Thursday, September 22, 2011

National ICT Software Competition


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திலான   மென் பொருள் போட்டியல் தேசிய மட்டத்தில் தெரிவு.
  A.K.F. Nusaira   13C Arts
  M.T.M Irshad     13B Arts 
 இவர்களுக்கான விருதுகள் எதிர் வரும் 21.09.2011 இலங்கை மன்றக் கல்லூரியில் வழங்கப்படவுள்ளது. இதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட அதிபர் Mr. s. Aboobucker  தகவல் தொடர்பாடல் ஆசிரியர் Mr. M.B. Haseen   மாணவர்களின் பெற்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Saturday, September 10, 2011

வெற்றிக்கு பிராத்திப்போமாக.

சம்மாந்துறை செந்நெல் சாஹிராக் கல்லூரி மாணவன் ஏ.ஆர்.றஸ்கான் இன்று தேசிய மட்டத்திலான மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்கிறார் இவரது வெற்றிக்கு  பிராத்திப்போமாக.

Friday, September 2, 2011

99 கிலோமீற்றர் காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் வழிகாட்டலில் உலக வங்கியின் 3000 மில்லியன் ரூபாய் செலவில் திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீற்றர் வரையான காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது பாதையை அழகுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன. இந்நிலையில், பாதையின் நடுவே நவீன மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்படடுள்ளன. இதன் முதற்கட்டமாக காத்தான்குடி நகரசபை பிரிவிலும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் தற்போது மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 112 வீதியோர மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகர சபைபிரிவில் 56 மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுவருகின்றன. இத்திட்டத்திற்கென வீதி அபிவிருத்தி அதிகாரசபை பல மில்லியன் ரூபாய் செலவிட்டு வருகின்றது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.