
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நல்லாட்சிக்கான இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் வாசகர் பார்வை வட்டம் உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வானது 04.10.2010 ஆகிய இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில்,கெளரவ அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மற்றும் விசேட அதிதிகளாக எம்.எம்.றிபாய்டீன்,எம்.எம்.முனப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ் விழாவை கல்லூரி முதல்வர் எச்.எம்.பாறூக் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார். இச் செயற்திட்டத்தின் மூலம் நூலகர் வட்டம் ஒன்றை உறுவாக்குதல்.