Wednesday, February 29, 2012

சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டனப் பேரணி!



இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டை கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம் இன்று புதன்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து ஹிஜ்றா சந்திவரை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹறூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட சகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது எதிப்பை தெரிவித்தனர்.

Monday, February 27, 2012

நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கும்1500வருடங்கள் பழமைவாயந்த பைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

1500வருடங்கள் பழமைவாய்ந்த இரகசியபைபிள் துருக்கியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.இந்நூலில் நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இயேசுகடவுள் அல்ல, மாறாக மனிதர் என்றே இன்ஜீல் வேதம் கருதுவதாக இஸ்லாமியநம்பிக்கை கூறுகின்றதுடன்,இப்பழமைவாய்ந்த நூலானது திருத்துவக் கொள்கையை முற்றாக நிராகரிப்பதுடன் நபி(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி இயேசு முன்னறிவிப்புசெய்வதாகவும் துருக்கியின் கலாச்சார மற்றும் உல்லாசத்துறை அமைச்சரான எட்துகுரல் குனாய் செய்தி நிறுவனமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.1500 வருடங்கள் பழமைவாய்ந்த இவ்வேதநூலானது பர்னாபஸ் கிறிஸ்தவநூலாக இருக்கும் என நம்பப்படுகின்றதுடன்,முஸ்லிம்களால் இது உண்மையான இன்ஜீல் வேதம் என நம்பப்படுகின்றது. சென்.பர்னாபஸ் சைப்ரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஸ்தகபராக பராம்பரிய முறையில் அடையாளப் படுத்தப்படுகின்றார்.விலங்குகளின் தோலில் எழுதப்பட்டுள்ள இப்பைபிள்ளானது உண்மையான பதிப்பாக இருக்க முடியமானதுடன், இஸ்லாத்தோடு இது உடன்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500வருடங்கள்
பழமைவாயந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தலைநகர் அங்காரவில் அமைந்திருக்கும் அங்காரா இனஅமைப்பியல் அருங்காட்சியகத்தில் இப்பைளிலானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன்,
இப்பழiவாய்ந்த பைபிளின் பெறுமதி 28மில்லியன்(40மில்லியன் லீரா) அமெரிக்கடொலருக்கும் அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழ் மக்களும் பங்கேற்பு!

ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் சிங்கள, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில பரவலாக நடைபெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று நிந்தவூர் சம்மாந்துறை போன்ற இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு நகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.

ஏறாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் நகர முதல்வர் அலி சாகிர் மௌலானா உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதே வேளை திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன தலைமையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற ஆர்ப்பாடத்தில் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கும் வகையிலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்நியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

சில பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்து கொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வழமைநிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது சில இடங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒமாமாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

Saturday, February 25, 2012

சம்மாந்துறை சனாதிபதி கலாச்சார விளையாட்டு மத்திய நிலையம் உத்தியோக ரீதியில் கையளிப்பு.

நீண்ட காலமாக கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சின் நிர்வாகத்தின்; கீழ் இருந்த சம்மாந்துறை சனாதிபதி கலாச்சார விளையாட்டு மத்திய நிலையம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் வேண்டுகோளுக்கமையஇ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கினங்கஇ விளைட்டு அமைச்சரினால் உத்தியோக ப+ர்வமாக கையளிக்கப்பட்து.

Friday, February 24, 2012

பிரதான பாதை திடீர் என வெடிப்புகுள்ளாகியது


சம்மாந்துறையில் பதுர் ஜும்மா பள்ளிவாசள் அறுகாமையில் பிரதான பாதை ஒன்று திடீர் என உடைவுக்குட்பட்டுள்ளது .                                          

Wednesday, February 22, 2012

அரசின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டம்


அரசாங்கத்தின் எரிபொருள் மாணியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள வருமானம் குறைந்த மண்ணெண்னை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு  மாணிய அட்டை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர்,முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.தம்பிக்கண்டு, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்திஅத்தியோகத்தர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1700க்கு அதிகமான குடும்பங்களுக்கு மண்ணெண்னை எரிபொருள் மாணியம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.metromirror.lk (pohoto)

Tuesday, February 21, 2012

சம்மாந்துறை VTC யில் புதிய COURSE ஆரம்பம்

சம்மாந்துறை VTC  இல் BAKER எனும் COURSE ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளது தற்போது அத்ற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்(மட்டுப்படுத்த்ப்பட்ட மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்)
                                                                      
தகமை -தரம் 9 வரை கல்வி கற்றிறுந்தால் போதும்.

