
தொற்று நோய் ஆய்வு பிரிவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் மாதத்திலேயே அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதொழிக்காவிட்டால் வருடம் பூராகவும் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் டெங்கு நுளம்பு அதிகளவில் பெருகும் நிலை காணப்படுவதாகவும் அவ்வாறு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.