Thursday, March 31, 2011

வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 2.10 மணிவரை பாடசாலை வகுப்புகள் கிழக்கு கல்வி அமைச்சு பணிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அனைத்துப் பாடசாலைகளும் தரம் 6 இலிருந்து உயர்தரம் வரையிலான வகுப்புகள் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையில் மாத்திரம் பிற்பகல் 2.10 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய விசேட சுற்றறிக்கையை சகல மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.10 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் ஏனைய நாட்களில் வழமைபோல் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் காலையில் இடம்பெறும் மத வழிபாடுகள் மற்றும் கூட்டங்களினால் வாரமொன்றில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவு குறைவடைகின்றமையால், அதனை மீள் நிரப்பும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 29, 2011

சொந்த மண்ணில் விடை பெற்றார் முரளி!

அரை  இறுதியில் நிகழ்வு

நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது தமது கடைசி பந்தில் விக்கெட் ஒன்றையூம் வீழ்த்தி சொந்த மண்ணில் விடை பெற்றுக்கொண்டார். இலங்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன்.
இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்ரைரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.
முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் 29 ஆம் திகதி வரை கிழக்கில் தொடரும்

டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் செயற்குழுவின் டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களங்கள், கல்வியலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது நிர்வாகத்தின் கீழுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், வேறு கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பரவும் இடங்களை 29 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கென மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களிடமிருந்துஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் இச்செயற்பாட்டினைத் திறம்பட நடத்த நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்து அமுல்படுத்துவதுடன் இச் செயற்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுள்ளார்.

NATIONAL ICT EXCELANT AWARD 2009



பாடசாலை கணணி வல  நிலயங்கலுக்கிடைலான போட்டி நிகழ்ச்சியில்  சம்மாந்துரை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளது. இப் போட்டி நிகழ்ச்சி கல்வி அமைச்சின் செயற்த்திட்ட பிரிவில் நடத்தப்பட்டது.  இதற்க்கு 1500 000 ரூபா பெறுமதியான கணணி மற்றும் கணணி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. 
 
தகவல்.

கணணி வள நிலைய ஆசிரியர்
M.B.M.HASEEN

Monday, March 28, 2011

சம்மாந்துரை பொலிஸாரினால் தேசிய பாடசாலையில் டெங்கு ஒழிப்புப் பணிகள் இன்று

சம்மாந்துரை  தேசிய பாடசாலையில்  இன்று பொலிஸாரின் ஏற்பாட்டுடன்  சூழல் பாதுகாப்பு பிரிவு, சுகாதார பரிசோதகர்  ஆகியோரின் அனுசரனையுடன் டெங்கு ஒழிப்பு பணிகலானது. பாடசலை அதிபர் ஆசிரியர்  மாணவர்கள் இனணந்து பணியில் ஈடுப்ட்டனர்

Sunday, March 27, 2011

புதிய அடையாள அட்டைகள்!

r.p.d


மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கம்
மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் புதிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக ஆட்கள் பதிவூத் திணைக்களம் அறிவிக்கின்றது.
அதன்படி புதிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளில் இருந்து மாறு பட்டவகையில் புதிய அடையாள அட்டைகள் உருவாக்கப்படவுள்ளன.
புதிய அடையாள அட்டை கணனி மயப்படுத்தப்பட்டதாக உருவாக்கப்படும் என்றும் இதில்    கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள்  பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும்  திணைக்களம் மேலும் தெரிவக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

ttt உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்றது.
வட கிழக்கிலும்;;; நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Friday, March 25, 2011

அல் முனீர் பாடசாலை சுற்றாடல் கழகத்தினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று




சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டுடன், பொது சுகாதார வைத்திய  காரியலயத்தின் அனுசரனையில் மாபெரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது சம்மாந்துறை அல்-முனீர் பாடசாலை அதிபர் ஆசியர்களின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
                                                                       

சம்மாந்துறையின் வீதி அபிவிருத்திப் பணிகள் 158 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பு


