Thursday, September 30, 2010

எமது தளமானது எதுவித பக்க சார்புமின்றி உண்மைத் தகவல்களை மட்டுமே காவுகின்றது. தற்பொழுது எமது தளத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்கள், தொழிநுட்ப பிரச்சினைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உணவகங்கள் திடீர் பரிசோதனை

01.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரின் உதவியுடன் உணவகங்களின் தரம்,சுகாதார நிலைமைகளை பரிசோதனை செய்தனர்.இவர்கள் ஹிஜ்றா சந்தியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளை பரிசோதனை செய்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.

சிறுவர் துஷ்பிரயோகமும் உலக சிறுவர் தினமும்

முன்ஸிப் பரீட்கெலிஓயா. ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற் கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளை யும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம்  விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம்  என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதி யினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர் களில் தங்கிவாழ்கின்ற பலவீனர் களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின் றனஇவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிர யோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பதறகாகப் பல கொள்கைகள் மற்றும் பிரக டனங்கள் காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் .நா. சபை யில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்க ளைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் .நா சபையானது 18 வயதுக்குட்பட்ட  அனைவரையும் சிறுவர் கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர் காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் இன் றைய மனித சமுதாயமா னது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன் முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.* பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றுள்  ஏதாவதொரு துஷ் பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர்  துஷ்பிரயோக வடிவங் களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம்  சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.