Monday, January 30, 2012

பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளதுஎன்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி,
கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்)

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.

7.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்.

ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்ஸியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்போன்வற்றை தவிருங்கள்)

புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 1. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.





புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .

புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-
‘ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?”
தாய்க்குருவி சிரித்தது……

‘மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தேவையில்லை’
என்றது தாய்.

தாய்க்குருவி சொன்னது:-
‘வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்’
-ஈழத்து கவிஞர் காசியானந்தனின் கதை இது-
(புலிகளின் ஆத்மார்த்த கவிஞரும் இவரே ! இவரை கிழக்கின் பிறந்த ஒரு கவிஞராக மட்டுமே பார்க்கிறேன்)

அன்மைய புலம்பெயர் ஈழத்தவர் போராடங்களிலும் இந்திய தமிழர் போராடங்களிலும் கையாளப்படும் ஒரு வாசகம் இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்பு என்பதாகும் புலிகளின் ஆதரவாளர்கள் பெரிதும் இந்த வாசகத்தை கையாள்வதை பார்க்கும் போது காசி அண்ணாவின் வரிகள்தான் என் ஞாபகத்திற்கு வருகின்றன

“வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது”

எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..!

அன்மையில் தமிழ் உணர்வாளர் சீமான் தமிழ் நாட்டில் ஆற்றிய உரையில் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக தாங்கள் நாடாத்தும் போராட்டங்களுக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தரவில்லை என சாடியதோடு “முஸ்லீம்களை கொலை செய்தவன் கருணா அவனை தலைவர் விசாரைனைக்கு அழைத்தபோது சிங்களனோடுபோய் ஒட்டிக்கொண்டான்.! எங்கள் அண்ணனிடம்(பிரபாகரணிடம்) இம்ரான் பாண்டியன் என படையனியே உண்டுடா” என்று தனது கண்டுபிடிப்பை உணர்ச்சிவசப்படச் சொன்னார்

ஆகவே பாதிக்கப்பட்ட கிழக்கில் பிறந்த இஸ்லாமியர்கள் உலகங்கும் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்..!
புலிகளின் தங்களுக்குள் வாழ்ந்த சொந்த இனத்தின் மீதான இனச் சுத்திகரிப்பையும் அது முழுமையாக வெற்றியளித்ததா என்பதை ஆய்வதே எனது நோக்கம்.

அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர் போராட்டம் மிகப் புனிதாமான தமிழ் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் ஏகபோக உரிமத்தை தனதாக அறிவித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

அப்படி வடக்கு-கிழக்குவாழ் சகோதர மக்கள் மீது புலிகள் என்ன செய்தார்கள் என்பதையும் அதன் பாதிபுகள் என்ன என்பதையும் சுருக்கமாகத் தருகின்றேன்.

1987ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டாம் திகதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை உடனடியாக றஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்

ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.

முஸ்லிம் மக்களின் வீடுகள் ,வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால் கொள்ளையடிக்கப்பட்டன

இது குறித்து அண்மையில் யாழ்பாணத்தில் வாழ்ந்த யஹ்யா வாஸித் என்ற சகோதரர் இவ்வாறு எழுதியிருந்தார்.

“இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .

வாப்பா சொல்கின்றார் “மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்”. யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!!

“எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்”. “திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி”………………………………………..”

அத்துடன் சாவகச்சேரி, கிளிநோச்சி, மன்னார் முஸ்லீம்கள் என அனைவரும் வட மாகாணத்தை விட்டு முற்றாக 1990 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டனர்.

இவ்வாறு மொத்தம் 75,000 முஸ்லீம்கள் எந்த நாதியுமற்றவர்களாக எதையும் செய்ய துப்பற்றவர்களாக அமைதியாக வெளியேறினார்கள்

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றிவளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை


• 1985 ம் ஆண்டு மட்டகளப்பில் அமைந்திருந்த உன்னிச்சை என்ற கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளுடன் சேர்ந்த செயற்பட்ட ஆயுத குழுக்களினால் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப் பட்டனர்.

1983 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையின் சிங்கள காடையர்களால் தமிழ்பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அது எப்படி உலகெங்குமுள்ள தமிழர்களால் கருப்பு ஜுலையென நினைவு கூறப்படுகிறதோ அதேபோல் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் கிழக்குவாழ் முஸ்லீம்களின் கருப்பு ஆகஸ்டாக நினைவுகூறப்படுகிறது.


• 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் கிழக்கின் அக்கரைப்பற்று கிராமத்தில் 40 முஸ்லீம் தொழிலாளிகள் பின்னால் கைகளைக் கட்டி பின்தலையில் புலிகளால் சுடப்பட்டார்கள்.

• இரண்டாம்,மூன்றாம் திகதிகளில் மதவாச்சி மஜீட்புரத்தில் 15 மூஸ்லீம்கள் புலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார்கள்.

• மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மாப் பள்ளிவாயலில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பள்ளிவாயலுக்குள் புகுந்த புலிகள் துப்பாக்கிச்சுடு நடத்தி 103 பேரைக் சுட்டுக் கொன்றனர்

• இதில் 25 பேர் சிறுவர்கள் அத்துடன் அதே நேரம் மற்றோரு பள்ளிவாயலான ஹுசைனியா தைக்காவில் இரவுத்தொழுகையில் இருந்த மக்களை கைக் குண்டு வீசிக் கொன்றனர் இதில் 37 முஸ்லீம்கள் தொழுது கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டனர்.

காத்தான்குடி ஏறாவூர் இனச் சுத்திகரிப்பானது புலிகளின் தலைவரின் ஆலோசனையின் பெயரில் புலிகளின் உளவுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் நெறிப்படுத்தலில் அப்போதைய புலிகளின் கிழக்குப் தளபதிகளான ரஞ்சித், நியூட்டன், கரிகாலன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

கரிகாலன் என்பவர் கிழக்கின் களஞவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என்பதும் இவர் முஸ்லீம்களால் நன்றாக முஸ்லீம்களுக்கு எதிரி என அப்போது அறியப்பட்டவருமாவார்.

இது தோடர்பான விபரங்கள் Philp Reesயின் Dining with the terrorists என்ற நூலின் ஒரு பந்தியின் கானப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக புலிகளின் உறுப்பினர் சீதா என்பவர் கூறுகையில் “தான் பள்ளிவாயலுக்குள் புகுந்து முப்பத்தி மூன்று தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.

இந்த சீதா மட்டகளப்பு கோட்டமுனையைச் சேர்ந்தவர் இவர் அதன் பின் இந்திய அமைதிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஐரோப்பா தப்பிச் சென்றுவிட்டார்.


• ஒன்பதாம் திகதி புலிகளால் சியம்பலாகஸ்கந்தயில் வசித்த முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த புலிகள் புகுந்த போது இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கவே மக்களை விட்டுவிட்டு புலிகள் தப்பிச் சென்றனர்.