சம்மாந்துறை மக்களின் நீண்ட கால குறைபாடாக விருந்த பௌசி மாவத்தை வீதி அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீரின் முயற்சியினால் 158 மில்லியன் ரூபா செலவில் நவீன காப்பற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் அண்மையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியிலாளர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கௌரவ அதிதிகளாக மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை, மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை , கூட்டுறவு விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்,அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உட்பட திணைக்களத் தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பௌசி மாவத்தை வீதிக்கான நினைவுக் கல்முனை விளினைபட்டி சந்தியிலும், 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பள்ளி வீதி கொங்கிரீட் வீதிக்கான நினைவுக் கல்லினை சம்மாந்துறை புதிய பள்ளி வீதிச் சந்தியிலும் அமைச்சர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

Thursday, March 24, 2011

நமது ஊர் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு களம் எமது பிரபல கவிஞர் மன்சூர் ஏ.காதர் அவர்களின் கவிதை

கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட......


நிராகரிக்கப்பட்ட நியாயங்களுக்கான நமது ஜிஹாத்
கபனிடப்பட்ட ஜனாஸாக்களாய்
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...

விருட்சங்களால் விழுங்கப்பட்டிருந்த
குறுநில மன்னர்தம் ராஜதானிகளில்
மறுபடியும் செவ்வனே எல்லைப்படுத்தப்பட்டு,
நிர்ச்சலனமான
ஜனநாயகத்தின் மரகத தலைப்பாகைகளுடன்
முடிசூட்டு விழாக்கள்...

நாம் கபுரிஸ்தானங்களுள்ளே..  ஜனாஸாக்களாய்...
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...

ராஜ கிரீடம் சுமந்த சிரசுகளை இலக்குப்படுத்த
பொறுக்கப்பட்ட நமது கவண் கற்கள்
நவீன இரட்சகர்களின்
சிம்மாசன அங்கலாய்ப்புக்கான சதுரங்கக் காய்களாய்
மொழிபெயர்க்கப்பட்டன.
தாவீதின் கவண் தொடர்ந்தும் கோலியாத் கரங்களில்
அதனால்,
நமது ஸியாரங்களை
நாம் கட்டிக் கொண்டேயிருப்போம்

நம்மை விற்றுப் பிழைக்கும் தாதாக்கள்
ஒழித்து வைக்கப்பட்ட கசிப்புக் கொள்கலங்களோடு
நமது கழிவிரக்கங்களை மூலதனமாக்கி
மேலும்
புதிய வியூகங்கள் எனும் பெயரில்
தம் நாற்காலி நப்பாசையின் எதிரியை
தோற்கடிக்கும் முனாபிக் தனங்களோடு
நன்றி எனும் சௌந்தர்ய மலர்களால்
இறைவன் சமைத்த
நமது மெத்தனமான இரண்டாம் கிரீடத்தை
ஆழ்மூச்சு முட்ட அழுத்தம் கொடுக்கும்.

மறுபடியும்... மறுபடியும்...
கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட மாடுகளாய்
நமது உடன் பிறப்புக்கள்
மடுவங்களை நோக்கி சாய்க்கப்பட்டபடியே....

கங்கத்தியப்பா
21.03.2011

நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கு அனுமதியளிப்பு

சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா வழங்கியுள்ளார்.
புதிய நீதிவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக கல்முனை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக எம்.எச்.பக்ர்டீன் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையினை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளார்.
இக்கட்டிடத் தொகுதியை அண்மையில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 22, 2011

நிலவெடிப்புக்கான காரணத்தை அறிய அப்பிரதேசத்தில் ஆய்வு நடத்தப்படும்

ஏறாவூர் பகுதியில் பல இடங்களிலும் தரையிலிருந்து நீர் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு மேலும் சில நாட்கள் அந்தப் பிரதேசத்தை அவதானிக்க வேண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஹஸீர் தெரிவித்தார்.
நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசத்தை புவிச்சரிதவியல் பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பார்øவயிட்டனர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்களில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கிணறுகளிலும் நீர் நிறமாற்றமடைந்துள்ளதனால் அருந்துவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். நீர் வெளியேறும் இடங்களை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுகின்றனர்.

