
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறையும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களுக்கான முதல் கட்ட தலைமைத்துவப் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதற் கட்டமாக 9000 மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும்.
கடற்படை மற்றும் பொலிஸ் முகாம்களில் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இம்முறை வழக்கமான தொகையை விட அதிகளவான மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதனால் மூன்று கட்டமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.