: சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.
சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.
இலங்கை அதிபர் சேவையில், இலங்கை ஆசிரியர் சேவை, கடமையாற்றும் அதிபர்,
ஆசிரியர்கள் கிட்டத்தட்ட பல இலட்சத்திற்கு மேல் உள்ளார்கள், ஆனால் அவர்களில்
எத்தனை பேர் தமது கடமையை செவ்வென உள்வாங்கி தமது ஆசிரியர் தொழிலினை செய்பவர்களை நாங்கள் கணக்கெடுத்தல் அவை சில ஆயிரங்களை மாத்திமே எட்ட முடியும் என்பது இங்கு சுட்டிக்காடடுதல் பொருத்தமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிரியர்களை கௌரவிக்கும் பரிசித்திட்டத்திற்கு அடிப்படைத் தகைமையை நிறைவேற்றுவது எல்லாராலும் செய்யக் கூடிய காரியமல்ல அதற்காக ஐந்து வருட காலத்தில் 50 நாட்களுக்கு குறைந்த விடுமுறையைப் பெற்றால் மாத்திரமே இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். சம்மாந்துறையில் சென்னல் ஸாஹிறா வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தை பெற்றுக் கொண்ட *பௌசியா சரீப்* அவர்கள் தனது ஆசிரியர் சேவையில் கிட்டத்தட்ட 20

திகதி ஜனதிபதியினால் "* ஆசிரியர் பிரதீபா பிரபா"* விருதினை பெற்று
சம்மாந்துறை ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்று கூறினால்
அவை மிகையாகாது.
இன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும்
இந்த ஆசிரியரை இப்பாடசாலை அதிபர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
பெற்றார்கள் இவர்களை பாராட்டுகிறார்கள் என்பதை இங்கு கோடிட்டுக் காட்ட
வேண்டும்.
நானும் இந்த ஆசிரியரை வாழ்த்துவதோடு அவரது சிறந்த சேவை எமது சமூகத்திற்கும்
குறிப்பாக சம்மாந்துறை மக்களுக்கும் பெருமைகளை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.