பதிவுகள் முடிவுத்திகதி  2012/02/27

தொடர்புகளுக்கு -075238444

இப்பயிற்ச்சி நெறி HOTEL MANAGMENT இன் அடிப்படை என்பதும் குறிப்பிடதக்கது.

Sunday, February 19, 2012

கடந்தவருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் கவனத்திற்கு..!


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் அம் முடிவுகளை பெறும்வரை காலதாமதம் செய்யாது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மீள் திருத்தத்தின் மூலமாக மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், அம் மாணவரது விருப்பத்தின் படி பாடநெறி தெரிவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2012ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. 

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் மேலும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 40,000இற்கும் அதிகமான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது. 

விண்ணப்ப படிவங்களை நிரப்புவதில் தெளிவின்மை காணப்படுமாயின் மாணவர்கள் எந்தவொரு பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்கலைப் பெறமுடியும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !

நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம்  -

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானத்து உள்ளது.

ஆதற்கமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது.

25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். news.lk

வடக்கு கிழக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டம்.

நவடக்கு - கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கிடையிலான கிராமிய சிறு நகர அபிவிருத்தி முனைப்பு எனும் தொனிப் பொருளின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லரிச்சல் 1ம்ää2ம் வீதிக்கான கொங்ரீட் பாதையும் வடிகான் அமைப்பத் திட்டத்தம் அன்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக ரூபா: 1.5மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் பிரதேச சபை தவிசாளர்: ஏ.எம்.எம். நௌஷாத் அவர்களின் தலையில் இடம் பெற்றது. இதில் உதவிஉள்ளுராட்சி ஆனையாளர்: ஏ.ஜே.எம். இர்ஷாத் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
 kiyas jee

Saturday, February 18, 2012

பால்மா விலை அதிகரிக்கும் வாய்ப்பு

பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் பால்மா விநியோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.
இந்த அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக நாமங்கள் கொண்ட பால்மாவை விநியோகிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி, உற்பத்தி, விநியோக செலவுகளை காரணம் காட்டி, விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று தெரிவித்தது.
விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால் தமது தொழிற்துறை நெருக்கடியை எதிர்நோக்கும் எனத் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அவகாசத்தையும் இந்நிறுவனங்கள் கோரியுள்ளன்.
2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூபாவின் மதிப்பை 3 சதவீதத்தால் குறைத்தமையானது, பால்மா இறக்குமதியில்  எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சியடைந்தமை இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Wednesday, February 15, 2012

வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா

வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார். எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய அதிபர் டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் ராணுவ விமான தளத்தில் மூன்றுமுறை சந்தித்தனர் என கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார். வேற்று கிரக மனிதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனிதர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த தகவல் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் குட் இன் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன்மூலம் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
srilankamirror.com

மின்சாரப் பட்டியலுக்கு மேலதிக எரிபொருள் கட்டணம் அறவீடு


எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் எரிபொருளுக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்படுகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி வீடுகளுக்கான மின் பாவனையில் 1 – 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 – 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் வீடுகளில் மேலதிக எரிபொருள் கட்டணமாக அறவிடப்படவுள்ளது.  இதேவேளை, கைத்தொழில் துறைக்கு 15 சதவீத மேலதிக கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகளுக்கான ஆணைக்குழு கூறியுள்ளது        tamilmirror.lk

Monday, February 13, 2012

மாபெரும் எழுச்சிச் சூறாவளி!...எதிர்பாருங்கள்!..

பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய  அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார்.‘மார்க்சிஸமும், முதலாளித்துவமும் மனித வரலாற்றில் மிகவும் சர்வாதிகார தன்மைகொண்ட ஆட்சி முறைகளாகும். மார்க்ஸிசம் முடிந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடித்தளம் ஆட்டம் காணும் சப்தம் உலகம் முழுவதும் கேட்கிறது’ – எனவும் நஜாத் கூறினார்.

