Friday, December 31, 2010

எமது இணையத்தளத்தில் நாம் நேற்று இட்ட செய்தியில் ஏற்பட்ட வசனப் பிழையையும் நிருபர்கள் கொப்பி எடுப்பது என்பது தவறே என மன்னிப்புக் கோறுகிறோம்

எமது இணையத்தளத்தில் நாம் நேற்று இட்ட செய்தியில் ஏற்பட்ட வசனப் பிழையையும் நிருபர்கள் கொப்பி எடுப்பது எமது தவறே என மன்னிப்புக் கோறுகிறோம். மற்றும் நாம் எவ்வாறு அணுக வேண்டும் எனவும் பல ஆலோசனையும் ஊக்கமும் வழங்கிய ஊடகவியலாளர் றியாஸ் அவர்களுக்கு எமது இணையக்குழு சார்பாக நன்றி செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறான கருத்துக்கள் சரியோ/தவறோ எம்மை வளர்ப்பதற்காக கை கொடுக்க வேணும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது இணையத்தளம் கடந்து வந்த 2010ம் ஆண்டின் பாதை

2010 ஆகஸ்ட் 31ம் திகதி க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் முடிவுடன் உருவானது இவ்விணையம். இதற்கு வித்திட்டனர் பர்ஹான் மற்றும் பிறோஸ். எமது ஊருக்கான பல நாள் எட்டாக் கனியாகவே இருந்த ஊர்ச் செய்திகளைக் காவும் ஓர் ஊடகம் அது நனவாகியது எமது துடிப்பான இணையச் சமூகமான தில்ஸாத்,றிபாஸ் ,இஹ்ஸான்,ஆசிக் ஆகியோரின் ஆரம்ப இயக்கத்தினால் பின் SYDAஅமைப்பின் அனுசரனையுடன் நிப்றாஸ் மற்றும் தன்வீர் போன்றோர் எமது எழுத்தாளர் குழுக்கு வலுச் சேர்த்தனர்.. எமக்கு அக்கால கட்டத்தில் ஊடகம் பற்றிய அறிவோ, அனுபவமோ கிடையாது எமக்கு என ஒரு ஊடகப் பாணி உருவாக்கப்பட்டு 37 வாசகருடன் முதல் நாள் ஊடக பிரவேசம் உலக வலைத் தளத்திற்கு அரங்கேறியது. அடிப்படை வளம் கூட இல்லாமல் உருவான எமது இணையம் புகைப்படம் எடுப்பதற்கு ஒரு கமெரா இன்றி வாடகைக்கு ஒரு கைத்தொலைபேசியுடன் காலை சென்று மாலை திரும்பும் ஊர் சுற்றியாக வலம் வந்தோம். புகைப்படம் எடுப்பதற்காக வீதி வீதியாக நாம் சென்று அனுமதி கேட்டால் எமக்கு கிடைக்கும் பதில்கள் இல்லை மற்றும் அவமானம், பெண்களை புகைப்படம் எடுக்க வந்தவர்கள், வேலையற்றவகள். பொதுச் சேவை என்று வந்தால் இவை தூசுகளே தட்டி விட்டே சென்றோம். பின் ஏதோ சில நல்லுள்ளம் மற்றும் ஒரு தனிப்பட்ட நபரான மாஹிர் என்ற சகோதரரின் முழுமையான ஆதரவும் வழிகாட்டலுமே எம்மை இவ்விடத்திற்கு அதாவது 45000 வாசகர்களை எட்ட வைத்துள்ளது வெறும் 4 மாத காலத்தினுள்.


இவ்வாறு எமது இணையத்தளம் போடும் நடையில் சோதனை நிறைந்ததும் வெற்றி போடும் காலமும் இதுவே. இக்கால கட்டத்தில் எமது கசப்பான நினைவுகளாக பெயர்ப்பலகை கிழிக்கப்பட்டது, வதந்திகள் பரப்பப் பட்டமை எம்மை அவமானப்படுத்தியமை இன்னும் பல, வெற்றிகளாக இணையப் பெயர்ப்பலகை இட்டமை , புதிய சரித்திரம் படைத்தமை சம்மாந்துறை மண்ணுக்கு, 45000 வசகர்கள் இன்னும் பல இவ்வறு எமது இணையத்தளம் இவ்வாண்டில் பல முட்கள் நிறைந்த வெற்றிப் பாதயைக் கடந்துள்ளது. மலர்ந்துள்ள இவ்வாண்டிலும் 2011 இல் பல சாதனை படைப்போம் என்ற நம்பிகையோடு களமிறங்குகிறோம்.

