Wednesday, April 6, 2011

செவ்வய் 5 முதல் சூரியன் உச்சத்தில்!

இலங்கைக்கு நேரே சூரியன் நேற்று 5ஆம் திகதி முதல் உச்சம் கொடுக்கும் என்றும் இம்மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த நிலை நீடிக்கும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12.14 மணியளவில் திக்வெல்ல- ககணதுர- வெலிகம- மிதிகம ஆகிய நகர்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்று 6ஆம் திகதி இதேநேரத்திற்கு அஹுங்கல்ல- சூரியவெவ- கினிதும நகர்களுக்கு நேரே சூரியன் சஞ்சரிக்கும் என்றும் இதன் காரணமாக இலங்கையில் அதிகளவு உஷ்ணம் உணரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வரும் பூமி இலங்கைக்கு நேரே சூரியன் வருடத்திற்கு இரு தடவைகள் சஞ்சரிக்கின்றது. அவற்றில் ஒரு தடவையே 05 ஆம் திகதிஆரம்பமாகியது. 05முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு நேரே நண்பகலில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Pages

Pages

Visitors

474562

feature content slider

Content right

.

.

.