சிறு பிழை கூட எம்மில் பெரிய இழப்பை ஏற்படுத்தக் கூடும்.எனினும் தற்பொழுது இணைக்கப்படும் விடயம் ஓர் கவனையீனமான எழுத்துப் பிழையின் விபரீதமே ஆகும்.சம்மாந்துறை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள மில்கோ பால் குளிரூட்டல் நிலையம் பெயர்ப் பலகையில் எமது ஊரின் பெயர் சம்மாந்துறை என்பதற்குப் பதிலாக சம்மான்துறை என அச்சிடப்பட்டுள்ளது.இப் பிழையானது இது வரை யாரினாலும் சுட்டிக் காட்டப்படவில்லை .அப் பாதை வழியாக எத்தனையோ மக்கள் ஒரு நாளைக்குக் செல்கின்றனர் எனினும் அது இனங்காட்டப்படாத பிரச்சைனையாகவே இருக்கின்றது.இது எமது ஊரின் கல்வித் தரத்தை குறைத்து மதிப்பிடும் செயலாக காணப்படுகிறது.எனவே இப் பெயர்ப் பலகையில் உள்ள பிழையை உடனடியாக மாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எமது செய்திப்பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வறான சிறு சிறு பிழைகளை எமது செய்திப் பிரிவு தொடர்ந்து சுட்டிக் காட்டும்.
Tuesday, September 7, 2010
வீதிகளின் அபிவிருத்தியும் விபத்துகளின் அதிகரிப்பும்
தற்பொழுது வீதிகளானது எமது ஊரில் மிகவும் அழகான முறையில் புணர்நிர்மானிக்கப்பட்டுள்ளன எனினும் ஏற்பட்டுள்ள விபரீதம் விபத்துக்களின் அளவு அதிகரித்தமையாகும்.இன்று கூட வாகன விபத்துகளினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்கு என வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே வாகனங்களில் பிரயாணம் செய்பவர்கள் அவதானத்துடன் செலுத்துமாறு எமது செய்திப் பிரிவு விணயமாக கேட்டுக் கொள்கிறது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474565
feature content slider
Content right
.
.
.