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பின் ஊடாக வெளிவந்து கொண்டிருக்கும் நீர் மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் ஊடாக நீர் வந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்தமையினாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
பூரண சந்திரனின் தாக்கத்தினால் அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளரொருவர் அனுப்பப்பட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர். என்.பி.விஜேயானந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் விரும்பத்தகாத அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்வுக்கு பின்னர் குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் கவனமாக இருக்

“கைப்பற்றப்பட்ட சபைகளின் தலைவர்களை கட்சியின் தலைமை விரைவில் தீர்மானிக்கும்”

அம்பாறை மாவட்டத்தில் நாம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு நமது கட்சி தீர்மானிக்கும் ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கைப்பற்றிய நான்கு சபைகளுக்குமான தலைவர்களைச் தெரிவுசெய்யும் போது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களா? அல்லது கட்சி விரும்புகின்றவர்களா? கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டபின்னர் தேர்தல் ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்யுமாறும் சத்தியப் பிரமாணத்தினை அறிவிப்பார். இதன் பின்னரே எமது கட்சி கூடி ஆராயுமெனக் கூறினார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தினை அந்தந்தப் பிரதேசசபை அலுவலகங்களிலேயே நடாத்தப்படும் என்றும் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்

Monday, March 21, 2011

முட்டையில் முஹம்மது நபியின் பெயர்,பொத்துவிலில் அதிசயம்


முட்டையில் முஹம்மது நபியின் பெயர் தோன்றிய அதிசய சம்பவம்  பொத்துவிலில் பிரபலமான விஞ்ஞான ஆசிரியரும் அல்-கலாம் வித்தியாலயத்தின் அதிபருமான சமீம் ஆசிரியரின் வீட்டில் இடம் பெற்றுள்ளது. இவ்வதிசய சம்பவத்தை காண பெருந்திரளான மக்கள் சமீம் ஆசிரியரின் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.


Sunday, March 20, 2011

கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி

image002

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நேற்று முன்தினம் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது. நேற்றுக்காலை 10 மணியாகும்போது சகல தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இத்தேர்தலில் ஐ.தே.க. தனது கட்டுப்பாட்டிலிருந்த 18 உள்ளூராட்சி சபைகளையும் கோட்டைவிட நேரிட்டதோடு முஸ்லிம் காங்கிரசும் ஓரளவு பின்னடைவையே எதிர்கொண்டது. வடக்குஇ கிழக்கு தமிழ் பிரதேசங்களை மையமாகவைத்து தேர்தலில் குதித்த தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி தேசிய அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினால் நான்கு சபைகளை மட்டுமே வெல்லமுடிந்தபோதும் வடக்கு கிழக்குக்கு வெளியில் முதற்தடவையாக போட்டியிட்ட பல சபைகளில் உறுப்பினர்களை வென்றது.
தேசிய காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த இரு சபைகளையும் தக்கவைத்துக் கொண்டதோடு மலையக மக்கள் முன்னணி நுவரெலியா பிரதேச சபையையும் சுயேட்சைக் குழு-1 பல்லேபொல பிரதேச சபையையும் கைப்பற்றியது விசேட அம்சங்களாகும்.

ஆட்சி மாற்றத்திற்கு முதற்படியாக இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதாக வீரவசனம் பேசிய ஐ.தே.க.வினால் பண்டாரவளை மாநகரசபை குளியாப்பிட்டிய நகரசபை கம்பொள நகரசபை கடுகண்ணாவ நகரசபை களுத்துறை நகரசபை அடங்கலான ஒன்பது உள்ளூராட்சி சபைகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.
ஐ.ம.சு.மு.ஐ விட 725 வாக்கு வித்தியாசத்தில் ஐ. தே. க. கம்பொளை நகர சபையைக் கைநழுவியது. பண்டாரவளை மாநகரசபையும் 154 வாக்குகளினாலே ஐ.ம.சு.மு.க்கு கைமாறியது. 20 வருடங்களின் பின்னர் கதிர்காமம் பிரதேச சபையை ஐ.ம.சு.மு.யிடம் ஐ.தே.க. பறிகொடுத்தது முக்கிய விடயமாகும்.
வத்தளை மாபோல நகரசபை வத்தளை பிரதேச சபை பேலியாகொட நகர சபை பாணந்துரை நகரசபை ஹொரண பிரதேசசபை அடங்கலான 18 உள்ளூராட்சி சபைகளை ஐ.தே.க. பரிதாபமாக இழந்தது.
முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலிருந்த காத்தான்குடி நகரசபையும்இ ஏறாவூர் நகரசபையும் இம்முறை ஐ.ம.சு.மு. வின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையையும் ஐ.ம.சு.மு.யே வென்றது. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடந்த 3 உள்ளூராட்சி சபைகளையும் ஐ.ம.சு.மு. கைப்பற்றியது. 7 ஆயிரம் மேலதிக வாக்குகளால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையை ஐ.ம.சு.மு. வென்றது.(vk;.up.977)

