Thursday, December 6, 2012

புலமைப்பரிசில் மாணவர்களை பாராட்டும் விழா-2012


 சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் 2012.12.05 அந் திகதி அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த  பாரட்டு விழாவில் சித்தி பெற்ற மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியைகளான ஜனாபா RUM. மன்சூர், AB. பரீதா RU. றிம்லான் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவத்தில் புலமைப்பரிசில் நிகழ்வில் வலயத்தில் 179 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட MBM. தஸ்னீம் என்னும்  மாணவனுக்கு விசேட பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது என்பதை சுட்டிகாட்டுதல் பொருத்தமாகும். 

அ.ம. தாஹா நழீம்

அம்பாறை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடை

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.

  நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை மின் தடை அமுலில் இருக்கும் என்று கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதேசத்திலுமே மின் தடை இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரிய திருத்த வேலைகளுக்காகவே இம்மின்சாரத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், இந்நாட்களில் ஏதாவது ஒரு சில நேரங்களில் பொது மக்களின் நலன் கருதி குறித்த சில நிமிடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதனால் மின் தடை அமுலில் உள்ளபோது எவரும் தமது வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாம் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்பாக இருக்காது எனவும் கூறினார்.


thanks  adaderana

Pages

Pages

Visitors

474563

feature content slider

Content right

.

.

.