HEAPI TECH நிறுவனத்தாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மலர இருக்கும் 2011ம் ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக மலர்ந்து அனைவரதும் வாழ்விழும் இருள் விலக்கும் ஆண்டாக மாற HEAPI TECH   நிறுவனப் பணிப்பாளர் யூ.என்.நவாஸ் (நெளசாட்) அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். மேலும் 2011ம் ஆண்டிற்காக புதிய  வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்புகளுக்கு 077 2071606                                                          

Thursday, December 30, 2010

ஏ.ஏச்1.என்1 பன்றிக்காச்சல் நோய் தடுப்பு மருந்து சம்மாந்துறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் சம்மாந்துறை  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்காரணியான ஏ.எச்1.என்1 வைரஸ் தொற்றுநோய் நாட்டில் தீவிரமடைந்ததையடுத்து நாடளாவிய ரீதியில் நோய்த்தொற்றினைத்தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. இதற்கு தேவையான மருந்து வகைகள் சுகாதார அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதற்கட்டமாக அரசசேவை அலுவலகங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பாடசாலை மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து பத்துவயதிற்கு மேற்பட்டோர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் இதயவருத்தம் மற்றும் உள்ளவர்களுக்கு  இத்தடுப்பு மருந்து வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையினால் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கும் அபாயம்

வடகீழ் பருவப்பெயர்சிசி மழையால் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த பிரதேசங்களில் குடியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமாக சுனாமி யுத்தகாரனமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மீண்டும் உறவினர்களின் வீடுகளில் தஞசமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாததிலும் ஏற்கனவே தாழ்ந்த பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் மணல் நிரப்பி காரியாலயங்களும் வீடுகளும், வயல் நிலங்களுமாக மாற்றம் செய்யப்பட்டதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. மழையோடு கடல் கொந்தழிப்புமாக இருப்பதனால் கடந்த சில தினங்களாக ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நன்னீர் நிலயங்களில் சல்பீனியா பூண்டுகள் படர்ந்துள்ளமையால் நன்னீர் மீணவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருவாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்துகளின் திரும்வெம்பாவை ஊர்வலம் நத்தார் சுரேல் கீதம் போன்ற நிகழ்வுகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிரதான வீதிகளில் அமைக்கப்படும் பாலங்களில் திருத்த வேலைகள் நிருத்தப்பட்டதால் சில இடங்களில் போக்கவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மலை நாட்டுப்பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த காய்கறிகளும் மழையினால் வராததால் மக்களின் அன்றாட வேளை உணவுக்காக காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அரிசி,தேங்காய்,கருவாடு போன்ற அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை வாசியும் உயர்ந்துள்ளதால் மேலும் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
(மீநோடைக்கட்டு நிருபர்: ஏ.எல்.எச்.முகம்மட்)
வடகீழ் பருவப்பெயர்சிசி மழையால் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த பிரதேசங்களில் குடியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமாக சுனாமி யுத்தகாரனமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மீண்டும் உறவினர்களின் வீடுகளில் தஞசமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாததிலும் ஏற்கனவே தாழ்ந்த பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் மணல் நிரப்பி காரியாலயங்களும் வீடுகளும், வயல் நிலங்களுமாக மாற்றம் செய்யப்பட்டதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. மழையோடு கடல் கொந்தழிப்புமாக இருப்பதனால் கடந்த சில தினங்களாக ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நன்னீர் நிலயங்களில் சல்பீனியா பூண்டுகள் படர்ந்துள்ளமையால் நன்னீர் மீணவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருவாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இந்துகளின் திரும்வெம்பாவை ஊர்வலம் நத்தார் சுரேல் கீதம் போன்ற நிகழ்வுகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிரதான வீதிகளில் அமைக்கப்படும் பாலங்களில் திருத்த வேலைகள் நிருத்தப்பட்டதால் சில இடங்களில் போக்கவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மலை நாட்டுப்பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த காய்கறிகளும் மழையினால் வராததால் மக்களின் அன்றாட வேளை உணவுக்காக காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அரிசி,தேங்காய்,கருவாடு போன்ற அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை வாசியும் உயர்ந்துள்ளதால் மேலும் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Monday, December 27, 2010

விளினையடிச் சந்தியில் வீட்டு சுவர் விழுந்ததில் ஒரு சிறுவன் பலி மூன்று பேர் காயம்.





சம்மாந்துறை விளினையடிச் சந்தியில் இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக வீட்டு மதில் விழுந்து வீட்டு சுவர் விழுந்ததன் காரணமாக 12 வயது சிறுவன் றிப்கான் ஸ்தலத்திலேயே மரணமானார். அத்துடன் வீட்டிலிருந்த மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Sunday, December 26, 2010

சகல நீதிமன்றங்களையும் கணினி மயப்படுத்தி வழக்குகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை

நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களும் கணினிமயப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகளை மிகத் துரிதமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சட்ட உதவி மன்றமும், அம்பாறை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மனித உரிமைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறியானி விஜயவிக்ரம தலைமையில் வியாழக்கிழமை அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்; நாட்டில் நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள முயற்சியில் நாட்டில் யுத்தமொன்று இல்லாத காலத்தில் நீதியமைச்சின் பொறுப்பினை எமக்கு வழங்கியுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இந்த அமைச்சினூடாக நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த பணிகளை மேற்கொள்வதற்கு நீதித்துறையில் நன்மை மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளேன்.
10 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிப்பதற்கென ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவினை அமைத்து அதன் விசாரணை நடவடிக்கைகளை 2 வருடங்களுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென வரவு செலவுத் திட்டத்தில் 400 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் இதனை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கை காலப்பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுகளில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்களில் நானும், ஒருவன். ஆனால், விடுதலைப் புலிகளுக்கு சமாதானப் பேச்சுகளிலும் அரசியல் தீர்விலும் நாட்டமிருக்கவில்லை. மாறாக புலிகள் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளவே செயற்பட்டனர். புலிகளை ஒழித்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியை நாட்டுமக்கள் அங்கீகரித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய நீதித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் என அவர் மேலும் தெரிவித்தார்