• பதினெட்டாம் திகதி கிழக்கில் ஏறாவுறில் அமைந்துள்ள சதாம் ஹூசைன் கிராமத்தில் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை ஊருக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் கொன்றனர்

• இதில் 31 சிறார்கள், 27 தாய்மார்கள் 115 ஆண்களும் அடங்குவர்.

• இச் சம்பவத்தின்போது ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா?

எந்த சர்வதேச யுத்த விதியில் ஆயுதம் எந்தாத அப்பாவி மக்களை கொல்வது அனுமதிக்கப் பட்டுள்ளதன நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்!

• பதினாலாம் திகதி ஜூலை மாதம் கிழக்கில் உள்ள ஒன்தாச்சிமடம் என்ற இடத்தில் வைத்து புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள் 69 பேரை புலிகள் கடத்தி கொலைசெய்தனர்.

• பத்தொன்பதாம் திகதி ஜுலை மாதம் கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் இருந்து காத்தான்குடிநோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களை அம்பலாந்துரை என்ற இடத்தில் வைத்து கடத்தி அதில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் ஆண் பெண்கள் அனைவரையும் தேனீரில் சைனட்டைக் கலந்து குடிக்குமாறு கொடுத்து புலிகள் கொலை செய்தனர்

• இதில் அவ்வருடம் ஹஜ் கடமையை நிறவேற்றித் திரும்பிய ஹாஜிகள், பெண்கள், குழந்தைகள் அடக்கம்

• மற்றும் இதே காலப்பகுதியில் கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு வேண்டிக் கொண்டதும் அதற்கு மறுத்த மக்கள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதும் அந்த மக்களுக்கான போக்குவரத்தை தடைசெய்ததன் மூலம் பல நாட்கள் பட்டினியில் வாடவிட்டதுடன் ஊர்களை விட்டு வெளியேசெல்ல விடாமல் தடுக்கப்பட்டார்கள்.

இன்னும் சொல்வதானால் ! 1990ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் கிழக்கிலுள்ள முஸ்லீம்கள் முழுவீச்சில் புலிகளால் தங்கள் வாழ்விடங்களை விட்ட வெளியேற வேண்டும் என்பதற்காக தாக்கப்பட்டார்கள் எனலாம்.

• கிழக்கிலுள்ள சம்மாத்துரையில் ஜாரியா மஸ்ஜிதில் உற்கார்ந்திருந்த மக்கள் மீது புலிகளால் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது இதில் 05பேர் கொல்லப்பட்டு 03பேர் காயமந்தனர் இது 23ம் திகதி ஜுன் மாதம்
அதே மாதம் 29ம் திகதி ஓட்டமாவயில் ஆறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் இதில் ஒட்டமாவடி ஹிஜார் மஸ்ஜிதின் தலைமை நம்பிக்கை பொறுப்பாளரும் அடக்கம்

இரண்டாம் திகதி ஜுலை மாதம் அக்கரைப்பற்றில் பதினான்கு இஸ்லாமிய விபசாயிகள் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்

12ம் திகதி ஆகஸட் மாதம் நெற்காணிகளில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்லீம் விபசாயிகள் நால்வர் சம்மாந்துரையில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஆகஸ்ட் மாதம் இன்னும் எட்டு முஸ்லீம்கள் அக்கரைப்பற்று டவுனில் வைத்து புலிகளால் சுடப்பட்டனர்.

இவ்வாறு புலிகளின் இன சுத்திகரிப்பு பற்றி எழுதிக் கொண்டே போகலாம்….

• ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான அழிஞ்சிப்பொத்தானையில் வசித்துவந்த 69 மூஸ்லீம் மக்களை கொலை செய்யப்பட்டனர்.

• 15ம் திகதி ஏப்ரல் மாதம் 1992ம் ஆண்டு பொலநறுவையின் எல்லைக் கிராமங்களான பள்ளியகோடல, அக்பர் புரம், அகமட் புரம், பங்குரான ஆகிய கிராமங்களில் வாழ்ந்த விவசாயிகளான மூஸ்லீம் மக்கள் 187 பேரைக் கொலைசெய்தனர் இதில் கற்பினித் தாய்மார்கள் உள்ளடக்கம்.

இந்த தாக்குதல் தொடர்பான செய்தியை அவுஸ்ரேலியாவில் வெளிவரும் முஸ்லீம் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை தனது முதல் பக்கத்தில் 30திகதி ஒக்டோபர் மாதம் 1992 ஆண்டு பிரசுரித்தது.

• மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லீம்களின் பூர்விகச் சொத்தான வயல் நிலங்கள் பறிக்கப்பட்டதும் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டதும் வழைச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை மற்றும் பல ஊர்களில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் உடைத்து கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டதும்.

இவ்வாறு பல வழிகளில் தன்னுடன் சகோதரர்களாக வாழும் சக மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய முனைந்து வடக்கைபோல கிழக்கையும் கைப்பற்ற புலிகள் பிராயத்தனம் எடுத்தனர்

அது தோல்வியை தழுவிக் கொள்ளவே முஸ்லீம்களின் அரசியல் எழுச்சியை தடுக்க தங்களால் ஆன முழுப்பலத்தையும் பிரயோகித்தனர் ஆயுதப்போராட்டத்தில் நம்பிகையில்லாத இலங்கை முஸ்லீம்கள் மீதும் அவர்களின் அரசியல் தலைவர்கள் மீதும் பல தாக்குதல்களை மேற்கொண்டனர்

இதில் பல தலைவர்களை, சமூக சேவையாளர்களை, சிந்தனை வாதிகளை முஸ்லீம்கள் இழந்தனர் இதில் முஸ்லீம்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்த்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவரும் இலங்கை முஸ்லீம்களின் தேசிய தலைவருமான மர்ஹும் ஏம்.எச்.எம். அஸ்ரப் அவர்ளின் இழப்பே.

அரசியல்துரை, கல்வித்துரை ரீதியாக முஸ்லீம்களின் வளர்சியையும் அகிம்சை வழியில் அரசியல் ரீதியாக போராடி தங்களது உரிமைகளை கௌரவமாக பெற்று முஸ்லீம்கள் முன்னேறுவதை புலிகளின் தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

தங்களின் ஏக பிரதிநிதி வாதம் சக தமிழ் பேசும் மக்களாள் ஏற்றுக் கொள்ளப் படாததையும் புலிகளின் தந்தோராபாய நகர்வுகள் பயமுறுத்தல்கள் தொடர் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அடிபணிய மறுத்தது புலித் தலைமை பீடத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது

எனவே முஸ்லீம் சமூகத்தின் தலைமையை ஒழிக்க முடிவெடுத்து காய்கள் புலிகளின் தலைமையால் நகர்தப்பட்டு இலங்கை முஸ்லீம்களின் தன்னிகரில்லா தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்பாறை மாவட்டத்திற்கு ஹெலிக்கப்டர் மூலம் செல்லும் போது அவருடம் பத்திரிகையாளர் என்ற பெயரில் சென்ற தற்கொலையாளி மூலம் நடு வானில் குண்டை வெடிக்கவைத்து முஸ்லீம்களின் தலைமை அழிக்கப்பட்டது.

