராஹீம், A  ஜாபிர் கபூர் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்


Sulaiman Raafi

கிழக்கிற்கு பெருமை தந்த தங்க மகன்








2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM ஆஷிக் அவர்கள் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும், குண்டு போடுதல்  நிகழ்ச்சியில் வெண்கலப்பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார் 

மாத்தறை DA ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப்பதக்கத்தினையும், குண்டு போடுதலில் 11 .85    மீற்றர் தூரம் ஏறிந்து  வெண்கலப்பதக்கத்தினையும் சுவீகரித்தார். இதனை விடுத்து 2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாடு  விழாவிலும், இளைஞர் கழக விளையாட்டு விழாவிலும்  ZTM ஆஷிக் அவர்கள் ஈட்டி எறிதல், பரிது வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் நிகழ்சிகளில்  கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இதேவேளை தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும், கிழக்கு மாகானதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் தங்க மகன்  ZTM ஆஷிக் அவர்களுக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் A ஜாபிர் கபூர் மற்றும் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் AL அனஸ் அஹமட் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். 

இது தவிர தங்க மகனுக்கு பாடசாலை மாணவ மாணவிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், ஊர் மக்கள் என பலராலும் மாபெரும் வரவேற்று அளிக்கப்பட்டதோடு ஊர்வலமாகவும் அழைத்துசெல்லப்பட்டார். 

மேலும் தங்க மகனுக்கு இன்று 17.10.2012  (புதன்கிழமை) தனது சொந்த பாடசாலையான நிந்தவூர்  அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல் ஹாஜ் S  அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகமும், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.  


(சுலைமான் றாபி) 

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.