
துருக்கிய அரசியல் களத்தில் கல்வித்துறையானது. ஒரு முக்கிய மோதல் தளமாகக் கருதப்படுகின்றது. ஏ.கே.பி கட்சியின் பிரதம மந்திரி ரஜப் தையிப் அர்துகானின் முக்கிய ஆதரவாலர்களாக இருப்போரும், கபடமாக இஸ்லாமிய பெறுமானங்களை நுழைவிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தும் மதச்சார்பற்றவாதிகளும் இத்தனத்தின் மீதே மோதிக்கொள்கின்றனர்.
மதச்சார்பற்ற சக்திகளுக்கு தீ மீது எண்ணெய் ஊற்றும் நிகழ்வாக இருந்தது, இவ்வருடம் அர்துகான் தமது முக்கிய இலக்காக குறிப்பிட்ட ”ஆன்மீக பக்குவமுடைய இளைஞர்களை உருவாக்குவது”
என்பதாகும். மட்டுமன்றி கடந்த தசாப்தம் முழுவதிலும் ஏ.கே.பி அரசாங்கம் கல்வித்திட்டத்தில் செய்து வந்த மாற்றங்கள், மார்க்கப் பாடசாலைகளது பங்கினை மேலும் வலுவூட்டியிருந்தன. மேலும், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்கு அமைய 2013-2014 ஆம் ஆண்டுகளில் அமுலில் வரும் வகையில் சாதாரண பாடசாலைகளிலும் அல்குர்ஆன் பாடங்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள் பற்றி அர்துகான் மட்ரிடில் நடைபெற்ற ஒர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிடும் போது ”நாம் அனைவருக்கும் அவரகளது விருப்புக்கு,
அவர்களது பண்பாட்டுக்கு ஏற்ப தமது பிள்ளைகளை அணிவிக்க இடமளிப்போம். இவை
அனைத்தும் பொது வேண்டுதலின் விளைவாக எடுக்கப்பட்ட படிப்படியான
மாற்றங்களாகும்.
துருக்கிய
சாதாரண வாழ்க்கையிலும் இந்த மார்க்க சார்பான நிலைப்பாடுகளுக்கும்
மதச்சார்பற்ற நிலைப்பாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகளைக் காணமுடியும். 1923
ஆம் ஆண்டு முதல் தம்மை மதச்சார்பின்மையின் பாதுகாவளர்களாக சுய நியமனம்
செய்து கொண்ட இராணுவத்தை அவரகளது அதிகாரங்களிலிருந்து குறைப்புக்களைச்
செய்ததெல்லாம் இந்த அர்துகானின் கடந்த தசாப்த ஆட்சியாகும். இதை இஸ்லாமிய
வேர் கொண்டதாக மதச்சார்பற்ற சக்திகள் வர்ணித்த போதும், அதை அர்துகான் அரசு மறுத்தே வந்துள்ளது.
இந்நிலையிலே அண்மைக்காலம் வரை இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறமுடியும் என்று நினைக்கக் கூட முடியாத,
ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் பாரியார்கள் ஹிஜாபுடன் சமூகமளித்திருக்க
இராணுவ தளபதிகள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி மாளிகையி்ல்
நடைபெற்றது.
இதேவேளை ”கம்ஹீரியாத்” என்ற மதச்சார்பற்ற பத்திரிகை இதனை ”கல்வியை இஸ்லாமியமயப்படுத்தலுக்கான முதற்படியே இது எனக் குறிப்பிட்டுள்ளது.