நேற்று அதிகாலை சம்மாந்துறையில் 19கிலோ கிராம் கஞ்சா பொதிகளுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினை அடுத்து பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினை அடுத்து இவ்வாகனம் மல்வத்தையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகளை காரின் முன் பொனட்டில் பெருத்தப்பட்டுள்ள லைட் கோப்பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், பெருங்குற்றவியல் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம், பொலிஸ் பரிசோதகர் குமாரகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிடுவதையும் இங்கு காணலாம். metromirro