Saturday, December 25, 2010

சுனாமி தந்த வடுக்கள் எம்மை விட்டு இன்னும் அகலவில்லை…(சுனாமி நினைவுக் கவிதை)

காசு பணம் வந்த போதும்
காத்திருந்து பெற்ற கிழி
காணாமல் போன சோகமென்ன – ரதியே
காலங்கள் மறக்குமோ – ஓடிய கால்கள் மறுக்குமோ
விழிகள் உறங்காமல்
விழத்திருந்த அந்த இரவுகள்
விசைப்பலகையில் தட்டும் போதும் கனக்கிறது………
விடுகதையாய்ப்போன எங்கள் – உறவுகள்
கடல் வருகுது …. கடல் வருகுது என்ற
கூக்குரல் கேட்டதும்
குடிசைக்குள் இருந்தவளை
கூட்டப் போகலாமென நினைத்தேன்
கூச்சலிட்ட – அவள்
குரலைத்தான் கேட்டேன்……..
வேறன்ன சொல்லுவது
வயிற்றாற்ற போகும் – கடல்தாய்
அது வயிற்றாற்ற நினைத்துவிட்டாள்
வெந்துபோன என்- மனம்
அன்றய வடுக்களை இன்னும்
மறக்கவில்லை………
பிற்பட்ட காலத்தில்
பிஸாஸூகள் போல வந்த – என்ஜிஓஸ்
பிதற்றிவிட்ட பணத்தாசையால் – என்
பாசக் குடும்பத்தையும் – இழந்துவிட்டேன்
வடுக்கள் மாத்திரமல்ல
வஞ்கமான என்- நெஞ்சமும்
வகை சொல்ல காத்திருக்கிறது.
(இது விடுகதையாய்ப் போகாதே)
டிசம்மபரில்
பட்ட துன்பம் -
எத்தனை டாட் கொம் இல்
எழுதினாலும் தீராது…..
சுனாமியின் வடுக்களை தாங்கி……
(மீட்டிப்பார்க்கும் என் அனுபவம் – கவிதை வடிவில்)

Friday, December 24, 2010

இன்புளுவென்ஸா தீவிரம்: இரு வாரத்தில் 18 பேர் பலி


நாடெங்கிலும் புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1. என்1) வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதால் கடந்த இரு வார காலப் பகுதியில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சின் நோய் பரவல் தடுப்பு பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுதத் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருப்பவர்களில் பெரும் பகுதியினர் இளம் வயதினர். அதனால் எவருக்காவது தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதுடன், மூச்செடுப்பதிலும் சிரமம் காணப்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புதிய இன்புளுவென்ஸா ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ளது. இக் காய்ச்சலுக்கு குறுகிய காலத்தில் 308 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சலுக்குக் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் உள்ளாகியுள்ளனர்.
தடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவாறான குணாம்சங்களை கொண்டிருப்பவர்கள் அலுவலகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் செல்லுவதையும், பயணிகள் போக்குவரத்தைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுவதுடன் வீடுகளிலேயே ஓய்வாக இருக்க வேண்டும்.
புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது. அதனால் இருமும்போது இவ்வைரஸ்கள் சளித் துகள்கள் ஊடாக வெளிப்படும். அதன் காரணத்தினால் இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளைப் பாவிப்பதும் கைகளைச் சவர்க்கார மிட்டுக் கழுவுவதும் மிக மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம் நீரிழிவு நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், நாட்பட்ட சுவாசத் தொகுதி நோயாளர்கள், இருதய நோயாளர்கள் உட்பட நோய்த் தொற்றுக்குரிய அச்சுறுத்தல் மிக்கவர்கள் தாமதியாது இந்நோய்க்குரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சம்மாந்துறை றம்ஸியா பகல் பராமரிப்பு இல்லத்தில் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும், கலைநிகழ்வும்




சம்மாந்துறை றம்ஸியா பகல் பராமரிப்பு இல்லத்தில் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும், கலைநிகழ்வும் 2010.12.20 பிற்பகல் 3.00 மணியளவில் சம்மாந்துறை அல்-அர்சத் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி கே. உதுமாலெவ்வை அவர்களும் கௌரவ அதிதியாக இஸ்மாயில் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம். சலீம் அவர்களும், சிறப்பு அதிதியாக தமிழ் பாடத்துறைப்புகழ் திருமதி. நபீதா கால்டீன் ஆசிரியையும், ஊடகவியலாளர் தேசமான்ய ஜலீல் ஜீயும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வை ரம்ஸியா பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான எஸ்.எல். சித்தி பரீதா எஸ்.எல். சித்தி ஜனூஸா மற்றும் ஏ.பி. பாத்திமா அன்பியா ஆகியோர் மிகச்சிறப்பாக வழிநடாத்தினர். மேடையில் தமிழ் மொழி அறிவிப்பினை பிறை எப் எம் புகழ் கே.எம்.எம். ஜவாத் மற்றும் ஆங்கில மொழியில் எல்லோரையும் கவரும் வகையில் எஸ்.எல். பாத்திமா றுஸானா நிகழ்ச்சிகளைத் சிறப்பாகத் தொகுத்து வழங்கியமை சிறப்பம்சமாகும்.

