Wednesday, November 14, 2012
சம்மாந்துறை வரலாற்று ஆவணப்படுத்தல்களில் இன்னுமொரு சுவடு
மட்டக்களப்பு முஸ்லிம்களின் தனித்துவ அம்சங்களில் அவர்களில் காணப்படும் குடி வழிமுறை முக்கியமான மரபாக பேணப்பட்டு வருகின்றது. இதன் வரலாறு மற்றும் சம்மாந்துறைப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் தற்போது வழக்கிலுள்ள குடி வழிமுறை சம்மந்தமாக சம்மாந்தறை குடி மரைக்கார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸிக் அவர்களால் தொகுக்கப்பட்ட முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை எனும் நூல் வெளியீடு எதிர்வரும் 2012-11-17ம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
குடி மரைக்காயர் சம்மேளனத் தலைவர் எஸ்.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல பிரமுகர்களும் கலந்த சிறப்பிக்கவள்ளனர். பொது மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ள முடியும் என்பதும்
பிரத்தியேகமாக நூல் விற்பனைப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சம்மாந்துறை சம்மந்தமான வெளியிடப்படும் தனி வரலாற்று நூல்கள் வரிசையில் இந்த வருடத்தின் மூன்றாவது நூலும். குடி வரலாறுகள் சம்பந்தமான முதலாவது தொகுப்பு நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474565
feature content slider
Content right
.
.
.