இதன் மூலம் கிழக்கில் மிகப் பலமான முஸ்லீம் சமூகத்தை அடக்கி அடிபணிய வைக்க வேண்டும் என்பதுடன் உடற் பிறப்புக்களாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவையும் சீர் குலைத்து ஏக பிரதிநிதியாக மாற பிரபாகரன் பகல் கனவு கண்டார்.

பாரத பிரதமரின் கொலையை புலிகள் நேரடியாக ஏற்காதது போலவே இதையும் அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் அந்த தற்கொலையாளியை மாவீர்ர் அந்தஸ்து வழங்கி பின்னாலில் கௌரவித்ததன் மூலம் அதை புலிகள் ஏற்றுக் கொண்டனர்.

இது போல புலிகள் சக இன மக்கள் மீதும் தங்கள் இனத்தில் புலிகளை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கும் இழைத்த கொடுமைகள் எழுதில் வடிக்க முடியாதவை விரிவு கருதி அவற்றை நான் தொட வில்லை.

இன்னும் தாயகத்தில் வட கிழக்கு மண்னில் பூர்விகமாக வாழ்ந்த சிங்கள மக்கள் இப்போது எங்கே? அவர்களை புலிகள் ஏற்றுக் கொண்டு சமமாக வாழ சந்தர்பம் அளித்தார்களா? அல்லது இன சுத்திகரிப்பு செய்தார்களா?

1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் வாழ்ந்த கிராமங்களான தாந்தாமலை,வெளிஓயா, பதவியா ஆகிய இடங்களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மிகுதி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப் பட்டனர்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் கோனகல என்ற இடத்தில் வாழ்ந்த 52 சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்டனர் இதில் அதிகமாக மிகச் சிறிய வயதான குழந்தைகளும் அடங்குவர்.

கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களில் மிகவும் மோசமானது இரண்டாம் திகதி ஜுன் மாதம் 1987ல் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுந்தலாவ எனும் இடத்தில் புத்த பிக்குகளாக பயின்று கொண்டிருந்த 7 முதல் 13 வயதையொத்த புத்த துறவி சிறார்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலாகும் இதில் 33 புத்த துறவி சிறார்கள் மற்றும் அவர்களின் குருவும் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர்.

1982 ஆண்டு ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த புலிகள் 1990 ஆண்டு காலப்பகுதியை சிறுபான்மையில் மற்தொரு தனிப்பட்ட கலாச்சார விழுமியங்களை கொண்ட இனமான முஸ்லீம் மக்களை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் ஈழ மண்ணிலிருந்து இன அழிப்புச்செய்து ஒழித்துவிடவே பெரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்

அத்துடன் ஈழத்தில் பரம்பரையாக வாழ்ந்துவந்த சிங்கள பாமர மக்களையும் இனச் சுத்திகரிப்பு செய்தனர் இதில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரளவு வெற்றியளித்தாலும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் படுதோல்வியை அளித்தது மட்டுமல்லாது புலிகளை சர்வதேசப் பயங்கரவாதிகள் என்ற புனிதமான இடத்துக்கு கொண்டு சென்றது என்பதே உண்மை.

இதற்குக் காரணம் முஸ்லீம்கள் அரசியல் ரீதியான போராட்ங்களை தங்களுக்குள் முன்னெடுத்து தங்கள் நிலையை உலக அரங்கிக்கு அமைதியாய் கொண்டு சென்றதாகும்.

இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?

அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?

சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…!
இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?
ஆகவே! புலிகளுக்கு ஆதரவாக் கோசம் போடாமல் யுத்ததிற்குள் சிக்குண்டு தவிக்கும் எம் மக்களுக்காக் கோசம் போடுங்கள் நாங்களும் உங்களுடன் இருப்போம்!

புலி ஆதரவுக் கோசங்களை யாரும் கணக்கெடுக்கப் போவதில்லை!
சீக்கியர்களின் பொற்கோயில் மீதான இந்திய இரானுவத்தின் தாக்குதலை சீக்கியர்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ .!

ஈழத்தில் இந்தியப் படையினரின் தாக்குதலை நீங்கள் எவ்வாறு மன்னிக்க வில்லையோ…!

இந்தியா! பிரதமர் ராஜிவ் காந்தி மீதான புலிகளின் தாக்குதலை எவ்வாறு மன்னிக்கவில்லையோ..!

அதே போன்றே……..! உலக வாழ் முஸ்லீம்களும் புலிகள் இலங்கை வாழ் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு தாக்குதல்களை மன்னிக்க மாட்டார்கள்…. என்பதுடன்

புலிகளை எந்தக் காலத்திலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களது ஒரு பிரதிநிதியாக்க் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும்.

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப்பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.

இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது – ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?” என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

‘மரங்கொத்தியால் அது முடியாது” என்றது கயிறு.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

கயிறு சொன்னது:-
‘நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை”


SOURCE: kizhakkan

தேசத்துக்கு மகுடம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை  ஓயாமடு பிரதேசத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான  ‘தேசத்திற்கு மகுடம்’ தேசிய அபிவிருத்தி கண்காட்சியை   உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களுடன் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதம் 4ம் திகதி மாலை ஜனாதிபதி அவர்களினால் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்  பெப்ரவரி மாதம் 5ம் திகதி முதல் 10 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி கூடங்கள் திறந்திருக்கும்.

இலங்கையின் பாரிய கண்காட்சியான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களும்இ ஆசிரியர்களும் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி சீட்டை பெற்று ஏனையோர் கண்காட்சியைப் பார்வையிடலாம்.  WWW.NEWS.LK

Saturday, January 28, 2012

வாசிப்பு மேம்பாட்டு விழா - 2011


சென்ற வருடம்; வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி நூலகத்தினால் நடாத்தப்பட்ட வாசிப்பு மேம்பாட்டிற்கான கட்டுரை கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2012.01.27ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 2011 ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றிய நிறுவனங்கள் ற்றும் பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுக்கு அதிதிகளாக

உதவி உள்ளூராட்சி ஆணையாளர்- ஏ.ஜே.எம்.இர்ஷாட்
பிரதேச செயலாளர் - ஏ.மன்சூர்
பிரதேச சபைத் தவிசாளர் - ஏ.எம்.எம்.நௌஷாத்

பிரதேச சபை உதவி தவிசாளர் - ஏ.கே.கலீலுர் ரஹ்மான் ஆகிய பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Thursday, January 26, 2012

இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகாரிக்க முடியாது என சவூதி அரசு கை விரிப்பு!