Thursday, December 23, 2010

சம்மாந்துறை இணையத்தளம் மூடப்பட்டதாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானதே

தற்பொழுது எமது ஊரில் சம்மாந்துறை இணையத்தளம் மூடப்பட்டதாக சில வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். இவ்வாறு எமக்கு எதிராக பல தடைக்கற்கள் வீசப்பட்டாலும் அதை தகர்த்தெரிய நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். எமது இணையத்தளமானது மும்முறமாகவே ஈடுபடுகின்றது என இத்தாழ் வாசகர்கர்களுக்கு தெரியப்படுத்திகிறோம்.
                                                                       

Wednesday, December 22, 2010

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

  •  இந்த கல்வி ஆண்டில் 22,500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ள திட்டம்

  • முதல் தடவையாக விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி ஆகிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க கூறினார்.
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தகுதியுள்ள மாணவர்கள் மூன்று வாரங்களுக்குள் தமது விண்ணப்பங்களை முன்வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்கள் ஜனவரி 14 வரை ஏற்கப்பட உள்ளதோடு மாணவர்கள் கூடுதலான பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். இம்முறை முதல் தடவையாக விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி ஆகிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு இவை 2 பல்கலைக்கழகங்களில் மாத்திரமே நடத்தப்பட உள்ளன.
இதற்கு 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவு ள்ளனர். இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 22,500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுத் தலைவர் கூறினார்.

