Thursday, May 3, 2012

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவி முதலிடம்


தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விப் பிரிவினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய மாணவி செல்வி எம். என். பாத்திமா சுமையா முதலிடம் பெற்றுக்கொண்டார்.

  கொழும்பு அல் இக்பால் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இன் நிகழ்வில் தேசிய மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர். எம். எம். ரத்னாயகவினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தரம் 8 ஆம் பிரிவு மாணவர்களுக்கிடையே இப்போட்டி நிகழ்ச்சி தேசிய ரீதியில் நடைபெற்றது. சம்மாந்துறையை சேர்ந்த இம்மாணவி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நிதியாளர் கே. எல். எம். நசீர், சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய ஆசிரியை சரிபா முகம்மது நசீர் ஆகியோரின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Pages

Pages

Visitors

474562

feature content slider

Content right

.

.

.