Friday, February 22, 2013

வினாடிவினாப் போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவி இரண்டாம் நிலையைத் தட்டிக்கொண்டார்.

---------- Forwarded message ----------
From: Thaha Naleem Abdul Majeed <thahanaleem@gmail.com>
Date: Fri, 22 Feb 2013 21:46:27 +0530
Subject: வினாடிவினாப் போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவி
இரண்டாம் நிலையைத் தட்டிக்கொண்டார்.
To: Abdul Rasool Sajith Ali <arsajinet@gmail.com>,
kalasemnet@gmail.com, jaffnamuslim1990@yahoo.com,
news@addalaichenai.info, Mohamed Azoor <azooruwu@gmail.com>,
editor@kinniya.net, news@kinniya.net, info@eravurinfo.com,
sammanthurai news <sammanthurainews@gmail.com>, str web
<infostrweb@gmail.com>, maruthamunaionline@live.com,
puttalamonline@yahoo.com, இலங்கைநெற் செய்திகள் <ilankainet@gmail.com>,
Battinews batticaloa <info@battinews.com>, kalmunaihot@yahoo.com,
info@veeramunai.com, sathiyaraj@veeramunai.com, Thambiluvil
Thirukkovil <thambiluvil@gmail.com>, sayan@thambiluvil.info,
jesmymmoosa@yahoo.com, haniffajp@yahoo.com, Kattankudi Web Community
<kattankudi@yahoo.com>, vtsaha123@gmail.com

சகல இணையப்பதிப்பாளர்களுக்கு,

தயவு செய்து எமது பாடசாலையின் இந்தச் செய்தியை தங்களுடைய இணையத்தில்
பிரசுரிக்குமாறு பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்

ஏ.எம். தாஹா நழீம்


வினாடிவினாப் போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலய மாணவி இரண்டாம்
நிலையைத் தட்டிக்கொண்டார்.



எதிர்பாராமல் மனிதனுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய பல சம்பவங்கள் முன்னைய
வரலாறுகளில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு
நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது தான் அனர்த்த முகாமைத்துவத்தின்
உண்மைத்தன்மை மக்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தியது என்றால் அவை மிகையாகாது.

இந்த வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் அவை தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்த பல நிறுவனங்கள் பல்வேறு பிரயத்தனங்களை
ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு மாகாண மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையில் அனர்த்த
முகாமைத்துவ வினா விடை போட்டி பிரிவு 8-9ல் கமு/சது/ முஸ்லிம் மகளிர் வித்,
மாணவர் MMF. றஸான் இரண்டாம் நிலையைப் பெற்று இந்த வலயத்திற்கும் பாடசாலைக்கு
பெருமை தேடித்தந்துள்ளார். இந் நிகழ்வு 22.02.2013ஆந் திகதி காலை 9.00 மணிக்கு
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவி வெற்றிக்
கின்னத்தையும், சான்றிதலையும் இந் நிறுவனத்தின் அதிகாரியிடமிருந்து பெற்றுக்
கொள்ளும் காட்சியாகும்.



இந்தப்போட்டியில் இந்த மாணவி வெற்றிபெற இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம்.தௌபீக்
அவர்களும் அசிரியைகளான MI.முஜிபா, MY. ஜெமிலா ஆகியோர் வழிகாட்டியாகவும்,
ஆலோசகர்களாவும் செயற்பட்டார்கள் என்பதை சொல்லிக்கொள்வது இங்கு பொருத்தமாகும்.



2012 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் GIZ நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அனர்த்த
முகாமைத்துவ வினாடி வினா 8-9 பிரிவுப் போட்டியில் இரண்டாம் நிலையை Miss. MMF .
றஸான் என்னும் கமு/சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி
தட்டிக்கொண்டதற்காக22.02.2013
ஆந் திகதயின்று மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அந் நிறுவனத்தின் அதிகாரிகளால்
வெற்றிக்கின்னம், சான்றிதழ் வழங்கும் போது பிடிக்கப்பட்ட படம் இதுவாகும்.



