Tuesday, August 31, 2010

விளையாட்டு வளம்

எமது ஊரான சம்மாந்துறையில் உள்ள விளையாட்டு பல் மாடிக் கட்டிடத் தொகுதியை எமது இளைஞர்கள் பயன்படுத்தும் அளவு போதாது என நிருவாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே இளைஞர்களே தாங்கள் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி இருக்கும் வளத்தைக் கொண்டு உச்ச பயனைப் பெறுவோமாக.





         

மண் ஏற்றும் பார ஊர்தியால் ஏற்பட்ட வினை

சம்மாந்துறை பெளசி மாவத்தையில் இருந்து செந்நெல் கிராமத்தை இணைக்கும் பாதையானது பார ஊர்திகளின் கூடுதலான போக்குவரத்துக் காரணமாக மக்கள் பாவனைக்கு இடரான பாதையாக மாறியுள்ளது.இது கரடு முரடான கற்பாறையாக உருமாறியுள்ளதைப் படத்தில் காணலாம்.இதன் மூலம் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் கருத்திற்க் கொண்டு பாதையை திருத்தி அமைக்குமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் புதிய நிலைப் புகைப்படங்கள் இதோ


சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் பழைய நிலைப் புகைப்படங்கள் இதோ





சம்மாந்துறை செட்டைவட்டை வீதியில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்

இன்று சம்மாந்துறை முகைதீன் மாவத்தையில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்.ஏனெனில் அங்கு ஒரு சிறுமியினால் இனங்காட்டபட்டுள்ள ஓர் இறந்த பெட்டியில் காணப்பட்ட கைக்குண்டே காரணமாகும்.இவ் இறந்த பெட்டி ஒன்றினுள் கைகுண்டு ஒன்று காணப்படுகிறது இதை புகைப்படதில் காணலாம்.இதை ஒரு சிறுமியே இனங்காட்டியுள்ளார்.இது குறித்து அச் சிறுமி கூறுகையில்-
தான் விளையாடுவதற்காக சுமார் 11.30 அளவில் பக்கது வளவிற்குச் சென்றதாகவும்
அங்கு உமி குமித்துக் காணப்பட்டதாகவும் அதற்கு பின்னால் ஓர் இறந்த பெட்டி ஒன்றினுள் எதோ இறந்த பொருள் ஒன்ரு காணப்பட்டதாக்வும் அதை அம்மா அக்கம் பக்கதில் உள்ளவர்களிடம் கூறியதாகவும் அச்சிறுமி கருத்து தெரிவித்தார்.

பின் பொலிஸார் சம்பவ இடதிற்கு விரைந்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் சுமார் 3.45 அளவில் கைக்குண்டானது  செயழிலக்கப்பட்டது.   
                                                                      

Monday, August 30, 2010

கிரிக்கெட் சூதாட்டம் 7 பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர் – இந்திய வீரார்களுக்கும் தொடர்பு ?

