Wednesday, November 28, 2012
பெரியபள்ளிவாசலில் கிரகணத் தொழுகை
இன்று சந்திர கிரகரணமாகும். கிரகணத்தை முன்னிட்டு இதனால் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலிலும் விஷேட கிரகணத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நெடு நேரம் நடாத்தப்பட்ட இத்தொழுகையில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த அமைச்சருக்கான கதமுல் குர்ஆன் நிகழ்வு
மறைந்த அமைச்சர் அல் ஹாஜ் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கதமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் மாலைவட்டம் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 2012-11-29 அதிகாலை சுபஹுத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் பெருமளவானோர் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்தித்ததோடு அன்னாரின் நற்பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம்
இந்த வருடத்தின் இரண்டாவதம் இறுதியானதமான சந்திர கிரகணம் இன்று (2012-11-28) திகதி இடம்பெற்றது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படும் இவ்வரிய நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அதே போல் நிகழும்.
இவ்வாறான கிரகணமொன்று இன்று இடம்பெற்றது. அதனை இலங்கையில் சிறிதளலு காணக்கூடிய வாய்யு இருந்தது எனினும் காலநிலை மாற்றம் காரணமாக முகில்கள் சூழ்ந்த நிலையில் வானம் காணப்பட்டது. இதனால் கிரகணத்தை தெளிவாக பார்க்க கூடிய வாய்ப்பு பல இலங்கையர்களுக்கு தவறவிடப்பட்டது.

மர்ஹும் எம்.ஏ.அா்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு
சம்மாந்துறை அரசியல் சமூக வரலாற்றில் அதிககாலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மறைந்த முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு தினம் இன்றாகும் .
1926-10-15ம் திகதி அஹமது லெப்பை உடையார் முகம்மதலி , அப்துல் மஜீட் வன்னிமை கதீஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சம்மாந்துறை அரசினர் தமிழ்ப்பாடசதலையிலே ஆரம்பக் கல்விகற்ற இவர் . மட்டக்ளப்பு சிவானந்தா வித்தியாலயத்திலே தனது இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பல்கலைக்கழகம் பிரவேசித்த அன்னார் கிழக்கிலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக 1949ம் வருடம் வெளியானார்.
சம்மாந்துறை மக்களின் வாழ்வாதார, கல்வி, விவசாய, பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பட்டின சபைத் தவிசாளராகவும், தவிசாளராகவும், மாவட்ட அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவம், அமைச்சராகவும் பல்துறைகளிலும் இருந்து சமூகப்பணி செய்தார்.
சேவையின் சிகரமென புகழப்பட்ட இவர் கடந்த 2011ம் வருடம் நவம்பர் 29ம் திகதி சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் இறையடி எய்தினார்.

சம்மாந்துறையின் முதலாவது வரலாற்று ஆவணப்படம் வெளியீடு
சம்மாந்தறையின் வரலாற்றெழுதியலின் ஒரு மறுமலர்சியுகம் 2012ல் ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக சம்மாந்தறையின் வரலாற்றில் அதிகளிவான வரலாற்று தொகுப்புகள் வெளியாகியுள்ள வருடமாக 2012ம் வருடத்தைக் கொள்ளலாம்
வெண்முத்து, அறுவடை, ஈழத்தின் இன்னுமொரு மூலைக்குப் பின்னர் மீலாத் மலர், திறப்பு விழாமலர்கள் , பட்டறை வரை ஆங்காங்கே சேகரிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் 2012ம் வருடத்தில் சம்மாந்துறையின் முதலாவது வரலாற்றுத் தொகுப்பு தனி நூலாக “சம்மாந்துறை பெயர் வரலாறு“ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் “சம்மாந்துறை அரசியல் வரலாறு” எனும் நுர்ல் வெளியானது. அதன்பின்னர் பிரதேச செயலகத்தின் தகவல் களஞ்சியமான பட்டறை வெளியானது, பின்னர் சம்மாந்துறையிலுள்ள குடிகள் பற்றிய “முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை“ எனும் நூல் அண்மையில் வெளியானது.
இந்த வரிசையில் டீகே இணைய குழுமமும் இணைந்து கொள்கின்றது சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற முதலாவது ஆவணப்படத்தை கடந்த 2012-11-26ம் திகதி இமய விழாவில் வெளியிட்டு வைத்தது.

Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474568
feature content slider
Content right
.
.
.