Friday, March 18, 2011

சம்மாந்துறைப் பிரதேச சபையைக் கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: பட்டாசுகளின் சத்தமும் ஆதரவாளர்களின் சத்தமும் வானத்தை எட்டுகிறது


சம்மாந்துறை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது இம்முறை கைப்பற்றியுள்ளது. இதனை கொண்டாடும் முகாமாக ஆதரவாளர்களும், வெற்றி பெற்ற வேட்பாளர்களும் ஊர்வலமாகச் சென்று தமது ஆதரவாளர்களுக்கு தமது நன்றிக் கடனை தெறிவித்து செல்கின்றனர்.                                               

Thursday, March 17, 2011

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் 2011

Local Authorities Election - 2011

Department of Government Information
Ampara District
Sammanthurai Pradeshiya Sabha
Name of Party
Votes
%
Seats
United People's Freedom Alliance United People's Freedom Alliance 12,358 49.05% 5
Sri Lanka Muslim Congress Sri Lanka Muslim Congress 10,078 40.00% 3
United National Party United National Party 1,995 7.92% 1
Independent Group 3 Independent Group 3 400 1.59% 0
People's Liberation Front People's Liberation Front 187 0.74% 0
Independent Group 5 Independent Group 5 104 0.41% 0
Independent Group 2 Independent Group 2 66 0.26% 0
Independent Group 6 Independent Group 6 5 0.02% 0
Independent Group 1 Independent Group 1 4 0.02% 0
Independent Group 4 Independent Group 4 0 0.00% 0
Valid
25,197
97.08%
Rejected
758
2.92%
Polled
25,955
69.27%
Electors
37,469

சம்மாந்துறை பிரதேச சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான மேலதிக செய்திகள் இன்னும் சிறிது நேரத்தில்


தற்போதைய சம்மாந்துறைப் பிரதேசங்களின் வாக்குப் பதிவுகளின் விகிதாசாரங்கள்

தற்பொழுது சம்மாந்துறைப் பிரதேச சபைத் தேர்தலானது சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதிலும் இம் முறை மக்கள் வாக்களிக்கின்ற வாக்களிப்பு வீதமானது மிகக் குறைந்தளவிலே காணப்படுகின்றது. மேலும் தற்பொழுது இடம்பெற்றுள்ள வாக்களிப்பு வீதங்களின் ஒரு பகுதி இங்கே-
தாறுஸ்ஸலாம்- 49%
லத்தீப் 47.5%
மதீனா - 25%
அல் மர்ஜான்1- 41%
அல் மர்ஜான் - 47%
ஜமாலிய - 48%
வீரமுனை  1 - 30%
வீரமுனை  2 -32%
கோரக்கர் - 28%
சபூர் - 43%
செந்நெல் கிராமம் 1 - 42%
செந்நெல் கிராமம் 2 - 52%

