மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கம்
மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் புதிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக ஆட்கள் பதிவூத் திணைக்களம் அறிவிக்கின்றது.
அதன்படி புதிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளில் இருந்து மாறு பட்டவகையில் புதிய அடையாள அட்டைகள் உருவாக்கப்படவுள்ளன.
புதிய அடையாள அட்டை கணனி மயப்படுத்தப்பட்டதாக உருவாக்கப்படும் என்றும் இதில் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவக்கின்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தாருஸ்ஸலாம்
தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்றது.