
சம்மாந்துறை நகர மண்டபத்தில் சாதனை நாயகன் 8 கிண்ணஸ் சாதனை படைத்து உலகையே
அதிர வைத்த பரீத் நசீரின் புதல்வன் றுஜான் பர்சான் அவர்கள் தற்பொழுது
சம்மாந்துறை மண்ணில் உலகையே அதிர வைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை
சம்மாந்துறை நகர மண்டப அரங்கிலே அரங்கேற்றிக் கொண்டு
இருக்கின்றார்.2010.11.17 ஆகிய இன்று முதல் 2010.11.20ம் திகதி வரை எமது
மண்ணிலே கொடூர நாகப் பாம்புகளை தன்னுடன் கொஞ்சிக் குழாவி நடனமாடுவதும்,
நெருப்பினை தன் மேனியில் தடவுவது மற்றும்
டியுப்லைட்டினை கடித்து சாப்பிடுவதும் எம்மை ஒரு கணம் அதிர வைக்கின்றது.
இவ்வாறான அரிய செயல்களை புரியும் வீரர்களை ஆதரிக்க வேண்டியது எமது கடமையே.
நீங்களும் கண்டு கழிக்க முந்திக் கொள்ளலாம் சம்மாந்துறை நகர
மண்டபத்திற்கு.