Wednesday, March 16, 2011

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் கூறுகிறார்

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் தினத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொருட்டு 50 ஆயிரம் பொலிஸாருடன் முப்படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருமாக 70 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய முறைகேடுகள், மோசடிகள், வன்முறைகளிலீடுபடுவோர் மீது பாரபட்சமன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
235 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய 36 பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் இடம்பெறுகின்றன. மொத்த 34433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் வாக்களிக்கத்தகுதி பெற்றோரின் எண்ணிக்கை 9444455 பேராகும். 7402 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறைகள், குழப்பங்களிலீடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவர். அவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவராயினும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
இதுவரையில் தவறாக நடந்து கொண்ட 15 வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்தோட்ட பொலிஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக பொதுமக்கள், வேட்பாளர்கள், பிரதேச அரசியல் தலைவர்கள் அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொலிஸார் தமது கடமையை நேர்மையகவே செய்து வருகின்றனர். நாம் எந்தத் தரப்புக்கும் பக்கச்சார்பாக நடக்கவில்லை. அதனை மீறி எந்தப் பொலிஸ் அதிகாரியாவது முறைகேடாக நடக்க முற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம்.
சில கட்சிகள் என் மீது பழி சுமத்த முற்படுகின்றன. எனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன். கடமையைச் சரிவரச் செய்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள், ஆலோசனைகளை மதித்து சட்டரீதியான செயற்பாடுகளை எடுப்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாகவே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நாளைய தேர்தல் நிலவரங்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்

நாளை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களைப் பெறுவதற்காக சம்மாந்துறை இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்து இருங்கள். நாளை 40% இற்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Tuesday, March 15, 2011

சந்திரன் பூமியை நெருங்கிவருவதால் மார்ச் 19இல் பேரழிவுகள் ஏற்படும்? வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை

லண்டன்: ஜப்பானை மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும் தாக்கியுள்ள நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம் பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்
தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வு உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து. இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.
சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் . இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜோன் கெட்லி தெரிவித்துள்ளார்.

Monday, March 14, 2011

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடம், இரத்தவங்கி,குளிருட்டப்பட்ட பிரேத அறை ஆகியன 12/03/2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.




சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில்  12/03/2011 அன்று கொளரவ மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் (TA) அவர்களும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் களரவ.A.L.M.அதாவுள்ளா,M.S.M.சுபைர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் விழாவை அலங்கரிக்க  சத்திரசிகிச்சை கூடம், இரத்தவங்கி,குளிருட்டப்பட்ட பிரேத அறை ஆகிய புது வசதிகள் நமது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எட்டியுள்ளது. இது எமது ஊரின் சுகாதார அபிவிருத்தியின் எடுத்துக் காட்டு என்று கூறுவதில் எதுவித ஐயமும் இல்லை என்பது திண்ணம்   

பிரதேச சபைத் தேர்தலின் இறுதிப் பிரச்சாரக் கூட்டமானது தற்பொழுது முக்கோணச் சுற்றுவட்டத்தில்



இன்றுடன் உள்ளூராட்ச்சி சபைகளின் முடிகின்ற தருவாயில் எமது பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களானது தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது இது தொடர்பான புகைப்படங்களானது இங்கே காணலாம். மேலும் இம்முறை மும்முனை அரசியல் கட்சிகளினதும் பிரச்சாரங்களும்  சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 13, 2011

குழந்தையின் உடலில் அல்லாஹ் எனும் பதம் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செம்மனோடை கிராமத்தை சேர்ந்த முகம்மது ஆதிபீன் எனும் பெயருடைய இரண்டுமாத குழந்தையின் உடம்பிலும் உள்ளங்கையிலுமே இப்பதம் தென்படுகிறது.

மேற்படி குழந்தையின் பெற்றோர்களான முகமட் லாபிர்கான், சித்திநிஸா ஆகி ஆகியோரிடம் இது குறித்து பேசியபோது மொத்தமாக 18 இடங்களில் இப்பதம் இருக்கிறது எனவும் அதிகமான மக்கள் இதனை பார்வையிட வருகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகைப்படம் விரைவில் பிரசுரிக்கப்படும்

Thursday, March 10, 2011

சம்மாந்துறை கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்



சம்மாந்துறை செந்நெல்  ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக முதல் நாள் கோட்ட மட்டப் போட்டிகள் 10.03.2011 ஆகிய இன்று ஆரம்பானது. இந் நிகழ்வில் பெறுமளவான போட்டியாளர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தெரிவு செய்யப்படும் வீர,வீராங்கனைகள் 15.03.2011ம் திகதி இடம்பெறவுள்ள வலய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியினைப் பெறுவர்.
                                                                       

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.