தகவல் ஏ.எம். தாஹாநழீம் - பிரதி அதிபர்



--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*

Wednesday, February 6, 2013

தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இல்லை







தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இருக்க முடியாது. உங்கள் நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். தாய்நாடே சிறந்ததென தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம்  நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இஸ்லாமிய கற்கை அரபு மொழி பீடத்திற்கான கட்டடம், பல்கலை மாணவர்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் ஆகியனவும் ஜனாதிபதியினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

322 மில்லியன் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. குவைத் நாட்டின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தின் திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;-  இந்த உலகில் களவாட முடியாதது அறிவு மாத்திரமே. இது பெரியதொரு செல்வம். பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பாகக் கற்று சர்வதேச ரீதியில் தொழில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

அவ்வாறு சர்வதேச ரீதியில் தொழில்புரியச் சென்றாலும் நம் தாய் நாட்டை மறக்கக்கூடாது. சாந்தி, சகவாழ்வு சமாதானம் இவற்றையே இஸ்லாமிய மதம் வலியுறுத்துகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் இருக்கக்கூடாது.


நீங்களே நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நீங்களே இந்த நாட்டின் எதிர்கால புத்திஜீவிகள். இன, மதங்களுக்கு அப்பால் ஐக்கியத்தை இங்கு காண முடிகின்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இங்கு ஒற்றுமையாகக் கல்வி பயில்கின்றனர். இது ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாகும்.

கடந்த 5 வருடத்தில் அரசாங்கத்தின் மூலமும், குவைத்தின் கடன் உதவி மூலமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இன்று பொறியியல் பீடமும் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடனுதவியை வழங்கிய குவைத் அரசாங்கத்துக்கு இலங்கை அரசின் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பொறியியல் பீடம் இஸ்லாமிய கல்வி, அரபு மொழி பீடம் என்பன இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய தேவைகளாகும். பல்கலைக்கழக மாணவர்கள் தோல்விகளை அல்ல வெற்றிகளைப் பெறுபவர்களாகவே இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்காகவே அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உயர் கல்வி பீடங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கலை மற்றும் நுண்கலை பீடங்கள் அமைக்கப்பட்டு ஏனைய துறைகளைப் போல அத்துறைகளிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உபவேந்தர் மேற்கொள்ள வேண்டும். நான் 2005 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கு விஜயம் செய்த போது இப்பகுதி பெரும் காடாகக் காட்சியளித்தது. சிறிய கட்டடமொன்றிலேயே பல்கலைக்கழகத்தைக் கண்டேன்.

இன்று இந்தப் பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனது நண்பர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் கண்ட கனவு இந்த சர்வ கலாசாலை மூலம் நிறைவேறியுள்ளது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்ற பொறியியலாளர்களாக உருவாக வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்  என  ஜனாதிபதி தெரிவித்தார்.

மேற்படி பல்கலைக்கழக வளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வரவின் நிமித்தம் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும் உபவேந்தர் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார். 


news.lk

Tuesday, February 5, 2013

ரிசானாவின் சகோதரிக்கு வேலை வாய்ப்பு


சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் வீட்டுக்கு ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று விஜயம் மேற்கொண்டார்.

திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள ரிசானாவின் வீட்டிற்கு  விஜயம் செய்தபோது ரிசானாவின் சகோதரிக்கு வேலை வாய்பொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ  உறுதியளித்தார்.

ரிசானாவின் குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களையும் வழங்கினார்.அரசினால்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைக்கும் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு ஷிரந்தி ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

சிரச்சேதம் செய்யப்பட்டு உயிரிழந்த சிரானாவின் பிறந்தநாள்  04 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. 
.news.lk

க.பொ.த. விசேட பரீட்சைக்கு 1800 மாணவர்கள்


மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென நடத்தப்படவுள்ள விசேட க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு 1800 மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

2012 டிசம்பர் மாதம் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கென எதிர்வரும் 9,10,11 ம் திகதிகளில் விசேட க.பொ.த. பரீட்சையை நடத்தவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

news.lk

Sunday, February 3, 2013

சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி

தேசத்தின் இறைமையை உறுதி செய்வதற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்த இலங்கையர்களான நாம் 65வது தேசிய சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுளளதாவது:

சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது. மிகவும் கடினமான- சவால் நிறைந்த இப்பணியை நிறைவேற்றுவதானது தேசத்திற்கு நீதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவரும்.

நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் சந்தேகத்துடனும் நோக்கத் தேவையில்லாத ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது.

நாட்டுக்கு எதிராக அணிவகுத்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடிப்பதற்கு நாம் உறுதியான அர்ப்பணத்துடன் செயற்பட்டோம்.

தலைமைத்துவம் கடினமான சவால் நிறைந்த சூழ்நிலைக்கு முகங்கொடுக்க நேர்ந்த போதும் நாம் நாட்டை காட்டிக்கொடுக்காத இலட்சியத்தைக் கொண்டவர்கள்.

எமது மக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கும் பாரிய ஒத்துழைப்பிலிருந்து நாம் மிகப்பெரும் பலத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

சமூகங்களுக்கிடையிலான ஐக்கியமும் சமய நல்லிணக்கமும் நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கிய அம்சங்களாகும். எமக்கு மத்தியிலான பிரிவினைகள் எமது சுதந்திரத்தை எமக்கு மறுக்கும் பல்வேறு சக்திகளை பலப்படுத்திவிடும்.

எல்லா சமூகங்களும் ஐக்கியமாக எழும்போது நாட்டுக்கு எதிரான சக்திகள் பல்வீனமடைந்து சுதந்திரம் மேலும் பலப்படும். தேசிய ஐக்கியத்திற்கான மிகுந்த உறுதியுடனும் தெளிவான அர்ப்பணத்துடனும் நாம் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.

நாட்டின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கு உயர்ந்த தியாகங்களைச் செய்த எல்லா நாட்டுப்பற்றுடையவர்களுக்கும் நாம் எமது மரியாதையைச் செலுத்துகிறோம்
news.lk

இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை

வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்;சியடைகிறது.

கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு

பல்வேறுபட்ட சவால்களை காலத்திற்கு காலம் சந்தித்து வந்துள்ளது.

மிகக்கொடூரமான யுத்தமொன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும்

சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டுள்ள

நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.

பௌத்தர்கள்ää முஸ்லிம்கள் ஹிந்துக்கள்ää கிறிஸ்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு

செழிப்புடனும்ää அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனைகளுமாகும்.

ஒரு

நாட்டின்

நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதே எமது நம்பிக்கையாகும். அந்த வகையில் நாட்டுப்பற்றையும்
சமூகää சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையையும்ää ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு

சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம்.

எனவே இந்நாட்டில் சௌஜன்யம்  ஐக்கியம் சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக்

கொடுப்புää நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நல்லாசி கூறுகிறது.

அபிவிருத்தியும்
முன்னேற்றமும்

அந்நாட்டு

மக்களின்

ஒற்றுமையிலும்
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்

தேசிய பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

சம்மாந்துறை முஸ்லிம் மகளிரில் தேசிய மீலாத் விழா-2013





சம்மாந்துறை முஸ்லிம் மகளிரில் தேசிய மீலாத் விழா-2013
கல்வி அமைச்சின் அறிவித்தலின் பிரகாரம் சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் தேசிய மீலாத் விழா 2013.01.28ஆந் திகதியன்று சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளாராக  MYA. ஜலில் மௌலவி அவர்கள் கலந்து சொற்பொலிவாற்றியதுடன் மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

இந் நிகழ்வை பாடசாலையின் அதிபர் TM.தௌபீக் அவர்களின் தலைமை தாங்க, மற்றும் ஆசிரியர்களான SL.மன்சூர், M. பைஸானா, I .ஹசீனா ஜென்னத் ஆசியோர் நெறிப்படுத்தினார்கள். 



--

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.