Wednesday, December 26, 2012

சுனாமி சுழன்று எட்டு- பின்னால் சில எட்டுக்கள்




கடந்த 2004-டிசம்பர் -26 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். அமைதியான அதிகாலை அமைதியான பொழுது உலகையே ஒருமுறை உசுப்பி விட்டது.  இந்தோனேஸியாவின் சுமாத்திரா தீவுகளிற்கருகில் கடலடியில் புவிததகடுகளிற்கிடையே ஏற்பட்ட உரசல்கள் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கம்  பாரிய சுனாமிப் பேரலைகளை உருவாக்கின. இது ரிச்டர் அளவுப்படி 9.0 ரிச்டர்களைக் காட்டியது இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா,மலேசியா, மாலைதீவு, பர்மா, கென்யா,தன்ஸானியா,மடகஸ்கார், சீஸெல் தீவுகள், அந்தமான் நிகோபார்  என இந்து சமுத்திரத்தை சூழ்ந்த பல நாடுகள், தீவுகள் பாதிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர், சொத்துக்களின் இழப்போ மிகப்பல. உலகெங்கும் 2 லட்சம்  முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், பல்லாயிரம் பேர் அகதிகளாயினர், மனநலம் பாதிக்கப்பட்டனர், காணாமல் போயினர், உறவுகளை இழந்தனர்.
உலகிலே இடம்பெற்ற கொடூரமான இயற்கையளிவுகளில் இது 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு சோக சாதனையை எட்டிக் கொண்டது
1960ற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி இதுவாகும்


இவ் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள்
 பூர்த்தியாகின்றது.


சுனாமி வர காரணம் என்ன ?

தரையில் பூமியதிர்சி  ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் சேதமாகின்றன. மலைப்பகுதியில் உண்டாகும் போது எரிமலை உருவாகிறது. இதுவே கடற்பரப்பில் பூகம்பம் உண்டாகும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாகின்றன. இவற்றின் வேகம் ஆரம்பமான இடத்திலிருந்து, கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். 

சாதாரண மாக கடல் அலையின் உயரம் 7 அடிக்கு எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடியளவில் இருக்கும். ஆனால் அன்றைய தினம் இந்த அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளுகிறது.

சுனாமியை தடுக்க முடியா விட்டாலும், அது வரும் முன் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வைக்கலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன் ஆழிப் பேரலைகள் உருவாகின்றனவா என்பதை கண்டறிய, சுனாமி எச்சரிக்கைக்கருவிகள் பெருங்கடல்களில் அமைக்கப் பட்டுள்ளன. இது கடலில் நீர் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். 

இதன் அடிப்படையில் அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்ந்தால் எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படப் போகும் அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம். 

Saturday, December 22, 2012

உருளைக்கிழங்கில் அரபு எழுத்துக்கள்


இன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் இல 152ஏ, அல் அக்ஸா வீதி, மட்டக்களப்பு தரவை-1, சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆதம் லெப்பை முஹம்மது ஜாபிர் என்பவரது வீட்டில் வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

காலை வேளையில் சமையலுக்காக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு துண்டங்களில் அல்லாஹ் என்ற இறை நாமம் மற்றும் திருக்கலிமா என்பவை அரபு மொழியில் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மற்றும் இவ்விடயம் தொடர்பாக அஷ்ஷெய்ஹ் சாஜித் அலி முப்தி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. உருளைக் கிழங்கு துண்டங்களை நேரடியாக அவதானித்து, பரிசீலித்த முப்தி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்த செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.

Sunday, December 9, 2012

சம்மாந்துறைப் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய த்தில் 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விா



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும் அப்துல் மஜீத் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக அம்பாவரை மாவட்ட சிறீ-லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபைத் தவிசாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் கல்லூரி அதிபர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இவ் விழாவில் கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.

Saturday, December 8, 2012

ஐந்தில் மூன்று நிரூபிப்பு!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டதாகவும் அதில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

1ம் 4ம் 5ம் குற்றங்களில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார் எனவும் 2ம் 3ம் குற்றங்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

adaderana

Thursday, December 6, 2012

புலமைப்பரிசில் மாணவர்களை பாராட்டும் விழா-2012


 சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் 2012.12.05 அந் திகதி அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த  பாரட்டு விழாவில் சித்தி பெற்ற மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியைகளான ஜனாபா RUM. மன்சூர், AB. பரீதா RU. றிம்லான் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவத்தில் புலமைப்பரிசில் நிகழ்வில் வலயத்தில் 179 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட MBM. தஸ்னீம் என்னும்  மாணவனுக்கு விசேட பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது என்பதை சுட்டிகாட்டுதல் பொருத்தமாகும். 

அ.ம. தாஹா நழீம்

அம்பாறை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடை

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.

  நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை மின் தடை அமுலில் இருக்கும் என்று கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதேசத்திலுமே மின் தடை இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரிய திருத்த வேலைகளுக்காகவே இம்மின்சாரத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், இந்நாட்களில் ஏதாவது ஒரு சில நேரங்களில் பொது மக்களின் நலன் கருதி குறித்த சில நிமிடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதனால் மின் தடை அமுலில் உள்ளபோது எவரும் தமது வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாம் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்பாக இருக்காது எனவும் கூறினார்.


thanks  adaderana

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.