லண்டன்,  இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்சில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டின் போது நோ-பால் வீசுவதற்கு ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்சமாக பெற்று பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
சர்வதேச கிரிக்கெட் உலகில் சூதாட்ட அரக்கன் அடிக்கடி தலைதூக்குவது உண்டு. தற்போது மீண்டும் சூதாட்ட பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்த சூதாட்டத்தில் சிக்கி உள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த போட்டியை மையமாக வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேர் , `ஸ்பார்ட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.
இங்கிலாந்தின் `நிïஸ் ஆப் வேல்டு’ என்ற பத்திரிகை கிரிக்கெட் சூதாட்டத்தை கண்டுபிடிக்க அதிரடியாக களத்தில் குதித்தது. இதன்படி அந்த பத்திரிகையின் நிருபர்கள் குழு, தங்களை பத்திரிகையாளர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் மஷார் மஜீத்தை அணுகியது.
பத்திரிகை குழு சார்பில், மஜீத்திடம் ரூ.1 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அவர், பாகிஸ்தான் வீரர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார். பணத்துக்கு மயங்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர், முகமது ஆசிப் உள்ளிட்டோர் `ஸ்பாட்-பிக்சிங்சில்’ ஈடுபட சம்மதித்தனர்.
`ஸ்பாட்-பிக்சிங்’ என்றால் ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சூதாட்ட புரோக்கர்கள் கேட்டுக்கொண்டபடி வீரர்களின் செயல்பாடு இருக்கும். இதில் எளிதில் யாருக்கும் சந்தேகம் வராது. லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் நோ-பால், வைடு வீச வேண்டும் என்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட `பிக்சிங்’ ஆகும்.
அவர்களிடம் பேரம் பேசி பணத்தை சப்ளை செய்த பிறகு, பத்திரிகையாளர்களிடம் மஜீத் மறுபடியும் பேசினார். அப்போது, `நான் சொல்கிறபடி நாளை பாகிஸ்தான் வீரர்கள் மூன்று `நோ-பால்’ வீசுவார்கள். அது எப்போது வீசுவார்கள் என்பதை உங்களிடம் சொல்கிறேன். அதன்படி நிச்சயம் நடக்கும், அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன். நான் சொல்கிறபடி நாளை நிச்சயம் நடக்கும் என்று உறுதி அளிக்கிறேன். நான் சொல்கிறபடி கேட்டால் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். என்னை நம்புங்கள்’ என்று தெரிவித்தார்.
சூதாட்ட புரோக்கர் பத்திரிகை குழுவுக்கு உறுதி அளித்தப்படி, முகமது ஆமிரும், முகமது ஆசிப்பும், லார்ட்ஸ் டெஸ்டின் முதல் 2 நாட்களில் துளியும் பிசகாமல் குறிப்பிட்ட நேரத்தில் மூன்று நோ-பால்களை வீசினர். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அந்த பத்திரிகை குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து இது தொடர்பான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை ஸ்காட்லாந்து யார்டு போலீசிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் சூதாட்ட புரோக்கர் மஜீத் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான்பட் இந்த சூதாட்டத்திற்கு மூளையாக செயல்பட்டார். அவர் மூலம் தான் மற்ற வீரர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேலான தொகை பிரித்து கொடுக்கப்பட்டது. முகமது ஆமிர், முகமது ஆசிப், சல்மான்பட், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உள்பட 7 பேருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என்று அவர் போலீசிடம் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார், பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று அதிரடியாக விசாரணை நடத்தினர். பல்வேறு விஷயங்கள் குறித்து துருவி துருவி கேள்விகள் கேட்டனர். சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர், கம்ரன் அக்மல் ஆகியோரின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சில முக்கிய ஆவணங்களையும் ஓட்டல் அறையில் கைப்பற்றி இருக்கிறார்கள். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று பாகிஸ்தான் அணியின் மேலாளர் யாவர் சயீத் உறுதி அளித்திருக்கிறார். இதனால் வீரர்கள் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் கைதாகவும் வாய்ப்பு உள்ளது.
சூதாட்ட இருள் படர்ந்துள்ள லார்ட்ஸ் டெஸ்ட் 4-வது நாளான நேற்றுடன் முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 225 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சின் போது பாகிஸ்தான் வீரர்கள் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 7 வைடு, 14 நோ-பால் உள்பட 42 ரன்களை வாரி வழங்கினர்.
சூதாட்டத்தில் சிக்கிய முகமது ஆமிர் 4 நோ-பால், ஒரு வைடும், முகமது ஆசிப் 2 நோ-பாலும் வீசினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்த விவகாரம் தொடர்பாக வீரர்களோ, அணி நிர்வாகிகளோ யாரும் கைது ஆக வில்லை. தற்போது இந்த பிரச்சினை போலீஸ் விசாரணையில் உள்ளது. எனவே நாங்களோ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ எதுவும் செய்ய இயலாது. இருப்பினும் போலீஸ் விசாரணைக்கு நாங்களும், இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு சூதாட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல முறை சூதாட்ட பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் மீது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதே சூதாட்ட புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட புரோக்கர் மஜீத், இந்திய புரோக்கர்களுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு நான் தெரிவிக்கும் தகவல் அடிப்படையில் பணம் பெற்றுக்கொள்வேன் என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் இந்திய வீரர்கள் யாருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு உண்டா என்ற பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரம்.





பதினெட்டு ஊசிகள்,ஆணிகள் அவரது உடலுக்குள் அவர் வேலை செய்த எஜமானர் குடும்பத்தினரால் ஏற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டு எடுக்கப்பட்டவை இததனை.
இன்னும் எத்தனை ஆரியவதி என்ற அப்பாவியின் உடலுக்குள் இருக்கின்றனவோ தெரியாது..


இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுவேலை,தொழிற்சாலை வேலைகளுக்கு செல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பி இருக்கிறார்கள்.


பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..


இப்போது ஆரியவதிக்கு நடந்த ஆணியேற்றிய கோரம்..


அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?
ஏன் இப்படி ஒரு கோர வெறி?


சக மனிதர்களைத் துன்புறுத்துவதில் குடும்பமாக ஏன் இப்படி ஒரு இன்ப வெறி அவர்களுக்கு?
பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?


அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.


அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?


வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறதோ?


இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?
இலங்கை அரசு இப்படியான சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க தனது நட்பு நாடுகளுள் ஒன்றான சவூதி அரேபியாவை நேருக்க வேண்டும். அல்லது பணிப்பெண்களை ஜோர்டானுக்கு அனுப்பாமல் நிறுத்தியது போல சவூதிக்கும் அனுப்புவதை தடுக்க வேண்டும்.


இதனால் அரேபியர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் இந்தியா,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தங்களுக்கான 'வதைபடக்கூடிய அடிமைகளை' அழைத்துக் கொள்வார்கள்.

சம்மாந்துறையில் கலை இலக்கிய அமைப்புக்கள்.


1950 ஆம் ஆண்டிற்கு முன்பு சம்மாந்துறை மக்கள் மத்தியில் கல்வி அறிவு போதாமை காரணமாக, மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டன. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே இருந்தனர். அவர்களும் அந்நம்பிக்கைகளி;ல் உள்வாங்கப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் குறிப்பிட்ட காலங்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. அதனால் மக்களுக்கு போதிய ஓய்வு நேரம் இருந்தது எனலாம்.

அக்காலத்தில் கல்யாண வீடுகளிலும், சுன்னத்து கல்யாண வீடுகளிலும், பெருநாட் காலங்களிலும் அப்பாஸ் நாடகம், அலிபாதுசா நாடகம், தையா சுல்தான் போன்ற நாடகங்கள் இங்கிருந்த சில குழுவினரால் இராக் காலங்களில் நடாத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் சில குழுவினர் பள்ளுப் பாடுதல், பஜனைக் கச்சேரி எனும் இசைக் கச்சேரிகளையும், கோடு கச்சேரி எனும் நகைச்சுவை நாடகங்களையும் நடாத்தி மக்களை மகிழ்வித்தனர். இவ்வாறான கலை நிகழ்ச்சிகள் 1950 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் படிப்படியாக மறையத் தொடங்கின.
இதன் பின்னர்தான் கலை, இலக்கியத் துறைகளை வளர்ப்பதற்கு சில அமைப்புக்கள்;, கழகங்கள் தோன்றின.
அவைகளின் விபரங்கள்.
1. கலாபிவிருத்திக் கழகம் - 1956
அமைப்பாளர்கள் யூ.எம்.முஸ்தபா
மர்ஹ_ம் எம்.ஏ.றசீத்
யூ.செயின்
எஸ்.ஏ.றாசீக்
மர்ஹ_ம் பாவலர் பசீல் காரியப்பர்
மர்ஹ_ம் ஏ.ஏ.கரீம்
ஏஸ்.எஸ்.மணியம்
ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை
ஏ.எல்.எம் யாசீன்
எஸ்.எச்.எம்.முஸ்தபா
மர்ஹ_ம் எம்.எம். இஸ்மாயில்
மேடையேற்றிய நாடகங்கள்: குடியின் கொடுமை, (1956)
யார் குற்றவாளி (1957)
தியாகரத்தம்
தீரன் திப்பு சுல்தான் (1959)
‘கலைக்குரல்’ கையெழுத்துப் பத்திரிகை

மேலும் 1960 இல் கிழக்கிலங்கை மட்டத்தில் பேச்சு, கட்டுரை, கலைப்போட்டிகளை நடாத்தினார்;கள். இதில் பேச்சுப் போட்டியில் மர்;ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழ மேகம் பக்கீர் தம்பியின் உரைமலர், மழையும் துளியும், அறவழிக்கீதம் எனும் புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

2. இளைஞர் இசைக் கழகம்: - 1959
அமைப்பாளர்கள் ஏ.ஏ.றகீம்,
ஏ.சி.இஸ்மாலெவ்வை

எஸ்.எச்.எம்.முஸ்தபா
எம்.இஸ்மாலெவ்வை
வி.எஸ்.வேலாயுதம்

போன்றோர் சங்கீத ஆசிரியர் மூலம் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றமை, சில மேடைகளில் பாட்டுக் கச்சேரிகள் நடாத்தினார்கள்.