இலங்கைக்கான ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டாவை அதிகாரிக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


தற்போது மினாவிலுள்ள வசதிகளை கருத்தில் கொள்ளும்போது இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜித்தாவிலுள்ள ஹஜ் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சந்தித்தபோதே அமைச்சர பௌசி இந்த வேண்டுகோளை விடுத்தார். சென்ற வருடம் ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டா 2800 பேராக இருந்தது. இது இறுதி நேரத்தில் 3800 ஆக அதிகரிக்கப்பட்டபோது இந்த அவசர நிலைமையை பயன்படுத்தி ஹஜ் யாத்திரை ஒழுங்கு செய்யும் முகவர்கள் கூடிய இலாபமீட்டினர் என அமைச்சர் பௌஸி இதன்போது விளக்கினார்.

எனினும் இம்முறை ஒரே தடவையில் கோட்டா வழங்கப்படுமென சவூதி அமைச்சர் கூறியதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார். 2010 இல் வழங்கப்பட்ட கோட்டாவான 5800 பேரை இம்முறையும் வழங்கும்படி கேட்டு கொண்டதாக அமைச்சர் பௌஸி மேலும் கூறினார். இந்த சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை கௌன்ஸல் டாக்டர் ஏ.உதுமாலெப்பையும் கலந்து கொண்டார். METROMIROR.COM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்


அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இனைந்து கூட்டுக் குழு இன்று 26.01.2012 ஆம் திகதி வியாழக்கிழமை முழு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இவ் அடையாள வேலை நி று த்ததில் ஈடுபட்டுள்ளது இதன் காரணமாக அலுவலக வேலைகள் அனைத்தும் இஸ்தம்மிதம் அடைந்து காணப்படுகின்றது.

இவ்அடையாள வேலை நிறுத்தமானது சகல பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Tuesday, January 24, 2012

சம்மாந்துறையில் சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பம்


சம்மாந்துறை பொது நூலக வளாகம், மற்றும் அதனை அண்மித்த வெளியில் (நெல்லுப்பிடிச் சந்தி) சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதனுடைய ஆரம்ப கட்டமாக ஆசனங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத்  அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, January 23, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன் உம்றா பயணம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் அப்துல் றஹீம் றஷாத் அஹமட் எதிர்வரும் 2012.01.24 அன்று உம்றா கிரிகையை நிறைவேற்ற மக்கா செல்கிறார். இவர் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஹீம்இ ஆசிரியை எம்.ஏ.றாஷிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.

இவர் 2010ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9யு பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளார். இதனை கௌரவிக்கும் முகமாக 2011.12.11ல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில்  ஆநுPளு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள்இ பரிசில்கள்இ பாராட்டுக்களை பெற்றதோடு புனித உம்றா கிரிகையை நிறைவேற்றுவதற்கான ஏழு நாள் இலவச பிரயாண டிக்கட்டையும் பெற்றுக்கொண்டார்.

மேலும்இ இலங்கையில் இருந்து இவ்விலவச உம்றா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஆறு மாணவர்கள் பெற்றதோடு எமது பிரதேசத்தில் இவருக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
 

Saturday, January 21, 2012

வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!

வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வாபஸ்பெற்றுக் கொள்ள இணங்கியுள்ளது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில்அறிவித்துள்ளது.(எம்.ரி.-977)

தாமரைக் கோபுரத்துக்கு கடந்த வெள்ளிக் கிழமை அன்று அடிக்கல் நடப்பட்டது!


கிழக்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்துக்கான அடிக்கல் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடப்பட்டது.

கொழும்பு பேரை வாவியின் அருகில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள 3.06 ஏக்கர் நிலத்தில் இந்த பாரிய கோபுரம் அமைக்கப்படவூள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


“தாமரைக் கோபுரம”; எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பல நோக்குக் கோபுரம் அமைக்கப்பட்டதும் இதன் மூலம் 50 ஒலிபரப்புச் சேவைகளுக்கும் 50 தொலைக் காட்சிச் சேவைகளுக்கும் 20 தொலைத் தொடர்பாடல் சேவைகளுக்குமான வசதிகளைக் கொண்டிருக்கும்.
அத்துடன் உல்லாசமாக பொழுதைப் போக்கக்கூடிய இடமாகப் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்படவூள்ளன.
இந்த தாமரைக் கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்:
ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவூ இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹ மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகள் அடைந்துள்ள அபிவிருத்திக்கு இணையாக எமது நாடடையூம் முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி  இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கூறினார்.(எம்.ரி.-977)

Thursday, January 19, 2012

"ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்"

ஓடுற மாட்டிறைச்சியின் சுவை!!!!!
சம்மாந்துறை அழகிய கிராமம் மக்களில் மடடுமல்ல இறையளித்த இயற்கையின் கொடைகளிலுமே.

அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை) அராபிய ,இந்திய வெளிநாட்டு வர்த்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும், மத்திய நாட்டு மக்களிற்கான வியாபாரப் பாதையாகவும், தவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரண்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் விஞ்சியவர்களே, இவர்களின் உணவுப்பழக்க வழக்கமும் விருந்தோம்பலும் சிறப்பானதே.........
.
சம்மாந்துறை கல்வி, விவசாயத்திலும் மடடுமல்ல கால்நடை வியாபாரத்திற்கும் பெயர்போன இடமாகும்
அந்த வகையில் இங்குள்ள பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இறைச்சி வியாபாரிகளும், புனித காலங்களில் தானம் வழங்குபவர்களும் தேவையான மாடுகளை வாங்கினர்.
அதன்போது காலையிலுள்ள (பெருமளவான மாடுகள் தங்கவைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட் பகுதி அல்லது மாடுகளின் கூட்டம்) மாடுகளிற்கு மத்தியில் மாட்டுக்காரர் நின்று கொண்டு கயிறொன்றை சுழற்றுவார். அப்போது உற்சாகமான ,ஆரோக்கியமான மாடுகள் காலையிலிந்து வெளிறயேறுவதற்காக சுற்றி ஓடும்.
அதன்போது அவற்றில் மிக சிறந்த மாட்டை வாங்கிக் கொள்வார்கள்.அவற்றையே உணவுக்காகவும், தானம் வழங்கவும் பயன்னடுத்தினர்.

இதனாலேயே இவர்கள் "ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்" என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இது அவர்களை இகழச்சிக்காக அழைக்கும் குறிசொல் எனப்புரியப்பட்டது.
இவர்கள் மக்களை இகழ்வதாக எண்ணிப் புகழ்வது முரண்நகையே....



