
சம்மாந்துறை வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 110 மாணவரளுக்கு பிறை எப்.எம் வானொலியானது பரிசில் வழங்கி கெளரவித்தது. இவ்விழாவில் பிரதம அதிதியாக மாண்புமிகு அமைச்சர் கெளரவ ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும், கெளரவ அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹத்சன் சமரசிங்க மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இவ்விழாவனது அக்கரைப்பற்று மண்ணில் உள்ள அதாவுல்லா அரங்கத்தில் விழாக் கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.