3. கலைச்சுடர் மன்றம் - 1960
ஸ்தாபகர்கள் எஸ்.எச்.எம்.முஸ்தபா
எம்.எம்.முஸ்தபா
நாடகப் பயிற்சி கருத்தரங்குகள், இலக்கிய, சமூக மாதாந்த சஞ்சிகை “முள்”; வெளியீடு.

4. முத்தமிழ் முன்னணிக் கழகம் -1962
ஸ்தாபகர்கள் கே.எம்.முஸ்தபா
ஏ.இப்றாஹிம்
மேடைநாடகங்கள் சில அரங்கேற்றப்பட்டன.

5. வசந்த மாளிகை நண்பர்கள் ஒன்றியம் -1966
ஸ்தாபகர்கள் ஏ.எம்.ஏ.லாபிர்.
எஸ்.எல்.எம்.இப்ராஹிம்
இசை நிகழ்வுகள் ,கலை இலக்கியக் கருத்தரங்குகள்.

6. வளர் கலை மன்றம் - 1969
ஸ்தாபகர்கள் எஸ்.கே.லெவ்வை
தினகரன் இஸ்மாயில்
கதை கட்டுரை, கவிதைப் போட்கடிள்

7. நோட் நோட் போர் கலைக்கழகம் - 1969
ஸ்தாபகர்கள் எம்.ரி.ராஜா
ஏம்.ஐ.மீராலெவ்வை
மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள்

8. மாறன் நாடக இலக்கிய மன்றம் - 1970
ஸ்தாபகர்கள் மாறன் யூ.செயின்
ஏ.எல்.மஹ்முது லெவ்வை
நாடகப் பயிற்சிகள்,நாடக அரங்கேற்றம்

9. மக்கள் கலை வட்டம் - 1971
ஸ்தாபகர்கள் வீ.ஆனந்தன்
ஈழக்குயில் இதிரிஸ்
கலை இலக்கிய கருத்தரங்குகள். களவெட்டி சஞ்சிகை.

10. தேசிய கலைக்குன்றம் - 1971
ஸ்தாபகர்கள் மாறன் யூ.செயின்
எம்;.ஐ.மீராலெவ்வை
நாடக அரங்கேற்றம்,கவியரங்குகள், கொள்கை இலக்கிய சஞ்சிகை வெளியீடு.

11. முத்தமிழ் கலா மன்றம் - 1973
ஸ்தாபகர்கள் கே.எல்.எம்.சலீம்
ஏ.மகுமுது லெவ்வை
மேடை நாடகங்கள்,இசையரங்குகள்

12. தமிழ் எழுத்தாளர் சங்கம்ஜ -1973
ஸ்தாபகர்கள் பாவலர் பஸீர்காரியப்பர்
மாறன் யூ.செயின்
கலை இலக்கிய போட்டிகள்,கருத்தரங்குகள்

13. உழைப்பாளர் கலை இலக்கிய ஒன்றியம் - 1976
ஸ்தாபகர்கள் தினகரன் இஸ்மாயில்
வீ.ஆனந்தன்
கலை இலக்கிய போட்டிகள்,கருத்தரங்குகள்

14. தினகரன் மகளிர் கலை வட்டம் - 1982
ஸ்தாபகர்கள் மஷ_றா ஏ மஜீட்
மாஜிதா ஏ ஹமீட்
இலக்கிய கருத்தரங்குகள், கவிதைப் போட்டிகள்

15. நிறைமதி கலை இலக்கிய வட்டம் - 1983
ஸ்தாபகர்கள் மஷ_றா ஏ மஜீட்
குறைஷா எம் காஸிம்
கருத்தரங்குகள், கலைப் போட்டிகள், “நிறைமதி” சஞ்சிகை வெளியீடு.

