Monday, February 28, 2011

கிழக்கு மாகாணத்திற்கான “வேலைக்காக காசு’ திட்டத்தில் அனைவரும் பங்குதாரராக வேண்டும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக்கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அம்பாறை கச்சேரி மண்டபத்தில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக விவசாயத்துறையில் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.விவசாயத்துறை மட்டுமல்லாமல் நீர்ப்பாசனம், சிறுகைத்தொழில், வீதிப்போக்குவரத்து, கல்விபோன்ற துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ளம் என்பது நமது நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை மாறாக கால நிலை மாற்றத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத்துறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.நுவரெலியா மற்றும் மலைநாட்டு பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒருவகை அதிர்ஷ்டசாலிகள் ஏனெனில் அங்கு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் அம்மக்களுக்கான மாற்று இருப்பிடங்களை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் தோன்றின. ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறிய மக்களின் வாழ்வாதார நிலையை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் வேலைக்காக காசு ( இச்ண்ட ஞூணிணூ தீணிணூடு) திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திற்கு உடனடியாக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத் திட்டத்தின் கீழ் குளங்கள், வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இதன் மூலம் வேலையில் ஈடுபடும் தொழிலாளிக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக வேலைக்காக உணவு ( ஊணிணிஞீ ஊணிணூ ஙிணிணூடு) திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.இதன் மூலம் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் ஆகியனவும் வழங்கப்படவுள்ளது.வெள்ளத்தால் நாட்டுக்கும் அரசுக்கும் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ஆகையால் சகலரும் இதில் பங்குதாரர்களாக ஆகவேண்டும்.வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகரங்களும் எதிர்காலத்தில் வழங்கப்படும்.
கடல்கோள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும்.தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தேர்தல் வாக்குகளை மையப்படுத்தி வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நமது அரசியல் முறையில் இவற்றை முற்றாகத் தவிர்க்கவும் முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதில் அமைச்சரான பீ.தயாரட்ண,ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், எஸ்.எம்.சந்திரசேகரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், சரத்வீரசேகர ஷிரியானி விஜயவிக்ரம், பியசேன அனோமாகமகே, மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, நவரட்ணராஜா, விமல வீரதிஸா நாயக, மாகாண சபை உறுப்பினர்களான அப்துல் மஜீத், புஸ்பராஜா, தயாகமகே, தேவராப்பெரும, அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, February 24, 2011

75 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்




சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு 20அ அனுமதியின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் காணி உத்தியோகஸ்தர் எம்.ஏ.எம்.றாபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 65 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

Wednesday, February 23, 2011

கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு பிரேரணை

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைப்பது தொடர் பிலான பிரேரணையை நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான பிரேரணையயான்று கிழக்கு மாகாண சபையில் விரைவில் நிறைவேற்றப் பட்டு மாகாண ஆளுநர் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவிற்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைவராகச் செயற்படு வார். ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோரால் தலா ஒருவர் இந்த ஆணைக் குழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படு வார். இந்த மாகாண பொலிஸ் ஆணைக்குழு மாகாணத்திலுள்ள பொலிஸாரின் இடமாற் றங்கள், பதிவியுயர்வுகள், ஒழுக்காற்றுக் கட்டுப் பாடுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாகச் செயற்படும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை வழங்கப்படவில்லை.

Tuesday, February 22, 2011

தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.

எமது சம்மாந்துறைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தற்பொழுது சூடு பிடித்துள்ளது. தற்பொழுது எமது ஊரில் பிரதான கட்சிகளில் மூன்றான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியானது சூடு பிடித்துள்ளது. இம்முறை தேர்தல் மிகப் பலமானதொரு களமாகவே அமையவுள்ளது என்பதில் ஐயமில்லை.

Sunday, February 20, 2011

நீதவான் நீதிமன்றமும், இலங்கையின் முதலாவது குவாசி மன்றமும் திறந்து வைப்பு







சம்மாந்துறையில் இன்று பொன்னாளாகவே கருதலாம். இன்று இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. எமது சம்மாந்துறை பிரதேசத்தில் இதுவரை காலமும் அதாவாது நீதவான் நீதிமன்றம் இன்று நிரந்தரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையிலே முதல் முறையாக சம்மாந்துறையிலேயே குவாசி நீதிமன்றத்திற்கு என்று நீதிமன்றத்திறகான நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதியாக  பிரதம நீதியரசர் அசோகடி சில்வா மற்றும் நீதியமைசர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம், மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் நபா தாஹீர், மாவட்ட ந்திமன்ற நீதிபதி இள்ஞ்செலியன் மற்றும் பிரதேசசெயலாலர், பிரதேச சபை உறுப்பினர்க்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Friday, February 18, 2011

எமது இணையத்தளமானது 100000 வாசகர்களைக் கடந்துள்ளது

எமது இணையத்தளமானது உருவாக்கப்பட்டு 06 மாத காலத்தினுள் 100000 வாசகர்களை கடந்துள்ளது இன்றுடன். இவ்வாறு எமது இணையத்தளமானது குறுகிய காலத்தினுள் அடைந்துள்ள வளர்ச்சியானது அபரிதமானது. இவ்வாறு எமது இணையத்தளமானது தொடர்ந்து பல சாதனைகள் படைக்கும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் களமிறங்குகின்றது. வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என்க் கேட்டுக் கொள்கின்றோம். 

Wednesday, February 16, 2011

சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது


சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் சேனை நிலம் ஒன்றினுள் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது. இதனை பொதுமக்கள் பொல்லிஸாருக்கு தெரிவித்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து தற்பொழுது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பெரும்போக அறுவடையானது சூடுபிடித்துள்ளது.



