Friday, October 5, 2012
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இன்று (2012-10-05) விஷேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலை அதிபர் ஜனாப் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கல்விப்பணிப்பாளர் ஜனாப் யூ.எல்.அலியார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் இதன்போது பெண் சாரணிய மாணவிகளினால் மரியாதை அணிவகுப்பும் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பிரதம அதிதி அவர்கள இலங்கையில் ஆசிரியர் தினம் அறிமுகமான 1991ம் ஆண்டு சம்மாந்துறையில் நடைபெற்ற முதலாவது ஆசிரியர் தின நிகழ்விற்கு தலைமை தாங்கியவராவார். முதலாவது ஆசிரியர் தினத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை கல்லூரி அதிபர் அவர்களிடம் கையளித்தார்.
மற்றும் இந்நிகழ்வில் புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவான ஆசிரியர்கள் நால்வர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474563
feature content slider
Content right
.
.
.