16. மத்திய இளைஞர் கலைக் கழகம் - 1986
ஸ்தாபகர்கள் எஸ்.யூ.எம்.நிஸார்
மஷ_றா ஏ மஜீட்
“யௌவனம்” கலை, இலக்கிய சஞ்சிகை

17. சமூகசேவைகள் கலை இலக்கிய அபிவிருத்தி அமைப்பு – 1986
ஸ்தாபகர்கள் எம்.ஏ.சீ.எம்.மக்கீன்
ஏ.ஏ.றகீம்
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், நாடகப் பயிற்சி
18. தேசிய கலை இலக்கிய தேனகம் - 1992
ஸ்தாபகர்கள் மாறன் யூ.ஸெயின்
ஏ.எல்.சாய்வுத்தம்பி
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், தமிழ் இலக்கியம் ஐஆம் ஐஐஆம் பாகம், றோசாச்செய்கை, புள்ளியைத்தேடும் புள்ளிமான், அத்தனையும் முத்துக்கள், கூன் நிமிர்கிறது.

19. “ஸ்கொல்ப்” அமைப்பு – 1999
ஸ்தாபகர்கள் ஏ.பீ.எம்.ராஜி
ஏ.கே.எம் ஹப்மி
கலை இலக்கிய கலாசாரப் போட்டிகள், “குமுறல்” சஞ்சிகை வெளியீடு

20. பாவலர் பசீல் காரியப்பர் இரசிகர் வட்டம் -2000

ஸ்தாபகர்கள் ஐ.எல். ஜலீல்
ஏ.எம்.எப் பஸ்மியா
இலக்கிய ஒன்று கூடல் பாவலருடன் ஓர் இரசனைச் சந்திப்பு “அசரா” பத்திரிகை, “பட்டிப்பளை” நூல் வெளியீடு.

21. நாவலர் ஈழமேகம் நினைவு மன்றம் - 2002
ஸ்தாபகர்கள் யூ.எல். அலியார்
றமீஸ் அப்துல்லாஹ்
கருத்தரங்குகள், ஈழமேக நினைவுச்சுவடுகள் நூல் வெளியீடு

22. பிரதேச கலை இலக்கியப் பேரவை – 2002
ஸ்தாபகர்கள் மாறன் - யூ. செயின்
எஸ்.எம்.ஜவாத்
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், “கிராமிய சமூக கவிகள்” திரட்டு

23. முற்போக்கு சமூக கலாசார முன்னணி - 2004
ஸ்தாபகர்கள் ஏ.எல்.ஜே. சாதீக்
எஸ்.ஐ.எம் தர்ஷாத்
கலை இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள்

24. பிரதேச கலைக் கழகம் - 2004
ஸ்தாபகர்கள் எம்.ரி ராசா
கே.எல்.எம் கபீர்
கலை இலக்கிய கருத்தரங்குகள், கலைப் பயிற்சிப் பட்டறை

25. சமூக பொருளாதார கலாசார நலன்புரி ஐக்கிய அமைப்பு – 2004
ஸ்தாபகர்கள் ஏ.சீ.ஏ.எம். இஸ்மாயில்
ஏ.பி.எம். சிராஜ்
அஷ்ரப் நினைவு தினப் போட்டிகள், கலை கலாசார கருத்தரங்குகள்

26. “பென்கிளப்” ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பு -2005

ஸ்தாபகர்கள் மாஜிதா தௌபீக்
மஷ{றா ஏ. மஜீட்
“ஒலிகள் வெளிவராத ராகங்கள்” பெண்களின் கவிதை திரட்டு கவியரங்குகள்

27. படர்க்கைகள் இணையம் - ஸ்ரீ லங்கா -2006
ஸ்தாபகர்கள் எம்.எச். றிஸ்வானுல் ஹக்
பரீட்
கவியரங்குகள், கலை கலாசார கருத்தரங்குகள்

