
இன்று(2012-09-21) சம்மாந்துறையில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இஸ்லாத்திற்கெதிரான சதி முயற்சிகள் தோல்வியடையவும். மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படவும், உலக முஸ்லிம்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு வேண்டியும் அனைத்து ஜும்மாப் பள்ளிகளிலும் ஜும்ஆவைத் தொடர்ந்து முற்ற வெளிப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தித்தனர். இன்றைய குத்பாப் பிரசங்கங்களும் சமகால சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியே அமைந்திருந்தன