Saturday, October 29, 2011

பெற்றோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ஒரு லீற்றர்  பெற்றோல் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 ரூபவினாலும் அதேவேளை டீசலின் விலையை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணையின் விலை 8 ருபாவினாலும்  இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. 
இதே வேளை LANKA IOC நிறுவனம் பெற்றோல் விலை 12 ரூபாவினாலும் டீசலின் விலை 2 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
                                                                        


                                                                       

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி 27.10.2011 திகதி தென்பட இருந்த துல் ஹஜ் தலைப்பிறை 28.10.2011 திகதி தென்பட்டதனால் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமாக 07.11.2011(திங்கட்கிழமை) யாக அறிவிக்கப்பட்டுள்ளது. என‌‌வே எமது இணையதள வாசகா்களுக்கு முன் கூட்டியே புணித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். (Computer Society of Sammanthurai) CSS

Thursday, October 27, 2011

சம்மாந்துறை வலயப் பாடசாலைகளுக்கு கணனி மற்றும் பாடசாலை மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு


இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலயத்தில் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டின் கீழ் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு கணனிகள்,பாடசாலை மாணவா்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சா் விமலவீர திசானயக்க அவா்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை அவா்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம்.எல்.ஏ. அமீா் அவா்களும், எஸ் புஷ்பராஜா அவா்களும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளா் எம்.கே.எம். மன்சூா் அவா்களும் கலந்துகொண்டனா்.இக் கணனிகள் கிழக்கு மாகாண முதலமைச்சா் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவா்களின் வேண்டுகோலுக்கிணங்க இந்திய அரசின் உயரிஸ்தானிகத்தினால் வழங்கப்பட்டது. மேலும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சம்மாந்துறை வலயத்திற்குகுட்பட்ட பாடசாலை மாணவா்கள் 180 பேருக்கு  துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்து.

Tuesday, October 25, 2011

வெகு விரைவில் சம்மாந்துறைக்கு என்று ஒரு இணையத்தள் வானொலி காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் ஏராளம்.

வெகு விரைவில் சம்மாந்துறைக்கு என்று ஒரு இணையத்தள் வானொலி காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் ஏராளம்.

அமீர் அலி பொது நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகம் அன்பளிப்பு


கண்காட்சியை பார்வையிட வருகை தந்த Colombo Asia Foundation     நிறுவனத்தின் பணிப்பாளர் நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

இந் நிகழ்வில் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் A.L.M.Musthak, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் A.M.M.Nowshad மற்றும் Colombo Asia Foundation பணிப்பாளர் திரு அன்டன் னு. நல்லதம்பி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Saturday, October 22, 2011

புத்தகக் கண்காட்சியும், விற்பனையும்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையும், சம்மாந்துறை பிரதேச சபை பொது நூலகத்தின் அபிவிருத்திக் குழுவும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும்
இன்று சற்று நேரத்திற்கு முன்னர் அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கௌரவ எம். உதயகுமார் அவர்கள் வருகை தந்து இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
அவர்களுடன் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப். ஏ.ஜெ.எம். இர்ஸாட் அவர்களும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

எதிர் வரும்2011/10/23,24,25 ம் திகதி சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும், நூல் விற்பனையும் மிகவும் கோலகலமாக இடம்பெற உள்ளது.


இந் நிகழ்வு காலை10.00 முதல் இரவு10.00 மணி வரையும் இடம் பெற ஏற்பாடாகியுள்ளது.


இந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாகSAMMANTHURAI.TK மூலம் இணையத்தள வானொளியில்  உள்ளக கலைப்பரங்கில் இருந்து நேர்முக வர்ணனை செய்யப்படவுள்ளது.

உலகில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறந்த ஆசிரியா்களில் ஜனாப் எம்.பி. ஹசீன்

உலகில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறந்த ஆசிரியா்களில் சம்மாந்துறை மண்ணை சோ்ந்த தேசிய பாடசாலையின் ஆசிரியா் ஜனாப் எம்.பி. ஹசீன். ஐக்கிய அமைரிக்காவில் Microsoft நிறுவனத்தில் அன்மையில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில்  இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஒரே ஒரு ஆசிரியராக கலந்து கொண்டார். இவருடய அப் பயணத்தின் அனுபவத்தை SAMMANTHURAI.TK இன் கானொளி ஊடக நீங்கள் கண்டு கழிக்க

Friday, October 21, 2011

சம்மாந்துறை தேசியபாடசாலையில் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்

