Tuesday, February 5, 2013

ரிசானாவின் சகோதரிக்கு வேலை வாய்ப்பு


சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் வீட்டுக்கு ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று விஜயம் மேற்கொண்டார்.

திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள ரிசானாவின் வீட்டிற்கு  விஜயம் செய்தபோது ரிசானாவின் சகோதரிக்கு வேலை வாய்பொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ  உறுதியளித்தார்.

ரிசானாவின் குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களையும் வழங்கினார்.அரசினால்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைக்கும் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு ஷிரந்தி ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

சிரச்சேதம் செய்யப்பட்டு உயிரிழந்த சிரானாவின் பிறந்தநாள்  04 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது. 
.news.lk

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

474572

feature content slider

Content right

.

.

.