
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவானது இன்று கெளரவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(T.A) அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இது சுமார் மூன்று மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களின் அயராத முயற்ச்சியினதும், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகரி வைத்தியர் இஸ்ஸதீன் அவர்களின் முயற்ச்சியின் காரணமாகவும் இப் பிரிவானது நிர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் எமது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியடைந்து வருகிறது.இதற்கு அயராது உழைக்கும் வைத்தியர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் அனைவருக்கும் எமது செய்திப் பிரிவானது நன்றிப் பூக்களை சமர்ப்பிக்கின்றது.