முஸ்லிம்களும் அழகியற் கலைகளும்

மனிதன் அறிவும் உணர்வு களும் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும் உணர்வு களின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெறலாயின.
கலையானது காலத்தால் வென்று வாழும் காவியமாக கவினுறு கட்டடமாக பேசும் பொற்சிலையாக இதயத்தைக் கொள்ளை கொள்ளும் இன்னி சையாக உயிர்த்துடிப்புள்ள ஓவியமாக பல்வேறு வடிவங் களில் பரிணமிக்கலாம்.
உலக வரலாற்றிலே விந்தை கள் பல புரிந்த கிரேக்கர், உரோமர், சீனர், இந்தியர், பண்டை எகிப்தியர் போன்று முஸ்லிம்களும் கலைத்துறையிலே தமது முத்திரையைப் பதித்து தமக்கென நிலையான ஓரிடத்தைப் பெற்றிருக்கின்றனர். பண்டைய கலைகள் பலவற்றுக்கு அவர்கள் புதுமெருகூட்டினர். புதிய கலைகளை உலகிற்கு அளித்தனர்.
இஸ்லாம் மனித மிருக உருவங்களை வரைவதை வரவேற்காமையாலும் சிலைகளாக வடிப்பதைத் தடைசெய்வதனாலும் முஸ்லிம்கள் அதிக அளவிற்கு அரபு எழுத்தணிக் கலையிலும், அலங்கார வேலைப்பாட்டுக் கலையிலும், அழகிய கட்டடங்களை அமைப்பதிலும் பிற நுண் கலைகளிலும் தமது கவனத்தைச் செலுத்தலாயினர். இஸ்லாம் சில வரையறைகளோடு அங்கீகரித்த ஓவியம் இசைபோன்ற கலைகள் அவ்வரையறைகளையும் தாண்டி வளர்ச்சியடைந்ததைக் கண முடிகின்றது-
அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான் என்னும் ஹதீஸ் கவின்கலை பற்றிய இஸ்லாமிய எண்ணக் கருவுக்கு ஆதாரமாக விளங்குகின்றது.
மக்கா வெற்றியைத் தொடர்ந்து முகம்மது நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி கஃபாவில் இருந்த சிலைகளும், வரைந்திருந்த அலங்காரங்களும் அழிக்கப்பட்டன. ஏக தெய்வக் கொள்கையை நிலை நிறுத்தும் இஸ்லாம் ஓவியத்தையும், சிற்பக் கலையையும் முற்று முழுதாக நிரந்தரமாகத் தடைசெய்தது.
இஸ்லாமிய கலாசாரம் மானிட வாழ்வின் துணைப் பொருள்களை அழகுபடுத்துவதையோ தூய்மையாக்குவதையோ நோக்கமாகக்கொண்டதல்ல. மனித வாழ்வை அழகுபடுத்துவதையும் உயர்த்துவதையுமே இலக்காகக் கொண்டதாகும் என்று பிக்தால் என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார்.
இதனால் கருத்துப் பொருட்கலை வடிவங்களில் ஈடுபடலாயினர். பேராசிரியர் இஸ்தியாக் ஹுஸைன் குறைஷி கூறுவது போல ‘வேறெந்தக் கலையையும் விடப் பூரணத்துவமும் முழுமையும் வாய்ந்த கருத்துப் பெருட் கலையாக அரபு எழுத்தாணிக் கலை இருந்தமையால் முஸ்லிம்கள் தமது கலை வெளிப்பாட்டு வடிவின் அடிப்படை ஊடகமாக அதனைத் தெரிந்தெடுத்தனர்.
அலங்கார வேலைப்பாடு களுக்காக அரபு எழுத்துக்களைப் பயன்படுத்துவதே அரபெஸ்க் என வழங்கப்படுகின்றது. கேத்திர கணித அடிப்படையில் அமைந்த கோடுகள், மலர்கள் பழங்கள் என்பனவும் அரபெஸ்க் அலங்கார வேலைப்பாடுகளுக்காகக் கையாளப்படுகின்றன. மஸ்ஜிதுகள், மாளிகைகள், பொது மண்டபங்கள், மினராக்கள், களியலறைகள் போன்றவற்றை அழகுபடுத்தவும் இவ்வலங்கார முறைகள் கையாளப்பட்டன. அந்த லூசியாவிலுள்ள அல் ஹம்ரா மாளிகை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
அரபு எழுத்தணிக் கலை
அரபு எழுத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும். அல்குர் ஆனினாலும் ஸ¤ன்னாவினா லும் தூண்டப்பட்ட ஒரு கலையாகவும் இது விளங்குகின்றது.
மெஸபதோமியாவிலிருந்த குறைஷியர்களால் கைக்கொள்ளப்பட்ட கூபி என்னும் எழுத்து வடிவமே உமையாக்கள் அப்பாஸியர் காலப் பிரிவு வரை பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்து முறையைப் பின்பற்றியே இவ்விரு காலப் பிரிவுகளிலும் முஸ்ஹப்புகளும், மார்க்க நூல்களும் எழுதப்பட்டன.
மனிதன் பெற்றுள்ள அழகுணர்வே அழகுக் கலைகளுக்கு அடிப்படையாகும். அவ்வழகுக் கலைகளில் சிற்பக் கலையை இஸ்லாம் முற்றாகத் தடை செய்கிறது. ஓவியம் இசை ஆகியவைகளின் வெளிப்பாட்டு எல்லைகளை வரையறை செய்கின்றது.
கட்டடக் கலையானது கலாசாரச் செல்வாக்குகளினூடாகத் தோன்றி வளர்ந்து இஸ்லாமியக் கட்டடக் கலை’ என்ற கலை மரபொன்றின் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. இக் கலைகள் உமையாக்கள், அப்பாஸியாக்கள் காலங்களில் மட்டுமன்றி ஸெல்ஜுக்கியர் மொங்கோலியர் உதுமானியர், மொகலாயர் காலங்களிலும் போற்றி வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
இந்தியா, ஈரான், எகிப்து முஸ்லிம் ஸ்பெயின், வட ஆபிரிக்கா, துருக்கி, சிரியா என்பன இக்கலைகள் வளர்க்கப்பட்ட பிரதான நாடுகளாகும். ஓவியம், எழுத்தணி, கட்டடக் கலை என்பன கால, சூழல் தேவைகளின் அடிப்படையில் புதுபுது மாறுதல்களுடன் இன்றும் வளர்ந்தும் வளர்க்கப்பட்டும் வருகின்றன

Monday, December 20, 2010

சம்மாந்துறை ரைட் வே நேசரியின் 3ம் வருட கலைக் கலாசார விழா


சம்மாந்துறை பிரதேசத்தில் முன்பள்ளிகளுக்கு என தமக்கு என தடப் பதிவை உருவாக்கிய முன்பள்ளிப் பாடசாலைகளில் ஒன்றான ரைட்-வே இன் 3ம் வருட விழாவானது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அப்துல் மஜீட் மண்டபத்திலே விழாக்கோலம் பூண்டது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் டீ.ஏ அவர்களும் மற்றும் பேற்றோர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை அலங்கரித்தனர். மேலும் இவ்விழாவில் சிறார்களின் திறமைகளின் வேலிப்பாடு அதியுயர் மட்டத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 19, 2010

பல்வேறு சவால்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் மீண்டும் சம்மாந்துறை இணையத்தளம்.