தகவல்:- மூத்த கால்நடை கிராம வைத்தியர்

சம்மாந்துறை வரலாறு

சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வரலாறு

கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து ஐந்து பாதைகள் மலைநாட்டை நோக்கிச் சென்றுள்ளதாக “மட்டக்களப்புத் தமிழகம்” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்துக்;கு முந்திய காலங்களிலும் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்கும், வெளிநாட்டார் சம்மாந்துறைத் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டிவிட்டுச் சென்றுள்ள தகவலை “காத்தான்குடி வரலாறு” குறிப்பிடுவதையும் அறிகின்றோம்.
டிஒய்லி – Dioyly என்ற பிரித்தானியத் தூதுவர் “போர்த்துக்கீசரின் காலத்தில் சம்மாந்துறை கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக அமைந்திருந்தது” என தனது தினக் குறிப்பில் பதிந்துள்ளார்.
1676இல் ஒல்லாந்து அதிபதியாகக் கடமைபுரிந்த ஜேக்கப் பெர்னாந்து “மட்டக்களப்பு என்ற சம்மாந்துறையையும் கண்டியையும் ஐந்து காட்டுப்பாதைகள் இணைத்தன” என்று கூறிய ஆதாரமும் கிடைக்கின்றன. ஒல்லாந்து தளபதியான ஸ்பில்பேர்க்கன் என்பவர் இந்தியாவில் “மட்டக்களப்பு ஆறு எங்கே உள்ளது” என விசாரித்தறிந்து சம்மாந்துறையை வந்தடைந்த குறிப்பேடுகளும் உண்டு. சம்மாந்துறை முஸ்லிம்களின் உதவியோடு கண்டி அரசன் விமலதர்மசூரியனை சந்திக்கச் சென்றுள்ளான்.
இவ்வாறு வரலாற்று ஆதாரங்கள் சம்மாந்துறைத் துறைமுகத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும், கண்டி அரசனுக்குள்ள தொடர்புகளையும் விளக்குவதை அறியலாம். சம்மாந்துறை கடல் சார்ந்த துறைமுகமா? என்ற கேள்வி எழலாம். மட்டக்களப்பு வாவியூடாக அதன் தென்பகுதியின் கரைதான் சம்மாந்துறை. பரந்து விரிந்த இவ்வாவியின் தென்பகுதியைத்தான் மட்டக்களப்பு என பெயர்குறித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. “புளியந்தீவு” என்ற இடத்தில் 1628இல் போர்த்துக்கீசர் தமது பாதுகாப்புக்காக கோட்டையைக் கட்டிய பின்தான் புளியந்தீவு மட்டக்களப்பாக மாற்றமடைந்தது. இன்றும்கூட சம்மாந்துறையில் மட்டக்களப்புத் தரவை – 01,02 என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதை அறியலாம்.
இந்தியாவில் இருந்து முக்குகர் வருகை , சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியின் வருகை, சிந்துபாத்தின் வருகை, அராபியர் , பாரசீகர் வருகை என்பன மட்டக்களப்பு வாவியூடாக சம்மாந்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கையினுள் பிரவேசிக்கும் பிரயாணப் பாதையாகச் சம்மாந்துறை இருந்து வந்துள்ள வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பலபல எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றேன்.