அணுசக்தி தொடர்பாக ஈரான் எடுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை காணப்போகிறீர்கள் என்று கூறிய அவர் மேலை நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடி பணியாது   மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – அமெரிக்காவின் அச்சுறுத்தல் செல்லாக்காசு விவகாரம் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் அவர் கூறும்போது பொருளாதார தடைகளை விதித்து, தாக்குதல் அச்சுறுத்தல்களை காட்டி மேலை நாடுகள் நாடகமாடுகின்றன. ஒரு பக்க நீதிக்கே எல்லோரும் தலை சாய்க்க வேண்டுமென கருதுகிறார்கள். ஆனால் அணு சக்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதை மதித்து நடக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதைவிடுத்து பயமுறுத்தலில் குதிக்கக் கூடாது.

மேலை நாடுகள் உலகத்தை காலனித்துவ நாடுகளாக வைத்திருக்க விரும்புகின்றன. இஸ்ரேலிய மோசாட்டுடன் சேர்ந்து சுதந்திரமற்ற உலகத்தை உருவாக்க இவர்கள் ஆசைப்படுகிறார்கள். அது வெறும் பகல் கனவாகும் . மானிடப் படுகொலைகளை செய்யும் மேலை நாடுகளிடமிருந்து உலகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நவீன ஈரானுக்கு இருக்கிறதென்று ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசும்போது அவர் தெரிவித்தார். 
 qahtaninfo.blogspot.com

ஐந்து பிரி வினருக்கு எரிபொருள் மானியம் !

மக்கள் மீதான சுமையை குறைக்க விசேட நடவடிக்கை  -
எரிபொருள் விலையேற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க ஐந்து பிரிவினருக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தனியார் பஸ் உரிமையாளர்கள்  பாடசாலை  வேன் உரிமையாளர்கள்  முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்  கடற்றொழிலாளர்கள்  மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணையை பாவிக்கின்ற சமுர்த்தி உதவி பெறுபவர்கள் ஆகிய ஐந்து பிரி வினருக்கும் இந்த முறை மூலம் மானியம் வழங்கப்படவிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று (13ம் திகதி) முதல் முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை மறுசீரமைப்பு காரணமாகப் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீண்ட மற்றும் குறுகிய தூரபயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளின் விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்விபரங்களை இன்று 13ம் திகதி எமக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அந்த விபரம் கிடைக்கப்பெற்றதும் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பஸ் உரிமை யாளர்களின் வங்கிக் கணக்கு முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  NWES.LK

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார்.  இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும்.  இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம்  என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம்  ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.

சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும்.  அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Saturday, February 11, 2012

ஈரான் மீது பொருளாதாரத் தடை, இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்துள்ளதன் காரணமாகவே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இதன்படிஇன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை 70 சதவீதமான மசகு எண்ணெய்யை ஈரானிலிருந்தே இறக்குமதி செய்கின்றது. இதற்கு ஈரான் அரசு மூன்று மாதகால கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீளமைப்பு செய்யப்படவுள்ளபோதும் தனியார் பொதுப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறையினருக்கு விலை நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.    meelparvai

Friday, February 10, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் மீலாத்துன் நபி விழா 2012







சம்மாந்துறை தேசிய பாடசாலையில் மீலாத்துன் நபி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் விழிமியக்கல்வி மற்றும் சமைய விவகார பிரிவின் கல்விப்பணிப்பாளர் A.M Ahamedஅவர்களும் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர்M.K.M Mansoor அவர்களும் சிறப்புசொற்பெளிவாளராக சிறுவர் நன்னடத்தை அதிகாரி மௌலவி  N.G.M Kamal அவர்களும் சிறப்பித்தனர் தலைமை அதிபர் அல்ஹாஐ;S.Aboobucker

Thursday, February 9, 2012

இயற்கையோடு இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு

சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு இயற்கை எழில் கொஞ்ச சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இடம்பெற்றது.
                 இதன் போது செய்தி ஊடகச் செயலாளராக கலைஞர் யு.று.ஆ.ஹிஷாம் நியமிக்கப்பட்டார் மேலும் சம்மாந்துறை எனும்; பெயர் வந்த வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அது ஆவணமாக்கப்படல் வேண்டும் என்றும் வாழும் கலை இலக்கிய வட்டத்தால் முடிவெடுக்கப்பட்டது.