கடந்த 2011/10/16ம் திகதி ஞயிற்றுக் கிழமை சம்மாந்துறை, தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒன்று கூடல் பாடசாலையின் அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் பாடசாலயின் கடந்தகால, நிகழ்கால,எதிர்கால விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.அத்தோடு இங்கு
இங்கு அதிபர் அவர்களின் தலையின் கீழ் புதிய நிர்வாகம் ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

மேலும் இச் சங்கமானது தொடர்ச்சியாக செயற்பாட்டில் இருக்குமெனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
                                                           
                                                           

Friday, October 7, 2011

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வகுப்பறையில் மல்டி மீடியா கற்பித்தல் முறைமை உயர்தர வகுப்பில் அறிமிகம்


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வகுப்பறையில்  நவீன முறையில் கற்றல் கற்பித்தல் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன்படி இப்பாடசாலையில் கலை,வர்தக பிரிவுகளில் உள்ள வகுப்புளில் தற்போது மல்டி மீடியா பயன் படுத்தப்பட்டு நவீன முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.


                                  இதன்படி கடந்த 03/10/2011  திங்கட்கிழமை அன்று வணிக கல்வி ஆசிரியர்  A.R.M.AJVATH ALI ஆசிரியரினால் கற்பித்தல் நடவடிக்கைகள் முதன் முதலாக மல்டி மீடியா மூலம் மேற்கொள்ளப்பட்ட போது பாடசாலையின் முதல்வர் Mr.S.L.ABOOBUCKER, கலை வர்தக பிரிவு பொறுப்பு அதிபர் Mr.H.M ANVER ALI, பகுதி தலைவர் Mr.S.M.SAMOON ஆகியோரினால் மல்டி மீடியா மூலமான வகுப்பறை கற்றல்,கற்பித்தல் நடவடிக்கை  உள்ளக மேற்பார்வை மேற் கொள்ளப்பட்டு ஆரம்பித்து  வைக்கப்பட்டது..                              

Thursday, October 6, 2011

சம்மந்துறை தேசிய பாடசாலையில் இன்று ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாட பட்டது.


சம்மந்துறை தேசி பாடசாலையில் ஆசிரியர் தினக் கொண்டாடமானது மாணவர்களாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இன் நிக்ழ்வில் மாணவர்களாள் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் தமது குருதட்சனயாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பரிசில்க்லையும் கொடுத்துனர் மகிழ்ந்தனர். மற்றும் மாணவர்களாள் ஏற்ப்பாடு ஏற்ப்பாடு செய்யப் பட்ட கிறிக்கட் விளையாட்டும் ஆசிரியர்களுககிடையில் இடம் பெற்றது. இச் சந்தர்பதில் இப் பாடசாலையின் பழைய மாணவர்கலால் (2010 உ/த கலைப்பிரிவு) மின்விசிறியும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Wednesday, October 5, 2011

A/L எழுதிய மாணவர்கழுக்கான புதிய வகுப்புக்கல் ஆரம்பம்

சம்மாந்துரை தேசிய பாடசாலையில்A/L  பரிட்ச்சை எழுதிய மாணவர்கலுக்கான புதிய வகுப்புகல் ஆரம்பமாகிறது.


graphic designing

போன்ற பாடங்கள் ஆரம்பமாக உள்ளன


தொடர்புகளுக்கு நிலைய பொறுப்பதிகாரி :M.B.M HASEEN (TR)
PHONE: 0772928808


சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணா்வூட்டல் நிகழ்வு

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இன்று விஷேட காலை ஆராதனை கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து மாணவா்களுக்கு சுகாதார தினைக்களத்தினூடாக சுகாதார நடவடிக்கைகள், ஆரோகியமான சுகவாழ்வுவு சம்மந்தமாக விழிப்புனா்வு ஒன்றினை கல்முனை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளா் Dr. இப்றாலெப்பை அவா்களினால் மாணவா்களுக்கு ஆரேக்கியமான சுகவாழ்வு பற்றி சிறப்புரையாற்றப்பட்டது. இந்நிகழ்வில் அதிபா்,பிரதி அதிபா்கள், ஆசிரியா்கள் மாணவா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தகவல்: M.B.M.HASEEN  (TR)

Sunday, October 2, 2011

சட்ட விரோதமாய் மணல் ஏற்றிய வாகனங்கள் கைபற்றப்பட்டன


இன்று சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு D.M.J.K. தஹநாயக்கா வின் தலைமையில்,சம்மாந்துறை பொலீஸாரும்,சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து நடாத்திய திடீர் சுற்றி வளைப்பினால் நிந்தவூர்,நெய்னாகாடு உள்கட்டுவாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாய் மணல் ஏற்றிய 10 உழவு இயந்திரங்களும் சரதிகளும்,வாகனங்களும் கைபற்றப்பட்டு சம்மாந்துறை நீதிமன்றதிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.