பெயர்க்காரணம்

சம்மான் - துறை என இரு பதங்களாக வகுக்கும்போது துறை என்பதற்கான காரண காரியங்களைக் கண்டோம். இந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் ‘சம்மான் காரர்’ என அழைக்கப்பட்டனர். கொழும்பு ‘சம்மான் கோட்டுப் பள்ளி’ இந்திய முஸ்லிம்களின் அடையாளச் சின்னம். அத்துடன் சாமான்கள் வந்திறங்கிய ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகமாக இருந்தபடியாலும் சாமான்துறை, சம்மாந்துறையாக பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பன்’ என்பது மலாய மொழியில் வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வள்ளங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்திய முஸ்லிம் வியாபாரிகளும், மலாயர்களும் வர்த்தக நோக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியூடாக, அதன் தென்பகுதித் துறையில் வந்திறங்கிய படியால் சம்மாந்துறை என பெயராயிற்று எனலாம்.
மிகப் பழைய காலந்தொட்டு சம்மாந்துறை நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்கான ஆதாரங்கள் அனேகமுள்ளன. சிந்துபாத்தின் கூற்றில் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்ததாகவும், அவர் அரபியில் தன்னுடன் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே ‘சம்பா’ என்ற அரிசியை ஏற்றுமதி செய்த துறையாகவும் விளங்கியதால் சம்மாந்துறையாகவும் பெயர்பெற்றிருக்கலாம். இங்குள்ள பழைய உறுதி ஆவணங்களில் ‘சம்பாந்துறை’ எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சம்மாந்துறையின் முக்கியத்துவத்தினால் இங்கு அமையப்பெற்றிருந்த பாரிய சந்தை (ஆலையடி என்றழைக்கப்பட்ட பழைய மார்க்கட்) யின் அவசியத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள், இறைநல்லடியார்கள் வந்துகொண்டிருந்ததினால் அராபிய முஸ்லிம்களின் வருகையும் தவிர்க்க முடியவில்லை. அதனடிப்படையில் சிறுசிறு அளவில் முஸ்லிம்களின் குடியிருப்புக்களும் இங்கு அமையப்பெறலாயின. துறைமுகமும், சந்தை வசதிகளும் அமையப்பெற்றிருந்த வகையால், உள்ளுர் வாசிகளின் உதவிகளோடு ‘தாவளம்’ என்றழைக்கப்படும் மாடுகளின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்காக சம்மாந்துறையில் தாமதித்துச் செல்லவேண்டியிருந்ததால், வணக்கஸ்தலத்தின் அவசியம் உணரப்பட்டதால் முதன்முதலாக 12ம் நூற்றாண்டளவில் ‘முகையதீன் பள்ளி’ என்ற முதல் பள்ளிவாசல் சம்மாந்துறையில் அமையப்பெறலாயிற்று. முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி என்ற மார்க்கப் பெரியார் அக்காலத்தில் பிரபல்யமான மார்க்க அறிஞராக விளங்கியமையால், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் ‘முகையதீன்’ என்ற பெயரை இப்பள்ளிக்கு வைத்திருக்கலாம்.
இதைத் தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டளவில் சம்மாந்துறை துறைமுகத்தில் வந்திறங்கிய சரக்குக் கப்பலில் இருந்து இரண்டு இறைநல்லடியார்களும், அவர்களுடன் ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் இன்றைய பெரியபள்ளியடியில் இருந்த மரத்தடியில் இளைப்பாறினர். இதன் அண்மையிலிருந்த சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இவ்நல்லடியார்களின் வருகையைக் கேள்விப்பட்டு அவர்களைத் தரிசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் மத்திய கிழக்கைச் சேர்ந்த சாயலையுடையவராகவும், மற்றவர் தென்னிந்திய சாயலையுடையவராகவும் காணப்பட்டனர். இவ்விருவரையும் அக்குழந்தையையும் அப்போதைய சின்னப்பள்ளியில் தங்குமாறு மக்கள் வேண்டியும் மறுத்த படியால், பெரிய பள்ளி வளவிலேயே அவர்களுக்கான இருப்பிடம் அமைத்துக் கொடுத்தனர். அன்றைய சம்மாந்துறை முஸ்லிம்கள் கோசப்பா, கோஸ்முகையதீன் அப்பா, உம்முகுல்தூம் என இவர்களை அழைத்தனர். இவர்களது மார்க்கப்பிரசங்கம், பேணுதலான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அப்பிரதேசத்தில் இஸ்லாத்தின் இருப்பும், வளர்ச்சியும் அதிகரிக்கலாயின. முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் இந்நல்லடியார்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கி வரலாயினர். இவ்விறை நல்லடியார்களின் மறைவின் பின்னர் மக்கள் இவர்களை அவுலியாக்கள் என மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்ததுடன் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர். இதனால் முதலாவது பள்ளிவாசல் “முகையதீன் (சின்னப்பள்ளி) பள்ளிவாசலுடன் இரண்டாவது பள்ளியாக அவுலியாவின் பெயரில் “கோசப்பா பள்ளி”யும் உதயமாயிற்று.
அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தை உம்முகுல்தூம் அப்பகுதி முஸ்லிம் குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்து வாழ்க்கைப்பட்டு குடும்பமாக சீவித்து வரலாயினார். உம்முகுல்தூம் என்ற இப்பெண்னின் வம்சத்தவர்களே இன்று சம்மாந்துறையில் “கோசப்பா குடி”யினர் என்றழைக்கப்படும் வம்சத்தவர்.
1800ஆம் ஆண்டளவில் கோசப்பா பள்ளி என்ற சிறு குடிசை ஓரளவுக்கு கல்லாலும் , சிப்ப்p ஓட்டினாலும் விஸ்தரிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு ஜும்ஆத் தினங்கள் முகையதீன் பள்ளியிலும், கோசப்பா பள்ளியிலுமாக மாறி மாறி நடைபெற்று வரலாயிற்று. இவ்விரு பள்ளிகள் தவிர சம்மாந்துறையின் சுற்றாடலில் இறை நல்லடியார்களின் தங்குமிடங்களாக இருந்த இடங்களும் பள்ளிகளாக உருப்பெற்றென. கலந்தரப்பா பள்ளி மல்கம்பிட்டியிலும், குருந்தையடியப்பா குடாவட்டையிலும், காட்டவுலியா சேனைவட்டையிலும், வீரயடியப்பா கொண்டவட்டுவானிலும் கண்கத்தியப்பா சின்னப்பள்ளி ஒழுங்கையிலும் அமையப்பெறலாயின.
சம்மாந்துறையில் முஸ்லீம்களின் குடியிருப்புக்கள் வளர்ந்து வருவதின் அவசியத்தின் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியளவில் தக்கியாப் பள்ளி தோற்றம்பெற்றது. அன்றைய காலக் கட்டத்தின் சிறிய பள்ளியாக இருந்த படியால் “தைக்கியா” எனப் பெயர் பெற்றது. மத்ரஸா நடத்தப்பட்டு வந்த இடத்திலும் பள்ளியொன்று தேவைப்பட்டதால் அவ்விடத்தில் “மத்ரஸாப் பள்ளி” தோற்றம்பெற்றது. 1947ஆம் ஆண்டளவில் இப் பள்ளி அமையப்பெற்றதெனலாம். ஊரில் புதிதாக தோன்றிய பள்ளியாகையால் காலகெதியில் மத்ரஸாப்பள்ளி என்ற பெயர் மாற்றமடைந்து “புதுப்பள்ளி” என வழங்கலாயிற்று. இன்று “மஸ்ஜிதுல் உம்மா” என பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. சம்மாந்துறையின் அன்றைய மரைக்கார் சபை உறுப்பினராக இருந்த “கண்ணாடி மரைக்கார்” எனும் பெரியார் இவ்வளவை அன்பளிப்புச் செய்திருந்தார் .
சம்மாந்துறையின் குடியிருப்புக்கள் தெற்கு நோக்கி “ஜே புளக்” குடியேற்ற பிரதேசங்களிலும், மேற்கு, கிழக்கு நோக்கியும் விரிவடையத்தொடங்கின. இதன் நிமித்தம் செட்டிட வட்டையில் மஸ்ஜிதுல் ஸலாம், சம்புமடுவில் மஸ்ஜிதுல் அழ்பர், கைகாட்டியடியில் மஸ்ஜிதுல் ஜாரியா, விளினையடியில் மஸ்ஜிதுல் ஜலாலியா, வீரமுனைப் பகுதியில் மஸ்ஜிதுல் கைர், மட்டக்களப்புத் தரவையில் மஸ்ஜிதுல் நகர் என பள்ளிகளின் தொகைகள் விரிவடைந்து செல்லலாயின. இவ்வாறு பள்ளிகளின் தொகை 1980களில் 25 பள்ளிகளாக இருந்த படியால் இவற்றின் நிருவாகத்தை ஒரேயமைப்பில் கொண்டுவரும் முயற்சியில் ஊர் பெரியார்களும், அன்றைய நம்பிக்கையாளர் சபையினரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக “மஜ்லிஸ் அஷ்ஷ{ரா” அமைப்பு 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் சகல பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும், குடிமரைக்கார்மார்களும், சமய, சமூக, கலாசார, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வமைப்பு சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் ஒரு நம்பி;க்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷ{ரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும,; ஒவ்வொரு ஜமாஅத் நிறுவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷுராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷ{ரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.

சம்மாந்துறை பிரதேசத்திக்கான

Tuesday, January 17, 2012

சுகாதார பணி மனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்




இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சுகாதார பனிமனையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில்,
M.T.NAAZAR (P.H.I)
M.I.THKKEET (S.D.O)
V.LOKASVARAN (POLICE)
U.L.MAJEET (S.M.O)
A.A.MOHAMED

மற்றும் பிரதேச சபை சிற்றுழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் ஒவ்வொரு மக்களின் வீடுகலையும் பார்வையிட்டு டெங்கை உண்டாக்கும்,பொருட்க்ளை அகற்றப்பட்டது.மேலும் சூழலையும் சுத்தப் படுத்திய வேளைதிட்டமாக இது இடம் பெற்றது.

Monday, January 16, 2012

சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா கொண்டாட்டம்




இன்று சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் தரம்1 இற்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா பாடசாலையின் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஜனாப்M.I.MAHIR அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலையக்கல்வி I.S.A (I.C.T) ஜனாப் M.M.M. JOWFER அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு பிரதம அதிதி உரை நிகழ்த்துகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்களை வழிகாட்டல்,மாணவர்களை பெற்றோர் கவனிக்கும் மனப்பாங்கு மற்றும் சுய கற்றல் வழிகாட்டல் போன்றவற்றையும் இன்னும் பல விடயங்கலையும் உரையாற்றினார்.