பல்வேறு சவால்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் சம்மாந்துறை இணையத்தளமானது தமது சேவையை இன்றிலிருந்து துள்ளியமாக வழங்கக் காத்திருக்கின்றது. சில நாட்களாக தமது செய்திகளை தெரிவிப்பதில் மந்த நிலை காணப்பட்டது. ஏனெனில் எமது இணையத்தளத்திற்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு சதிச் செயல்களும் நாசகாரச் செயல்களுமே. உதாரணமாக எமது பெயர்ப் பலகை கூட நாசாகரர்களினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல தடைக் கற்களைத் தாண்டியும் எமது இண்னையத் தளமானது தமது மீள்வருகையை உறுதி செய்துள்ளது. எதுவித இலாப நோக்கமும் இன்றி சமூகத்துக்காய் முயன்ற எமக்கு கிடைத்த பரிசுகள் ஏராளம். புகைப்படம் எடுக்கச் சென்றால் கூட பல்வேறு அசெளகரியங்கள். இவ்வாறு நாம் உழைத்தும் எமக்கு எதிர்ப்புக்களே கிடைத்தது. இருந்தும் எமது பணியானது எவருக்கும் அஞ்சி இடை நிறுத்தப்படாது என்பது திண்ணம். நாம் எமது உயிரை தியாகம் செயக் கூடத் தயார் இச் சேவைக்காக. எமது உடைமைகள் பல்வேறு நாசமாக்கப்பட்டுள்ளது. எமக்கு உதவி செய்பவர் யாரும் இல்லாஇ. தனி மரமாய் செயற்படுகிறஓம். பொதுமக்களாகிய நீங்கலே எங்களை ஊக்கமும் ஆதரவும் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். எத் தடங்கள்களுக்காகவும் நாம் அஞ்சி எமது முயற்சி தடைப்படாது எனக் குறிப்பிடுகின்றோம்.  
                                                                       

Friday, December 17, 2010

இங்கிலாந்தில் உயர்கல்விக்கான மற்றும் தொழில்வாய்ப்பிற்கான கல்விக் கருத்தரங்கு

சம்மாந்துறை நகர மண்டபத்தில் 18.12.2010 ஆகிய நாளை மாலை 3.00-6.00 மணிவரைA/L சித்தியடைந்தும் பல்கலைக் கழக வாய்ப்புக் கிட்டாத மாணவர்களுக்கும் ஏனைய பட்டதாரிகளுக்கும் இங்கிலாந்தில் சர்வதேச தரம் வாய்ந்த பல்கழைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் கற்பது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு பெளன்ரி லெப் நிறுவனத்தினரால் இடம்பெறவுள்ளது. இனில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றானர்.
http://www.bountylabeducation.com
                                                                      

Thursday, December 16, 2010

உயர் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

சம்மாந்துறை GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர் தரப் பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கானது சம்மாந்துறை நகர மண்டபத்தில் 22.12.2010 அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் உயர்தரப் பரீட்சை தோற்றிய மாணவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்கால உயர் கல்விக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என GAFSO அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் காமில் இம்டாட் அவர்கள் குறிப்பிட்டார்.    
                                                                      

Tuesday, December 14, 2010

அம்பாரை மாவட்டத்தில் எந்தவொரு அபிவிருத்திக்கும் முன்னர் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அனுமதி பெறவேண்டும்

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அனுமதியைப் பெறவேண்டுமென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் பரவலாக கருங்கல்,களிமண்,ஆற்றுமண் மற்றும் கிறவல் போன்றவற்றை அகற்றுதல் அல்லது பெறுதல் போன்றவற்றுக்காக இதுவரை காலமும் பிரதேச சபை,மாநகரசபை,நகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றிலிருந்தே முன் அனுமதி பெறப்பட்டு வந்தது.
இந்த நடவடிக்கைகளில் பல்வேறுபட்ட சிக்கல்கள் தோன்றியுள்ளதனாலும் இதனை ஒரு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டு வருவதற்காகவும் ஊழல் மோசடிகளை தவிர்த்துக் கொள்வதற்காகவும் மேற்படி நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறப்படவேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 13, 2010

சம்மாந்துறையைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கலாபூசண விருது.

கலாச்சார மரபுரிமை அமைச்சினால் இம் மாதம் 15ம் திகதி ஜோன்டி டி சில்வா ஞாபகார்த்த கலையரங்கில் நடைபெறவுள்ள கலாபூசண விருது வழங்கும் நிகழ்வில் சம்மாந்துறையைச் சேர்ந்த 2 பேர் கெளரவிக்கப்படவுள்ளனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.அஸீஸ், எஸ்.எச்.எம்.முஸ்தபா ஆகியோரே கலாபூசண விருதுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களாகும்.

Sunday, December 12, 2010

சது / வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய சாதனையாளர் விழா

சது / வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய சாதனையாளர் விழாவானது 10.12.2010 அன்று மு.ப.9.00 மணிக்கு திரு. S.சந்திரமோகன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கௌரவ திரு. S.புஸ்பராஜா (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், கௌரவ அதிதியாக திரு.P.பிரசாந்தன் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், வித்தியா அதிதியாக கௌரவ ஜனாப்.M.K.M.மன்சூர் (வலயக் கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை) அவர்களும், மேலும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது 2008,2009,2010 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கும், 2009 இல் க.பொ.த.(சா.த.) பரீட்சையில் முதன்மைச் சித்தி எய்திய மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சம்மாந்துறை நெல்லுப்பிடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.


2010.12.12 ஆகிய இன்று சம்மாந்துறைநெல்லுப்பிடிச் சந்தியில் பி.ப.3.10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இவ்வாறு நடைபெறும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எமது செய்திப் பிரிவானது மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்றது.

