Tuesday, March 27, 2012

வாசகர்கள் அனைவருக்கும்!

வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையத்தள குழுமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதோடு ஒரு சந்தோஷமான செய்தியையும் தெரிவிக்கின்றோம்

.எதிர் வரும் 3ஆம் திகதி முதல் எமது இணையத்தளமான WWW.SAMMANTHURAI.TK ஆனது WWW.SAMMANTHURAITK.COM எனும் புதிய நாமத்தோடு எமது ஊர் செய்தியை மட்டுமல்லாது இணையச் சஞ்சிகையாக புதுப் பொலிவுடன் வரக் காத்திருக்கின்றது.எனவே வாசர்கள் அனைவரும் 3ஆம் திகதி முதல் புதிய இணய முகவரியோடு எமது தளத்தினை அனுகுமாறு வினயமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

Saturday, March 24, 2012

பிரதேச சாஹித்திய கலாசார விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் பிரதேச ரீதியாக நடத்தப்பட்டுவரும் பிரதேச சாஹித்திய கலாசார விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 22-03-2012 வியாழக்கிழமை நடைபெற்றது. கலை நிகழ்வுகள்,சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொணடு வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச செயலக சாஹித்திய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சாஹித்திய கலாசார பேரவையின் பிரதித் தலைவர் கலாபூஷனம் மாறன் யூ.செயின் ஆகியவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நாடுபூராகவும் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்’ ஆரம்பம்

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தைக்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் (ஐ.பி), பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், ஜனாதிபதி இணைப்பாளர்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Thursday, March 22, 2012

ஒன்பது மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன

8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை


ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

பங்களாதேஷ்- சீனா- கொங்கோ- கியூபா- ஈக்குவாடோர்- இந்தோனேசியா- குவைத் மாலைத்தீவு- மைவுரிடானியா- பிலிபைன்ஸ்இ-கட்டார்- ரஸ்யா- சவுதி அரேபியா- தாய்லாந்து- உகாண்டா.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-

அவுஸ்திரேலியா- பெல்ஜியம்- பெனின்- கெமரூன-இ சிலி- கொஸ்டரீக்கா- செக் குடியரசு- கோத்தமாலா- ஹங்கேரி- இந்தியா- இத்தாலி- லிபியா- மொரிடஸ்- மெக்சிகோ- நைஜீரியா- நோர்வே- பெரு- போலந்து- மோல்டோவா- ரோமானியா- ஸ்பெயின்- சுவிட்ஸர்லாந்து- ஐக்கிய அமெரிக்கா- உருகுவே.

வாக்களிக்காத நாடுகள்:

அங்கோலா- போர்சுவானா- பேர்கினா பசோ- ஜிபூடி- ஜோர்தான்- கிர்கிஸ்தான்- மலேசியா- செனகல்.(எம்.ரி.-977)

தனியார் வைத்தியக் கல்லூரி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!


மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி அமைப்பது தொடர்பான ஆய்வூகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.


அலரி மாளிகையில் வைத்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை கையளித்தார். இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர- சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)

அல் மதீனாப் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும்



சம்மாந்துறை அல் மதீனாப் பாடசாலையில் இன்று கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(டி.ஏ) அவர்களின் தலைமையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்இ தடம் புத்தக வெளியீடும் இடம் பெற்றதோடு ஓய்வு பெற்ற அதிபருக்கான கௌரவிப்பு நிகழவும் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான திரு.அஸீஸ் முகைதீன் அவர்களும் எச்.எம்.பாறூக் அவர்களும் ஜானாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

Wednesday, March 21, 2012

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி - 2012

2012.03.17 ம் திகதி சனிக்கிழமை அன்று கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி மிகவூம் விமர்சையாக கல்லூரி அதிபர் அல்-ஹாஜ்: எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு அதிதிகளாக,
எஸ்.எம்.எம்.ஹரிஸ் (பாராளுமன்ற உறுப்பினர்)
கலாநிதி: சீறாஸ் மீராசாஹிப் (மாநகர சபை முதல்வர்)
அல்ஹாஜ்: எம்.ரீ.எம்.தௌபீக் (வலயக் கல்வி அதிகாரி. கல்முனை)
ஏ.எல்.எம். சலீம் (பிரதேச செயலாளர்)     ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு,  போட்டி நிகழ்ச்சிப் பணிப்பாளராக கல்லூரியின் பிரதி அதிபர் A.A.Gafoor அவர்கள் பணிபுரிந்தமையூம் குறிப்பிடத்தக்கது.



மேலும், இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

Sunday, March 18, 2012

VTC இல் தற்போது BAKER எனும் புதிய பாடநெறி




சம்மாந்துறை VTC இல் தற்போது BAKER எனும் புதிய பாடநெறி ஆரம்பித்துள்ளது. பாடநெறி முடீவில் NVQ  தரச் சான்றிதழ் வழங்கப்படும். (பயிற்சி நெறி 03மாத காலம் மாத்திரமே.)