10 வயது சிறுமியின் கற்பை காப்பாற்றிய அல்குர்ஆன் – சவூதியில் சம்பவம்

நன்றி யாழ் முஸ்லிம்
”இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான்.
திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் ‘காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.
வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை ‘சத்தம் போடாதே!’ என்று மிரட்டவும் செய்துள்ளான். ‘உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது. பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.
வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் ‘குர்ஆன் ஓதுவதை நிறுத்து’ என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது. “Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw” she said.
அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.
திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.
-நன்றி: அரப் நியூஸ் -
இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இந்த சம்பவத்தை படித்த போது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிர்ந்துகொள்கிறேன்.
2272. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:” உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன்.
அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார்.
‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!” என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்

Saturday, January 14, 2012

சாந்தி வேண்டிப் பொங்குவோம்.

எத்தனையோ பொங்கல் எங்கள் தமிழ் பண்பாட்டில்
சர்க்கரைப் பொங்கல் சந்தணப் பொங்கல்
பால்ப் பொங்கல் பழப் பொங்கல்
மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல்
இன்னும் எத்தனையோ எம்மிடத்தில் இருந்தும்..... 

மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயல் காட்டை உழுது பச்சை வயலாக்கி
பருவத்தோடு கதிர்பறிய போடியார் வட்டைக்குள்
வேளாமை வெட்டப்போய் ஊரெல்லாம் சீதேவி
உணவளிக்க உதவிய ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும்
தமிழ் பொங்கலே...  தைப் பொங்கல் 

பகலவன் கோலம்போட பறவைகள் பண்ணிசைக்க
மலர்கள் மணம் பரப்ப மரங்கள் தலையசைக்க
மட்டக்களப்பு பால்சேத்து யாழ்ப்பாண வெல்லமிட்டு
திருமலை அறுசுவை சேர்து வவுனியா பழமிட்டு
அம்பாரை அரிசு அனைத்தையும் ஒன்றுசேர்த்து 
பொங்குவோம் பொங்கல்
வெள்ளம் மடைதிறந்து வேகமாய்ப் போவதுபோல்
நம் உள்ளத்து வேதனைகள் இல்லாது பொங்குவோம்.. 
இன்னும் எனது நாட்டில் எனது மண்ணில்
தூர விரட்டப்பட்டு தூங்கக்கூட இடமில்லாத
துணியைத் தொட்டிலாக்கி பனியிலும் மழையிலும்
படுத்துறங்கும் எம் இனத்தின் சாந்தி வேண்டிப் பொங்குவோம்.
பண்பாடு பறித்தெறியப்பட்டு சமயம் சபைக்காகாமல்
விழுமியம் வெறுக்கப்பட்டு வெட்கத்தினை விலைகேட்கும்
அநாகரிகம் அழியப் பொங்குவோம்.
இமைமூடிய பொழுதிலும் உன் நினைவுகளை
மூடாமல் மனக்கதிரையில் சிம்மாசனம் தந்து
மரணத்தின் கடைசி மூச்சிலும் உயிரையே
சுவாசிக்கும் காதலரை வாழ்த்திப் பொங்குவோம்.
பசிபோக்கப் பொங்குவோம் பாவம் அழியப் பொங்குவோம்
அநாதைகள் இல்லையென அறைகூவிப் பொங்குவோம்
அன்பை பகிரப் பொங்குவோம் அறிவை ஊட்டப் பொங்குவோம்
துயரில் கைகொடுக்கப் பொங்குவோம் துட்டரை விரட்டப் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல் எங்கும் அன்புப் பொங்கல்.....

ஏ.எல். பரீட்சை - நிபுணர் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது

2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடை பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. பெறுபேறுகள் தொடர்பாக ஏற்பட்ட தவறுகளை குறுகிய காலத்திற்குள் பரீட்சைகள் திணைக்களம் திருத்தியுள்ளமை தமது நிலைப்பாடென குறித்த குழுவினர் அறிவித்துள்ளனர்.
பரீ்ட்சைப் பெறுபேறுகளை கணிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையின் போதே மாவட்ட தரப்படுத்தல் தொடர்பான குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட, மாவட்ட தரப்படுத்தலுடன் கூடிய பரீட்சைப் பெறுபேறுகள் தவறுகளின்றி உரிய முறையில் வெளியிடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குளறுபடிகளுக்கு காரணமான விடயங்களை நீக்குவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பிரச்சினைகளை சமர்ப்பிக்குமாறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கு அமைய கிடைத்த மேன்முறையீடுகளை விசாரணை செய்தபோது பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பான தகவல்கள் ஆதாரங்களுடன் நிரூபனமாகவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான அறிவித்தலை விடுக்கும் போது அதிகளவிலான புத்திஜீவிகளிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனைத் தவிர இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளையும் ஜனாதிபதி நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் திணைக்களம் தமது தொழிநுட்ப பிரிவுக்காக முழுநேர தொழிநுட்ப ஆலோசகரின் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பரீட்சை நடவடிக்கையின் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தற்கால ஆய்வொன்றை துரித கதியில் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்டுள்ள தவறுகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் தாரா விஜதிலக்க தலைமையிலான நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்த்தன, ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரஞ்ஜித் பிறேமலால் டி சில்வா, றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

சம்மாந்துறையில் மேலும் ஓர் மாணவன் சட்டக் கல்லூரிக்குத் தேர்வானார்

சம்மாந்துறை மண்னை பிறப்பிடமாக கொண்ட U.L.MOHAMED SAMEEM  என்பவர்2012/01/10  சட்டக் கல்லூரி அனுமதியை பெற்றுள்ளார்.

மேலும் அவருக்கு கிடைத்த சட்டக் கல்லூரி அனுமதியையிட்டு எமது SAMMANTHURAI.TK நிறுவனம் வாழ்த்துகலையும் பாராட்டுகலையும் தெரிவிக்கிரது.

அமைச்சர் மர்ஹும் அப்துல் மஜீட் அவர்களுக்கு நினைவு நிகழ்வு




இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்UNIVISON  இன் ஏற்பாட்டில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் மர்ஹீம் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்கலுக்கான நினைத்தல் நிகழ்ச்சி இன்று இடம் பெற்றது.இதில் துஆ பிராத்தனை,நினைவுரைகள்,போன்ற பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.இந்த நிகழ்வில், கெளரவ அமைச்சர்  P.THAYRATHNA, பேராசிரியர்                 S.M.ISMAIL   (lexure seusl), தவிசாலர்(str)                     A.M.M. NOWSHADஇதன் போது ஆளுமையின் அடையாளம்  என்ற நூல்  வெளியிடப்பட்டது.