Saturday, December 11, 2010

நுளம்புப் பெருக்கம்

தற்பொழுது மழை காலமாக காணப்படுவதால் எமது பகுதிகளில் நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நுளம்புப் பெருக்கமானது தற்பொழுது அபரிதமாக எமது சம்மாந்துறைப் பகுதியில் காணப்படுகிறது. எனவே இந் நுளம்புகள் உயிர் கொல்லி டெங்கு மற்றும் பல உயிராபத்துக்களைத் தோற்றுவிக்கும் நோய்களை ஏற்படுத்தவல்லன. எனவே நாம் இவ்வாறான நுளம்பு பரவும் இடங்களை கண்டறிந்து நுளம்புக் கடியிலிருந்து பாதுகாத்து நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

Friday, December 10, 2010

சம்மாந்துறை இணையத்தளத்தை முடக்க முயன்றார் அஸ்வர்.

>எமது இணையத்தளத்தை நேற்று தனிப்பட்ட குரோதம் காரணமாக செயலிழக்கச் செய்தார் ஊவா வெல்லஸ பல்கலைக்கழக மாணவரும் ஈ-சீக் இணையத்தள உரிமையாளரும். இவர் எமது www.sammanthurainews.com உருவாக்கத்திற்காக உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடை இடுகைக்கு கருத்து பிரேரித்த தனிப்பட்ட கோபத்திற்காய் எமது இணையத்தள பாஸ்வேடை அறிந்த இவர் செயழிலக்கச் செய்து பிறகு பழைய நிலைக்கு மாற்றினார். இவ்வாறு செய்ததை கேட்பதற்காக அழைப்பினை ஏற்படுத்திய போது அஸ்பர் அவர்கள் பிரேரித்த வார்த்தைப் பிரயோகமானது அப்பா அது கடும் இனிமை அதாவது மிகவும் மோசமானது. இவர் பேசிய வார்த்த்ப் பதிவு வெகு விரைவில். இன்னும் ஆதரங்களுடன் பல செய்திகள் வெளிவரும் காத்திருங்கள்.

Thursday, December 9, 2010

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவமும் நூல் வெளியீட்டு விழாவும்



2010.12.09 ஆகிய இன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஒன்பது மாணவர்களின் பிரியாவிடை வைபவம் பாடசாலை அதிபர் டீ.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள், தரம் ஒன்பது மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இவ் விழாவில் இம் மாணவர்களினால் கற்றாளை எனும் நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 8, 2010

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பிரமாண்டமானA/L தினக் கொண்டாட்டம்



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக A/L 2010ம் ஆண்டிற்கான தினக் கொண்டாட்டமானது கல்லூரியின் முதல்வர் எச்.எம்.பாறுக் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் 2009ம் ஆண்டு பல்கலைக் கழகம் தெரிவாகிய மாண்வர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இவ் விழாவில் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்கள் கெள்ரவிக்கப்பட்டனர்.
                                                                      

Tuesday, December 7, 2010

நாளை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி A/L தினக் கொண்டாட்டம் நேரடி அஞ்சல் எமது இணையத்தளத்தில்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி A/L தினக் கொண்டாட்டம் சம்மாந்துறை இணையத்தில் நேரடியாக அஞ்சல் செய்யக் காத்திருக்கின்றது. எனவே 08.12.2010 ஆகிய நாளை புதன் காலை 9.00 முதல் பி.ப.1.30 வரை கேட்கத் தவறாதீர்கள்.

க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

தற்பொழுது க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கீழ்காணும் முகவரியில் நீங்களும் உங்கள் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.

Monday, December 6, 2010

வாசகர்கள் அனைவருக்கும் முஹர்ரம் வாழ்த்துக்கள்

இஸ்லாமியர்களுக்கு என்று அல்லாஹ் அனுமதித்த மற்றும் அல்லாஹ்வின் ரசூல் முகம்மது (ஸல்) அவர்கள்காட்டி தந்த இரண்டு பண்டிகைகள் மட்டுமே இஸ்லாமிய பெருமக்களுக்கு கொண்டாடபட வேண்டிய பெருநாட்கள்ஆகும். 1. அரபி மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து அந்த நோன்புகளை முடித்த பிறகு ஷவ்வால் என்ற அரபி மாதத்தில் முதல் தேதி அன்று கொண்டாடபடும் பண்டிகை. 2. துல்ஹஜ் என்ற அரபி மாதத்தில் பிறைகள் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கொண்டாடபடும் ஹஜ் பண்டிகைகள் ஆகும். அல்லாஹ் படைத்த நாட்களில் எல்லா நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இந்த நாள்தான் நல்ல நாள், இந்த நாள்தான்கெட்ட நாள் என்று எந்த ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனும் சொல்லிவிட கூடாது என்று சொல்கிறது இஸ்லாம்.ஆம் நண்பர்களே, ஒவ்வொரு நாளும் உலகில் நல்லதும், கெட்டதும் சேர்ந்தேதான் நடந்து கொண்டிருக்கின்றன.இன்று ஒரு இடத்தில் குழந்தைகள் பிறக்கின்றன, இன்னொரு இடத்தில் இறக்கின்றன. ஒருவருக்கு திருமணம்நடைபெறும், இன்னொருவருக்கு விபத்து நடைபெறும். ஒரு இடத்தில் வெப்பம், சூடு என்று வெயில் கொழுத்தும்.இன்னொரு இடத்தில் பனி, மழை, தென்றல், புயல், பூகம்பம் என்று இப்படி இடத்திற்கு இடம் மாறுபடுதலும் உண்டு.ஆகவே இறைவன் படைத்த நாட்களில் எந்த ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து இதுதான் நல்ல நாள் என்றுசொல்லுதல் கூடாது. ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக,இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்திஇருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை.இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்). இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த இரண்டு தினங்களும் நோன்பு நோற்று, இந்த சுன்னத்தான வழிமுறையைபின் பற்றுவோம், அல்லாஹ் நமது ஒரு வருட கால குறைகளையும், பாவங்களையும் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொண்டு அனைவருக்காகவும் நா, அனைவரும் பிராத்திப்போம். நான் எழுதியவற்றில் ஏதும் குறை இருப்பின்எனக்கு அந்த குறையை சுட்டி காட்டுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

