Thursday, August 25, 2011

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவிப்பு



நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்தார் இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது.
1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது
இலங்கையில் காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும் வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் 1000 இடைநிலைப்பாடசாலை அபிவிருத்திதிட்டம்





 அரசாங்கத்தின் 1000 இடைநிலைப்பாடசாலை அபிவிருத்திதிட்டம்   தொடர்பில் கிழக்குமாகாண கல்வித் திணைக்களம்   நேற்று  சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில்  சம்மாந்துறை  அல்மர்ஜான் மகளிர்               கல்லூரியில்                விளக்கமளிக்கும் கூட்டத்ததை  நடாத்தினர்.அங்கு மகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா குணராஜா மற்றும் பணிப்பாளர் மன்சூர் உரையாற்றுவதையும்  கல்வி அதிபாரிகள் அதிபர்களையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

கிழக்குப் படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் லால் பெரேரா

இராணுவத்தின் கிழக்குப் படைத் தலைமையகத் தளபதியாக மேஜர் ஜெனரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கந்தையில் உள்ள கிழக்குப் படைகளின் தலைமையகத்தில் இவர் நேற்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சீனாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் மேற்படிப்புக்காக செல்லவுள்ளார்.

இதையடுத்தே புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் கிழக்குப் பகுதிகளில், மர்மமனிதர் விவகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரிப்பதற்கு மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நடவடிக்கை எடுத்திருந்தார்.

அமெரிக்க விமானங்களில் இருந்து அம்பாறையில் பொதிகள் வீச்சு

இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் வான்வழியாகப் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

அதேவேளை நாளை சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானங்களில் இருந்து பரா படையினரை தரையிறக்கும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.