Friday, January 13, 2012

புலிகளின் முத்திரை வெளியிட்ட நபர் மீது பிரான்ஸில் விசாரணை ஆரம்பம்!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட  புலிகளின் படங்கள் பதித்த அஞ்சல் முத்திரைகளை வெளியிட்டார் என்று அடையாளம் காணப்பட்ட நபர் மீது பிரான்ஸ் சட்டமாதிபர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன
.
பிரான்ஸின் லா போஸ்ட் நிறுவனத்தின் ஊடாக இலகுவாக யாரும் முத்திரைகளை வெளியிடலாம் என்ற சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி முத்திரை வெளியிட்டார் என இவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இவர் பிரான்சின் முன்னணி தமிழ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த முத்திரை விநியோகதினால் பிரான்ஸ்சுக்கான தூதுவர்- இலங்கை அரசிடம் மன்னிப்பு கோர வைகப்பட்டதனால் பிரான்ஸ் தூதுவர் ஆத்திரமடைந்ததன் காரணமாகவே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நடவடிக்கை தற்பொழுது பிரான்ஸ் அரசின் தமிழர் மீதான பரிவான போக்கில் மாற்றங்களைஏற்படுத்தும் எனவும் அறியமுடிகிறது. எனத் தெரிய வருகிறது.(எம்.ரி.-977)

Thursday, January 12, 2012

சம்மாந்துறை பிரதேச சபை வாழும் கலை இலக்கிய வட்டம் அங்குரார்பணம்


சம்மாந்துறை பிரதேசத்திக்கான “வாழும் கலை இலக்கிய வட்டம்” (Live Art & Literature  Circle) அதன் அங்குராப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. சாம்மாந்துறை அமீர் அலி நூலக கேட்போர் கூடத்தில் 2012.01.11 4.00 மணியளவில் நடைபெறற இந்நிகழ்வில் சம்மாந்துறையின் மூத்த இலக்கிய வாதியும் சமூக ஆர்வலருமாகிய கலாபூசணம் மாறன் யூ செயின் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளினைக் கொண்டு இவ்வமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
                           இதன் போது அமைப்பிற்கான நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது இதில் தலைவராக M.M.சமீர் உப தலைவராக M.I.M.அர்ஷத் செயலாளராக M.T.முஜாஹிடீன் உப செயலாளராக U.L.M.ரிபாஜ் பொருளாளராக M.I.M.சாக்கீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
                            அமைப்பின் முதற்கட்ட செயற்பாடாக சம்மாந்துறைக்கான ஆவணங்களை சேகரித்தலும்; ஆவணப்படுத்தலும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Wednesday, January 11, 2012

உயர் தர பரீட்சை பெறுபேறு தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் சர்ச்சை தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய ஆணைக்குவின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் உதயம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கிழக்குமாகானசபை


வடக்கு கிழக்கு உள்ளூராச்சி மேம்படுத்தல் திட்டதின் கீழ் மல்வத்தை புதுநகர் மத்திய வீதிக்கு 1ம் கட்டமாக 525M கொங்ரிட் வீதி அமைப்பதற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிப்பு பணி பிரதேசசபை தவிசாளர்A.M.M. நொசாட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் பிராந்திய உள்ளுராச்சி உதவி ஆனையாளர்A.J.M.  இர்சாட் கலந்து சிற்ப்பித்தார்.

Sunday, January 8, 2012

விசேட தேவை உள்ள மாணவன் பரீட்சையில் சாதனை

சது முஸ்லிம் . வித்தியாலத்தின் உட்படுத்தற்கல்வி பிரிவில் கடந்த கா.பொ. (/ம்) கலைப்பிரிவில் கடந்த அச்சி முஹம்மட் அப்துல் சலாம் brailமுறையைப் பயன்படுத்தி டிஉள B,S,Cபெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமையேற்படுத்தியூள்ளார் இவர் இரண்டுகண்ணும் பார்வை இல்வாதவர் என்பது குறிப்பிடத்தக்கது இஸ்லாம் அரசியல் விஞ்ஞானம் சித்தியூம் பொதுபரீட்சையில் 32புள்ளியூம்  - புள்ளி 0.6553ம் பெற்றுள்ளார்
பல்கலைகழக அனுமதிக்கான ஆகக் குறைந்த jfik 3S அத்துடன் பொதுச்சாதாரன வினாத்தாளில் 30 புள்ளி பெறவேன்டும் என்பது 2010.2011 கல்வியான்டின் தகுதியாயாகும் எனவே இவர் 2011.2012 கல்வியான்டின் விசேட அனுமதியின் கீழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்துள்ளார்
இவரது திறமையை அதிபர் உட்பட பாட ஆசிரியர்கள் வகுப்பாசிரியர்கள் சகமாணவர்கள் ஆகியோர் பாராட்டியூள்ளமை குறிப்பிடத்தக்கது

பிறந்து ஒரு நாளேயான சிசுவை கொலை செய்த பெண் உட்பட இருவர் கைது

சம்மாந்துறை, கல்லரிச்சல் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்து, தனது காதலனுடன் இணைந்து வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக புதைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் வயது மதிக்கத்தக்க சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பிள்ளைகளின் தயாரான சுமார் 35 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணும், 55 வயதான அவருடைய காதலனும் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவை கொலை செய்து புதைத்த பின்னர், தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக அவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார்.
இதனையடுத்து, புதைக்கப்பட்ட சிசு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரத்தினம் ஆனந்தி, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மென்டீஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கிரியல்ல உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Saturday, January 7, 2012

புதிய பரீட்சை ஆணையாளர் பதவியேற்றல்

கடந்த 1 ம் திகதி கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் புதிய பரீட்சை ஆணையாளராக திரு டப். எம். என். ஜே. புஷ்பகுமார பதவியேற்றார். இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரியான திரு புஷ்பகுமார புதிய பதவியைப் பொறுப்பேற்கு முன்னர் கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பதவி வகித்ததுடன் பரீட்சை ஆணையாளர், பிரதிப் பரீட்சை ஆணையாளர் மற்றும் உதவிப் பரீட்சை ஆணையாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

சம்மாந்துறை இணையத் தளக் குழுவினர் தற்பொழுது www.strbook.tk இனூடாக பேஸ்புக்கினை ஒத்த ஒரு சமூக வலையமைப்பினை உருவாக்கியுள்ளனர்

சம்மாந்துறை இணையத் தளக் குழுவினர் தற்பொழுது www.strbook.tk இனூடாக  பேஸ்புக்கினை ஒத்த ஒரு சமூக வலையமைப்பினை உருவாக்கியுள்ளனர்.இதில் எமது சகோதரர்களும் இணைந்து தம்து பதிவினையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இது தொடர்பாக சம்மாந்துறை இணையத்தள தகவல் தொழிநுட்பப் பிரிவுடன் வினவிய போது- இத் திட்டதினூடாக எமது புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது புலம் பெயர் உறவுகளை இணைத்து எமது தகவல்களை வழங்கும் களமாக அமையும் என தெரிவித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.