Friday, December 3, 2010

பலஸ்தீனர்களுக்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் வகையிலான ஆர்ப்பாட்டம்


 03.12.2010 வெள்ளிக் கிழமை ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை ஹிஜ்றாப் பள்ளிவாசல் முன்றலில் இருந்து பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கக் கூறு மாபெரும் எதிர்ப்பு ஊர்வலமானது சோஷலிச இளைஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்டது. இதில் பெருந்திரலான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Thursday, December 2, 2010

உங்கள் Mobile இல் தற்போது எமது சம்மாந்துறை இணையத்தளத்தையும் Opera Mini ஐ பாவித்து தமிழில் வாசிக்க முடியும்

01] Opera Mini உடைய Address bar ல் "opera:config" என டைப்செய்து ok யை சொடுக்கவும்.

02] பிற்பாடு கிடைக்கும் திரையில் "use bitmap fonts for complex scripts" க்கு yes  தெரிவுசெய்து save பண்ணவும்.

03] இப்பொழுது உங்களது Opera Mini யை restart செய்தவுடன் அது தமிழ் Unicode எழுத்துக்களை சரியாக  வாசிக்க உதவும்.


Visit http://www.opera.com/mobile/download/ to download Opera Mini for your mobile...

Some Most Used Nokia Phone Software


Opera Mini seems to be a free software but you will be charged by your mobile operator for GPRS data usage according to your data plan!

வருகின்ற 08.12.2010ம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலையில் A/L தினக் கொண்டாட்டமும் கெளரவிப்பு விழாவும்

சம்மாந்துறை தேசிய பாடசாலையிலே வருகின்ற 08.12.2010ம் திகதிA/L தினக் கொண்டாட்டம் 2010 மாணவர்களால் வெகுவிமர்சையாக விழாக் கோலம் பூணவுள்ளது. மேலும் இவ் விழாவிலே 2009ம் ஆண்டு பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதிபெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விழாவானது பாடசாலை முதல்வர் எச்.எம்.பாறுக் அவர்களினால் தலைமை தாங்கி சம்மாந்துறாஇ தேசிய பாடசாலை ஆரதனை மண்டபத்திலே விழாக் கோலம் பூணவுள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் தொடர்பான விபரங்களுக்கு பாடசாலை இணையத் தளத்தை தரிசிக்கவும்.
                                                                      

மட்டக்களப்பில் படைஎடுத்தவை பாம்புகள் அல்ல மீன்களே(வீடியோ பதிவும் இணைக்கப்பட்டுள்ளது)

கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும்   அவை பாம்புகள் அல்லவென தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருவகை மீனினங்கள் என ம்டடக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பதில் இணைபாளர் அலி மெஹமது மெஹமட் காசீம் தெரிவித்துள்ளார்.



நேற்றைய தினம் இவை அவதானிக்கப்பட்டதாகவும் இன்றைய தினமும் அவை அவதானிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விலாங்கு மீன் என்ற இனத்தை சேர்ந்த இந்த மீன்கள் தமது வாழ்க்கையை தொடருவதற்காக ஆறுகளில் இருந்து கடலுக்கு செல்வதையே தற்போது அவதானிக்ககூடியதாக உள்ளது.
பலரும் இது பாம்புகள் எனக்கூறுவதுடன் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையாகவே இந்த பாம்புகள் நீந்துவதாகவும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தனர்.
எனினும் அனர்த்த முகாமைத்துவ மததிய நிலையம் அனர்த்தங்கள் தொடர்பாக எந்த நேரத்திலும் தகவல்களை வழங்கும் என தெரிவித்துள்ள அலி மட்டக்களப்பு வாவியில் நீந்துவதாக கூறப்படும் பாம்புகளை போன்ற மீனினத்தை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்படுகின்றது.

Wednesday, December 1, 2010

நாய்களுக்கான கருத்தடுப்பு முகாம்


நாய்களுக்கான கருத்தடை தடுப்பு முகாமொன்று சுகாதார சேவைகள் அதிகாரிகளினால் இன்று(01/12/2010) வீரமுனையில் நடாத்தப்பட்டது. இதில் 150இற்கு  அதிகமான நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு நாய்களை கொண்டு வருபவர்களுக்கு தலா 50/= ரூபாவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அதிகாரிகள் வாகனங்களின் துணையைக் கொண்டு நாய்களைப் பிடித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.