28. அம்பாறை மாவட்ட எழுத்தாளர் கலைஞர் ஒன்றியம் -2007
ஸ்தாபகர்கள் எம்.ஏ.சீ.எம். மக்கீன்
அகில இலங்கை ரீதியில் கலை கலாசார போட்டிகள்,இலக்கிய கருத்தரங்குகள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மன்றங்கள் ஏதோ ஒரு வகை உந்துதலால் உருவாக்கப்பட்டாலும் பெரும்பாலான மன்றங்கள் அவற்றின் நோக்கங்களை தொடர்ந்து நிறைவேற்றக் கிடைக்கவி;ல்லை எனக் கொள்ளலாம். அதனால் சம்மாந்துறையின் கலை இலக்கிய விளைவுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதனை ஈடு செய்வதாக இருந்தால் இப்பிரதேசத்தில் உள்ள உயர் தரப்பாடசாலைகள் இவற்றிற்கு களம் அமைத்துக்கு கொடுக்கவேண்டியது அவசியமாகும். வருடாந்தம் நிகழும் தமிழ் மொழி தினப் போட்டிகளைக்கூட தரமாக நடாத்த இயலாமல் இருப்பது துரதிஷ்டமான நிகழ்வாகும்.
நன்றி
அல் - ஹாஜ் எஸ்.எச்.எம். முஸ்தபா (ஓ.பெற்ற அதிபர்)JP
இங்கு வெறுமனே சம்மாந்துறைச் செய்திகளை மட்டுமன்றி புதிய தகவல்களையும் இத் தளத்தில் வெளிவரும்.

Monday, August 23, 2010

ஜலாலியா பள்ளியினது கட்டிட நிர்மாணம்

சம்மாந்துறை ஜலாலியா பள்ளியினது கட்டிட நிர்மாண வேளைகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது வருங்காலங்களில் ஜும்மாப் பள்ளியாக மாற இருப்பதாக நிர்வாகதினர் கருத்து தெரிவித்தனர்.மேலும் பள்ளி நிருவாகத்தினர் கட்டிட நிர்மாணதிற்காக உதவிய உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.மேலும் உதவ விரும்புவோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்புகளுக்கு- 0673691586

கட்டாக்கலி மாட்டு உரிமையாளர்களுக்கு

தற்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.இக் கட்டாக் காலி மாடுகள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் எமது நகரத்தையும் சாணம் இட்டு அசுத்தமாக்குகின்றது.இது குறித்து கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவு எச்சரிக்கை விடுக்கின்றது.


Friday, August 20, 2010

தேசிய பாடசலையின் வளர்ச்சி தொடர்பான செய்தி

eVillage திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் பயன் பாட்டுக்கென 5கணனிகள், ஒரு மடிகணனி(Laptop) ,ஒரு Multimedia projector என்பன உற்பட WI-FI Zone நிறுவப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊளியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இனையத்தை இலகுவாகவும் இலவசமாகவும் பயன் படுத்துகின்றனர்




பாடசாலை கல்வி, கலை மற்றும் பிறதுறைகளில் ஒரு புதுயுகமாக இவ்வாண்டில் அதன் செயற்பாடுகளை விஷ்ததரித்துள்ளது.



மலர்ந்திருக்கும் இவ்வாண்டு (2010) பாடசாலையின் வைரவிழா ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



கல்வி அமைச்சின் இடைநிலைக் கல்வி நவீன மயப்படுத்தல் திட்டத்தின் கீழ் E-Village நிகழ்ச்சி ஒன்றிற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள 4 பாடசாலைகளில் எமது பாடசாலையும் முதல் இடத்தில் தெரிவாகியுள்ளமை குறித்து அதிபர் ஆசி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் எமது கல்லூரியில் எதிர்வரும் 15ம் திகதி E-Village இணைப்பாளர் நந்தசிறி வன்னிநாயக்க என்பவரால் மேற்கொள்ளப்படவுள்ளது.



கடந்த ஆண்டின் க.பொ.த உயர்தரத்திலிரிந்து பாடசாலைக்கு அமோக வெற்றி. குறிப்பாக மாணவன் MMM.றம்சான் மாவட்டத்தில் முதல் தரத்தில் பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளதோடு மேலும் ஐவர் பொறியியல் துறைக்கும் ஐவர் மருத்துவத் துறைக்கும் கலை, வர்த்தகத்திற்கும் அனேக மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அண்மையில் The Creative Box நடாத்தி முடித்த தேசிய மட்டத்திலான தனியாள் சஞ்சிகை போட்டி ஒன்றில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றமைக்காக தரம் 09ஐச் சேர்ந்த மாணவன் MFM. சம்லிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளமை குறித்து அதிபர், ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.