Wednesday, February 8, 2012

சம்மாந்துறை வலய சத்துணவுத்திட்ட ஆரம்ப வைபவம்

மஹிந்த சிந்தனையின் கீழ் கல்வியமைச்சு பாடசாலை மாணவர்களுக்கு தேசிய சத்துணவுத்திட்டத்தை திங்களன்று ஆரம்பித்துவைத்தது.;சம்மாந்துறை வலயத்திற்கான பிரதான வைபவம் சம்மாந்துறை மபாஸா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம். மன்சூர்

தலைமையில் நடைபெற்றபோது பிரமத அதிதியாகக்க கலந்துகொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தேசியக்கொடி ஏற்றிவைத்து நிகழ்வில் ப ங்கேற்பதையும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்பதையும் படங்களில் காணலாம்       battinews



Sunday, February 5, 2012

வாழும் கலை இலக்கிய வட்டத்தின் 64வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தின வாழ்த்துக்களை இலங்கையர் அனைவருக்கம் தெரிவிப்பதில் 
வாழும் கலை இலக்கிய வட்டம் பெருமகிழ்சிசியடைகிறது.
கடந்த 1948-02-04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்றது.
பெறப்பட்ட சுதந்திரத்தின் மூலம் நாட்டினது அபிவிருத்திக்கும், இன நல்லுறவுக்கும், நாட்டின் வளங்களைப் பேணவும் வழி செய்வதுடன்
புரிந்துணர்வுடனான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவவும் அனைவரும் உறுதி கொள்வோமாக.

Saturday, February 4, 2012

64வது சுதந்திர தின வாழ்த்துக்கள்


சம்மாந்துறையில் 64வது சுதந்திரதின கொண்டாட்டம்


இன்று இலங்கை ஜனநாயக சேஷலிச குடியரசின் 64வது சுதந்நிர தின வைபவம் மிகவூம் விமர்சையாக சம்மாந்துறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது சம்மாந்துறையின் மத்திய மையம் என குறிப்பிடப்படும் ஹிஜ்ரா  சந்தியில் சந்தைக் கட்டிட தொகுதியின் மேல் மாடியில் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் தேசியகொடி ஏற்றியபின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது அதனையடுத்து சமய அனுஷ்டானமும், அதிதிகள் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் உட்பட இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வவுகளை YN Travers  நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

Thursday, February 2, 2012

CSS அமைப்பின் www.sammanthurai.tk இற்கு சிறப்பு சான்றிதழ்.

சென்ற வருடம் (2011) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட மேம்பாட்டிற்கான கட்டுரைஇ கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள்இ சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வூ 2012.01.27ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகவூம் விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2011.ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நூல் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள்இ பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் சிறந்த கலையகமாக இயங்கிய CSS அமைப்பின்  www.sammanthurai.tk  இற்கு சான்றிதலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சம்மாந்துறை MECSO அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் MECSO  அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் 29.01.2012 அன்று நடைபெற்றது.

கண்களில் வெண்படலம் உள்ளவர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை மற்றும் கண்வில்லைகள் பொருத்தக் கூடியவர்களை இனங்காண்பதற்கான முன்னோடி பிராந்திய நடவடிக்கையாகவே சம்மாந்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

இதேவேளைஇ சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினாலும்  இலங்கை ஜம்யஜயதுல் ஷபாப் அமைப்பின் ஏற்பாட்டிலும்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.  எதிர்வரும் பெப்ரவரி  முதலாம்  திகதி தொடக்கம் 05ஆம் திகதிவரை இவ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

கனரக இயந்திரம் தடம்புரழ்வு


இன்று சம்மாந்துறை ஆண்டியடி  சந்தியில்  பாரிய கனரக இயந்திரம் (கௌன்டி) ஒன்று தடம்புரண்டு விழுந்துள்ளது. இதன் காரணமாக மின்சார ஒழுக்குகளில் சேதமும் ஏற்படடுள்ளது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.