சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சின்னஞ் சிறார்களின் ஆக்கபூர்வமான அற்புதத் திறமைகள் இன்று சம்மாந்துறை அல்-ம்ர்ஜான் மகளிர் கல்லூரியில் உத்தியோகபூர்வ அரங்கேற்றம் சுமார் காலை 9.25 மணியளவில் இடம்பெற்றது.இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல்வேறு வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் போன்றோர் பிரசன்னமாகி இருந்தனர்.மேலும் இந் நிகழ்வானது அனைத்து மக்களினதும் உள்ளங்களையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, October 23, 2010
முன்பள்ளி சிறார்களின் கண்கவர் பிரமாண்டக் கண்காட்சி
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சின்னஞ் சிறார்களின் ஆக்கபூர்வமான அற்புதத் திறமைகள் இன்று சம்மாந்துறை அல்-ம்ர்ஜான் மகளிர் கல்லூரியில் உத்தியோகபூர்வ அரங்கேற்றம் சுமார் காலை 9.25 மணியளவில் இடம்பெற்றது.இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல்வேறு வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் போன்றோர் பிரசன்னமாகி இருந்தனர்.மேலும் இந் நிகழ்வானது அனைத்து மக்களினதும் உள்ளங்களையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறையில் திடீர் விபத்துக்களில் ஒருவர் மரணம் இருவர் படுகாயம்
இன்று 23.10.2010 நண்பகல் 12.30 மணியலவில் சம்மாந்துறை நெல்லுச் சேனை வட்டையில் கிறவல் மணல் ஏற்றலுடன் தொடர்புடைய உழவு இயந்திரமும் பெட்டியும் திடீரென பாதையை விட்டு வாய்க்காலுக்குள் பாய்ந்ததன் காரணமாக சாரதி எப்.சிராஜ்.வயது 19(பத்து வீட்டுத்திட்டம்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் மரணமானார்.
உழவு இயந்திரத்துடன் உதவிக்குச் சென்ற 18 வயது மதிக்கத்தக்க முஸம்மில் என்பவர் ப்டுகாயம் அடைந்த நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை திடீர் விபத்தில் மரணமடைந்த சிறாஜின் நண்பர் மலையடிக் கிராமம்-3 இல் வசிக்கும் முபாரக் (19வயது) வைத்தியசாலைக்குச் சென்று நிலைமையை அவதானித்து மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளுக்காக வீடு நோக்கி வந்து கொண்டிருக்கையில் பி.ப.2.50 சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் இலங்கை வங்கிகும் அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிளில் பிராயணிக்கையில் அதே திசையை நோக்கி பின்னால் வந்து கொண்டிருந்த பாரஊர்தி(ரம் ரெக்)மோதி விபத்துக்குள்ளக்கியதனால் முபாரக்கும் படுகாயம் அடைந்து சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெருவதையும் பின்னர் அதி தீவிர சத்திர சிகிச்சைக்காக அம்பாரை போதனா வைத்தியசாலையில் இடம் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மரணமடைந்தவர் தொடர்பான மரண விசாரணையினை இரவு 7.50 கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அவதானித்ததுடன் இரவு 8.05 இற்கு சம்மாந்துறை வைத்தியசாலையில் இருந்து ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.விபத்துடன் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வ்ருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474564
feature content slider
Content right
.
.
.