Tuesday, March 29, 2011

சொந்த மண்ணில் விடை பெற்றார் முரளி!

அரை  இறுதியில் நிகழ்வு

நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது தமது கடைசி பந்தில் விக்கெட் ஒன்றையூம் வீழ்த்தி சொந்த மண்ணில் விடை பெற்றுக்கொண்டார். இலங்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன்.
இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்ரைரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.
முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.