இப் பாடநெறிக்கு மேலும் 03 மாணவர்கள் தேவைப்படுகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு
Mrs: Jumaana Wazeem   075 23 84 484

இப் புகைப்படம் மேற்குறித்த பாடநெறி மாணவர்களால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.




--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Friday, March 16, 2012

காருக்குள் கஞ்சா- சம்மாந்துறை பொலீஸார் மடக்கிப் பிடிப்பு


நேற்று அதிகாலை சம்மாந்துறையில் 19கிலோ கிராம் கஞ்சா பொதிகளுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் வைத்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 19கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் வெள்ளை நிற 6-5307இலக்க, 404-கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் பொருட்களை கொண்டு வந்த கார் சாரதியும் சம்மாந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினை அடுத்து பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினை அடுத்து இவ்வாகனம் மல்வத்தையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகளை காரின் முன் பொனட்டில் பெருத்தப்பட்டுள்ள லைட் கோப்பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், பெருங்குற்றவியல் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம், பொலிஸ் பரிசோதகர் குமாரகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிடுவதையும் இங்கு காணலாம்.  metromirro

Wednesday, March 14, 2012

உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன் 

APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது. 

சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.

உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.

இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது (இதுப்போன்ற மேலும் சில கட்டுரைகளை வேறு சில அறிவியல் தளங்களிலும் பார்த்திருக்கின்றேன்).

தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?

டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது. 

சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது. 

இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர். 

பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது. 

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள். 

ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும். 

எப்படி சோதிப்பது? 

யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது. 

வேறு வழி?....  ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும். பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை ரீதியாக கடினமான ஒன்றே. 

இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்தது. 

எப்படி? 

C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254 நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள் என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள். 

இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence) ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை. 

பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின் குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும். 

கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன. 

ஆஹா...

பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. 

ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும். 

ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம், அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே தெளிவான பார்வை கிடைக்கும். 

அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன. 

சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும். துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். இப்போது என்ன செய்வது?

Fine...நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால், உங்கள் மருத்துவரை தீவிரமாக கன்சல்ட் செய்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை அதனை அகற்றாமல் மாற்று வழியில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். சில ஆய்வுகள், ஆண்டிபயாடிக் மூலமாக வீக்கத்தை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. 

பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லையா? வீக்கத்தை குறைக்கும் வேறு வழிகள் கண்டுபிடிக்கப்படும் வரை அதனை அகற்றுவதை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியில்லை. 

இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன். 
வெளிநாடுகளில் வேலை பார்க்கின்ற இலங்கையர்களுக்கு அமைச்சர் டிலான்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது என்று தெரிவித்து உள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா.இவர் அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது. ஏனெனில் இலங்கைக்கு தேவையான அன்னியச் செலவாணி வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்பட்டு வருகின்றன.இலங்கைக்கு அதிக அன்னியச் செலவாணியை பெற்றுக் கொடுப்பவர்கள் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்கள் ஆவர். எனவே இவர்களும் ஹீரோக்கள்தான். 2009 ஆம் ஆண்ட 813.91 மில்லியன் ரூபாய் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் இருந்து கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 47.03 விகிதம். 2011 ஆம் ஆண்டில் 465.37 மில்லியன் ரூபாய் கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 49.63 வீதம்.இலங்கை இன்று பொருளாதார ரீதியாக பலமாக உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணம் ஆகும்.ஸ்! 

Thursday, March 8, 2012

தேசிய பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி

இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டிகளின்
இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.அப10பக்கர் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக
கிழக்கு மகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்
பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் மற்றும் பாடசாலையின் முன்னால் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.
மேலும் இதில் வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இளந் நிகழ்வில் நேரடி ஒளி பரப்பு சேவையையும் எமது தள வரிசையினூடாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Wednesday, March 7, 2012

பங்களாதேசத்தில் சவுதி அரேபியா தூதுவர் சுட்டுக் கொலை!

பங்களாதேசத்திற்கான சவுதி அரேபியா தூதுவர் காலிப் அல் அலி, தலைநகர் டாக்காவில்  சுட்டுக் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகிறதுசவுதி அரேபியா தூதுவர் காலிப் அல் அலி நேற்று மாலை தனது உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவர  துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


காயமடைந்த தூதர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில் 8 வங்கதேசத்தினர் கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் பொலிசார் கூறுகின்றனர்.

சவுதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பல வழிகளில் பெருமளவு நிதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
metromirror

Tuesday, March 6, 2012

2012 ஆம் ஆண்டு G.C.E A/L பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எச்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


புதிய பாடவிதானம் மற்றும் பழைய பாடவிதானங்களுக்கான விண்ணப்பங்கள் இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

தனியார் விண்ணப்பதாரிகள் உரிய காலத்திற்குள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, March 5, 2012

உயர் கற்கை நெறிகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு -2012

நீங்கள் எதிர்பார்க்கும் எதிர்கால இலக்குகலை எய்திட உங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் மேலும் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கை நெரிபற்றிய தெளிவான எதிர்கால அறிவைப் பெற்றுக்கொள்வதற்குமான  இலவச வழிகாட்டல் கருத்தரங்கு SMART FRIENDS ORGANIZATION  இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

1  உயர் கற்கை நெறிகளைத் தெரிவு செய்வதற்கான அடிபடைத் தேவைகளும், தெரிவு செய்யும் முறையும்

2 உயிரியல் விஞ்ஞன கற்கை நெறியும் எதிர்காலமும்

3 கலைத்துறையும் எதிர்காலமும்

4 பெளதீக விஞ்ஞான கற்கை நெறியும் எதிர்காலமும்

5 வர்த்தக முகாமைத்துவ கற்கை நெரியும் எதிர்காலமும்

6 தொழில்சார் கற்கை நெறிகளும்,பல்கலைக்கழகத் தெரிவில் Z-Score வெட்டுப்புள்ளி முறையும்.

ஆகிய தலைப்புகளில் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்படவிருக்கின்றன.
இக்கருத்தர்ங்கில் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ள க.பொ.(சா/த)
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும், க.பொ.த.(உ/த)
கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களையும்,மற்றும் பெற்றோர்களையும் அழைக்கின்றோம்.

இடம்  :  அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி,சம்மாந்துறை

காலம்  :  07/03/2012 காலை 8.00 மணி 

SMART FRIENDS ORGANIZATION  SAMMANTHURAI

Sunday, March 4, 2012

மாணவன் ஒருவர் தற்கொலை

இன்று சம்மாந்துறை மழையடிக்கிராமம் 02 பகுதியில் 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவத்தின் பின்னுள்ள விடயங்களை ஊகிக்க முடியாத நிலையில் தற்போது சம்மாந்துறை பொலிஸாரினால் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.                                           

2020 இல் பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

பூமிக்கு ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். இவற்றில் சில அவர்களின் கணிப்பின் படி நடந்துள்ளதுடன், பல நடக்காமலும் போயுள்ளன.
எனினும் இத்தகைய எதிர்வுகூறல்கள் லேசான பயத்தை நிச்சயமாக வரவழைக்கக் கூடியன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தொன்று தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், 2020 ஆம் ஆண்டு பூமியை சூரியப் புயல் தாக்கலாம் எனவும், இதற்கான வாய்ப்பு 8 இல் 1 ஆகக் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்படும் பாதிப்பினால் பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு நட்டமேற்படுமெனவும், இதில் இருந்து மீள எமக்கு ஒரு தசாப்பதத்துக்கு மேல் தேவைப்படுமெனவும் குறிப்பிடுகின்றனர். இதே போன்ற புயலொன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியுள்ளது. இதன்போது தந்தி நிலையங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அவற்றின் வலையமைப்பும் பாதிக்கப்பட்டன.

இன்றைய இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் அத்தகையதொரு புயல் தாக்குமாயின் அதன் விளைவுகள் முன்னரை விடப் பல மடங்கு மோசமாக இருக்குமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது மின் சக்தி, வானொலி தொடர்பாடல், ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை உண்டாக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்தங்களின் காலவரையறைகளை ஒப்பிட்டே இம்முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி , அபுதாபியிலிருந்து எண்ணெய் கொள்வனவுக்கு இலங்கை முயற்சி

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா  தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மசகு எண்ணெய் மற்றும் சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை  அதிகரிக்குமாறு சவூதி அரேபியா, அபுதாபி ஆகிய நாடுகளை சம்மதிக்கச் செய்ய முடியுமென இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பெற்றோலிய நிறுவனமான ஆரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் கம்பனி ஆகியனவற்றுடன் மேலதிக விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தைகளுக்காக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் அடுத்தவாரம் இவ்விரு நாடுகளுக்கும் செல்லக்கூடும் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு இவ்வருடம்  குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைவடையும் எனவும் இதனால் சர்வதேச சந்தையிலிருந்து  சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்குமதிக்கான சாத்தியத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம், 1.7 பில்லியன் டொலர் செலவில் 2 மில்லியன் தொன் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்தது.  அவற்றில் 1.93 மில்லியன் தொன் எண்ணெய் ஈரானிலிருந்து 1.6 பில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக சந்தையின் கேள்விப்பத்திரங்களுக்கூடாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து  சுத்திரிக்கப்பட்ட எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் எண்ணெயை இறக்குமதிக்கான  கடன் எல்லையை விஸ்தரிக்குமாறு அந்நிறுவனத்தை கோருவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓமானிடமிருந்தும் இலங்கை உதவிகளை கோரியுள்ளபோதிலும் அந்நாட்டிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவ்வதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானிய எண்ணெய் நெருக்கடியானது எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பாதிக்கவில்லை என அதன்  நிர்வாக இயக்குநர் கே.ஆர். சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகம் ரிலையன்ஸ் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தமது நிறுவனம் மிக அதிகமாக தங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 40,000 தொன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பொறுத்தவரை தட்டுப்பாடு இல்லை எனவும் அவர்கூறினார்.
tamilmirror

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.