Wednesday, April 25, 2012

பிரதேச சாஹித்திய கலாச்சார விழா போட்டிகள்- 2012

2012ம் ஆண்டிற்கான பிரதேச சாஹித்திய கலாச்சார விழாவை முன்னிட்டு,சமமாந்துறை பிரதேச செயலகத்தினால்  கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் சுற்று நிருபத்திற்கமைய சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச சாஹித்திய கலாச்சார விழாவிற்கான போட்டி நிகழச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் தகுதியுடைய ஆர்வமும்,ஆற்றலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களது ஆக்கங்களை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 30 ம் (2012-04-30)திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.  பாடசாலை மாணவர்களுக்கான கனிஸ்ட பிரிவில் கட்டுரை, கவிதை, பாடல்,கையெழுத்து போட்டிகளும். சிரேஸ்ட பிரிவில் கட்டுரை, கவிதை போட்டிகளும்
மற்றும் திறந்த பிரிவில் பாடல், நாட்டார்கலை கற்றல், இலக்கிய விவரணம், சிறுகதை, கவிதை, சிறுவர்கதை ஆகிய போட்டிகளுக்கும் ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்படும் சிறந்த ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும் என அறிவிககப்பட்டுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்

தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து நாடு தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.


கோரிக்கைகள்

  • தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

  • எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல் இடம் மாற்றம் செய்யப்படக் கூடாது.

காலம்:

27.04.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் (2.00 மணி முதல் 4.00மணி வரை)

இடம்:

மாலிகாவத்தையில் அமைந்துள்ள SLTJ தலைமையகத்திற்கு முன்னிருந்து கொழும்பு கோட்டை வரை பேரணி தொடரும்.

அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க (ஆண்கள் பெண்கள் உட்பட)அனைத்து முஸ்லிம்களையும் அணிதிரளுமாறு அழைக்கிறது

குறிப்பு:

இப்போராட்டம் அத்து மீறி செயல்பட்ட கடும்போக்கு சிங்களவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. அனைத்து சிங்களவர்களுக்கும் எதிராக அல்ல. மற்றும் இப்போராட்டம் மிகவும் அமைதியான முறையயில் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)

தொடர்புக்கு: 0112677974, 0774781471, 0774781473,

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.