Monday, July 30, 2012

வாழும் கலை இலக்கிய வட்டத்தில் இப்தார் நிகழ்வு


கடந்த 2012-07-29  ம் திகதி  சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டத்தில் இப்தார் நிகழ்வு இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேசத்தை ஆய்வுக்களமாகக் கொண்டு பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வரும் கலை, இலக்கிய ,சமூக ஆர்வலர்களைக் கொண்டியங்கும் சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டம். கடந்த 2012-07-29 ஞாயிற்றுக் கிழமை இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அமைப்பின தலைவர் எம்.எம். சமீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், மூத்த இலக்கியவாதியும்  கலைஞருமான கலைவேள் மாறன் யூ செயின் அவர்களும்,  எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் அவர்களும், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதன்போது அமைப்பின் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு புதிய ஆர்வலர்களும் இணைத்துக் கொள்ளப்படடனர். இந்நிகழ்வைத் தொடர்ந்தலைவர்து அமைப்பின் அறிமுக உரை அமைப்பின் தலைவர் எம்.எம்.சமீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது அதனைத் தொடர்ந்து  உரையாற்றிய கலைஞர் மாறன் யூ செயின் அவர்கள் இளைஞர்களின் எதிர்கால சிந்தனைகள் எவ்வாறு அமைய வேண்டுமென விளக்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் அவர்கள் இன்றைய சூழலில் அமைப்பின் முயற்சிகளை எவ்வகையில கொண்டு செல்ல வேண்டும் என கூறியதோடு இதில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்கள் இன்றைய இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்தின் அவசியம் பற்றியும், அவர்களிற்கான தொழில் வழிகாட்ல்கள், உளவளத்துணைகள் பற்றியும் உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்களுக்கான உத்தியோக பூர்வ விண்ணப்பப் படிவங்களும் தலைவர் சமீர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அங்கத்தவர்களிடையே சினேகபூர்வ சமூகநலக் கலந்துரையாடல்களும் எதிர்கால இலக்குகள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும் இடமபெற்றன

வாழும் கலை இலக்கிய வட்டம்

இப்தார்

Friday, July 27, 2012

சம்மாந்துறை VTCயி ல்PROFILE BACKER COURSE ஆரம்பிக்கப் பட்டுள்ளது




சம்மாந்துறை VTCயி ல் ஆரம்பிக்கப்பட்டுள்ள  PROFILE BACKER  இலங்கையில் முதன் முறையாக தமிழ் மொழி மூலம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஹோட்டல் தொழிற்துயின் உணவு தயாரிப்புகாக பாட நெரியானது L3 2ND BATCH க்காண  மாணவர்களுக்கான பதிவுகளில் இன்னும் 4 மாணவர்களுக்கான இடம் இருப்பதனால் தங்களின் பதிவுகளுக்கு 0752384484 என்னும் இலகத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
இப்பயிற்ச்சில் கிடைக்கும் நன்மைகள்

1. உள்நாட்டிலேயே பயிற்சியின்பின்  (06 மாத கால பயிற்ச்சி பிரபல       ஹோட்டல்களில் சம்பலத்தோடு (வோளை )(OGT)
2.அறபு நாடுகளில் (3500 றியால்களுக்கு ) மேல் சம்பலம்

Wednesday, July 11, 2012

சம்மாந்துறையில் கராட்டி வகுப்பு மீண்டும் ஆரம்பம்.


அகில இலங்கை சோட்டாகன் கராட்டி டு கென்சின்காய் அசோசியேசனின் போதனாசிரியர் முஹம்மட் இக்பால் அவர்களால் நடாத்தப்படுகிறது.
மேற்படி பயிற்சியைப் பெறுவதன்மூலம் பின்வருவனவற்றை ளர்த்துக்கொள்ளலாம்.
Self Defense
Mind Control
Physically fitness
Mentally develop
Body skill
Discipline

மேற்படி பயிற்சியினால் இரண்டு விடையங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
01. Martial arts (street fight)
02. Sports Karate
     பாடசாலை மாணவர்களுக்கான கராட்டி சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற வைப்பதற்கான பயிற்சிகளும் நடைபெறுகிறன.

      மேலும் மாணவர்கள் இதன்மூலம் பெற்றுக்கொள்ளும் சான்றிதழ் விழையாட்டு அமைச்சின் (Ministry of Sports) கீழுள்ள இலங்கை கராட்டி டு சம்மேளனத்தினாலும்(Sri Lanka Karate Do Federation) கல்வி அமைச்சின் (Ministry of Education) கீழுள்ள இலங்கை பாடசாலைக் கராட்டி டு சம்மேளனத்தினாலும் (Sri Lanka School Karate Do Association) இலங்கை சோட்டோகன் கராட்டி சம்மேளனத்தினாலும் (Sri Lanka Shotokan Karate Do Federation) அங்கீகரிக்கப்பட்டதாகும்.  மேலும் எமது சோட்டாகன் கராட்டி டு கென்சின்காய் அசோசியேசன் ஆனது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் தலைமைக் காரியாலயத்தைக் கொண்டும் உலகில் 120 நாடுகளுக்கு மேல் கிளைகழையூம் கொண்ட அசோசியேசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

        இப்பயிற்சி வகுப்பில் யார் கலந்து கொள்ளலாம் ?
       வயதெல்லை : கிடையாது (அனைவரும் கலந்து கொள்ளலாம்)
       இடம் : அல்-அமீர் விந்தியாலயம் - சம்மாந்துறை
       காலம் : ஒவ்வொரு சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 9 மணிவரை.

Monday, July 9, 2012

தென் கிழக்கு பல்கலைக்கழக SUGAS அமைப்பினரினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு விழா




தென் கிழக்கு பல்கலைக்கழக இளநிலைப்பட்டதாரிகள் சம்மாந்துறை ஒன்றியத்தினால்  கடந்த 2012.07.06ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நாடாத்தப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர். எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவிப்பு விழா நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் உபவேந்தர் உட்பட,
கலாநிதி: கலீல், கலாநிதி: றமீஸ் அப்துல்லாஹ், Mrs: Sareena UMA. Gafoor, திருமதி: ஐனுல் ஜாரியா, சல்பியா யூ.ஏ. ஜலீல், எம்.எம்.றிபாயூடீன், ஏ.தையூப், ஏ.ஆர்.எம்.மாஹிர் ஆகியோருக்கும்
கௌரவிப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் பல்வேறு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.