Monday, November 29, 2010
சம்மாந்துறை இணையத்தளம் தற்பொழுது கிழக்கு.info உடன் கைகோர்த்துள்ளது.
எமது சம்மாந்துறை இணையத்தளமானது தற்பொழுது கிழக்கு.info எனும் கிழக்கு மாகாண செய்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இணையத்தளத்துடன் தமது சேவையை பகிர்ந்து கொள்ளவுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்த தானம் வழங்கும் திட்டத்தினூடாக, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இந் நிகழ்வானது இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக 2010.11.28 ஆகிய நேற்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப.5.00 மணி வரை சம்மாந்துறை மக்கள் வங்கிக் கிளை நிறைவேற்று அதிகாரி தலைமையிலும், இத்திட்டப் பொறுப்பதிகாரியும் சம்மாந்துறை இணைப்பாளர் பாத்திமா றஸ்மியா தலைமையிலும் அபா அஹமட் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. 50 இற்கு மேற்பட்டோர் இவ் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை எமது செய்திப் பிரிவானது வரவேற்கின்றது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474568
feature content slider
Content right
.
.
.