எமது பிரதேசத்தில் தற்பொழுது பெரு வெள்ளத்தை தொடர்ந்து அறுவடையானது மிகவும் விரைவாக இடம்பெற்று வருகின்றது. மேலும் எமது பகுதி விவசாயமானது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பெருமளவான நெல் வயல்கள் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
               

Monday, February 14, 2011

2011-2013ம் ஆண்டிற்கான புதிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் விபரம்

பிரதம நம்பிக்கையாளர்-
ஐ.அப்துல் ஜப்பார்

உப தலைவர்-
ஏ.எல்.ஹபீபு முஹம்மது

செயலாளர்-
யூ.எல்.அப்துல் றஸீட்

உப செயலாளர்-
எஸ்.சின்னலெவ்வை

பொருளாளர்-
கே.எல்.சுலைமாலெவ்வை

அங்கத்தவர்கள்-
கே.எம்.கே.ஏ.றம்ஸின் காரியப்பர்
யூ.எல்.மஹ்றூப்
எம்.ரீ.முகம்மது நஸீர்
எம்.ரீ.முகம்மது றாஸீக்
எம்.ஐ.முஹம்மது தம்பி
எஸ்.சுலைமாலெவ்வை
கே.எம்.முஸ்தபா
எஸ்.எல்.உசனார்
ஏ.ஆப்தீன்
எம்.ஏ.எம்.ஹுஸைன்
எம்.பி.நளீம்
பீ.ரீ.முகம்மது இஸ்மாயில்
                                                       

Sunday, February 13, 2011

மிக விரைவில் கேள்வி பதில் தேர்தல் களம்

சம்மாந்துறையில் தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான கேள்வி பதில் தேர்தல் களம் வீடியோ பதிவானது மிக விரைவில் வெளிவரவுள்ளது. காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் பல படைப்போம்.

க.பொ.த உ/த பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு



2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதியினை நீடித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையினை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரீட்சை விண்ணப்பதாரிகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம்


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சம்மாந்துறை அஸ்ஸமா வித்தியாலயத்தில் 2011/02/13ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணி வரை  இடம்பெற்றது. இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ் வைத்திய முகாமில் பின்வரும் வைத்தியர்கள் தமது சேவையை வழங்கினர். ஆசில் அஹமட், ஏ.ஏ.கபூர், எம்.எல்.கபூர், இஸானா ஆகிய வைத்தியர்கள். இம் மருத்துவ முகாமானது சம்மாந்துறை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் மெளலவி யூ.எல்.எம். ஸலாஹுதீன் தலைமையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 6, 2011

கிழக்கு மாகாண பாடசாலைகள் புதன் கிழமைவரை மூடப்படும் : முதலமைச்சர் சிபாரிசு

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண வெள்ள நிலைமை காரணமாக வருகின்ற புதன் கிழமை வரை பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் சிபாரிசுக்கமைய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரைக்கும் தொடர்ந்தேர்ச்சியான வெள்ள நிலைமை நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                       

Saturday, February 5, 2011

வெள்ளம் காரணமாக குடை சாய்ந்தது பஸ் வண்டி



சம்மாந்துறை பள்ளாற்றை அண்டிய பிரதேசத்தில் இன்று காலை கொழும்பில் இருந்து ஊர் நோக்கி வந்த அதி சொகுசு பஸ் வண்டியானது இழுவை நீர் காரணமாக குடை சாய்ந்துள்ளது. இவ்வாறு இவ் வெள்ளம் காரணமாக எமது பிரதேசத்தின் பல்வேறு வீதிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுடைய அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.                                                    

சம்மாந்துறையில் 22,352 ஏக்கர் விவசாய நிலம் முற்றாக அழிவு பிரதேச செயலர் தெரிவிப்பு

கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு 45 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 63 ஆவது தேசிய சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய ஜீவனோபாய தொழிலாகக் காணப்படும் விவசாயத்துறை முற்றாக சேதமடைந்துள்ளது. இதுவொரு நீண்டகால பொருளாதார தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சுயதொழில் துறைகளும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
சம்மாந்துறை பிரதேசத்தில் 384 வீடுகள் முற்றாகவும் 1180 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. இதற்கான செலவு மதிப்பீடாக 35.65 மில்லியன் ரூபாவாகவும் இதுவரை கிடைத்த தகவலின்படி 22352 ஏக்கர் விவசாயக் காணிகள் முற்றாக சேதமடைந்துள்ளது. சேத விபரங்கள் 137 மில்லியன் ரூபாவாகவும் 2700 சுயதொழில் முயற்சியாளர் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. நன்னீர் மீன்பிடித் தொழில் ரீதியாக 23.5 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேசமயம் சொத்துகள் பாதிப்பு ஆர்.டி.டி.வீதிகள்,நீர்ப்பாசன பிரிவு, வீதிகள்,பாடசாலைகள்,மதரசாக்கள் ஏனைய பொதுக்கட்டிடங்கள் சேதப்பட்டதனால் 255 மில்லியன் ரூபாவும் பிரதேசசபைக்குட்பட்ட சொத்துகள் 38 மில்லியன் ரூபாவுமாக 489 மில்லியன் ரூபா சம்மாந்துறைப் பிரதேசத்தில் மாத்திரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடையுமானால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Friday, February 4, 2011

தொடர்ந்தும் மழைக் காலநிலை நீடிக்கின்றது

தமது பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இன்று வரை ஓயாத மழையானது பெய்து வருகின்றது. இதனால் எமது பிரதேசத்தில் பாரிய வெள்ளமும், பொருளாதாரப் பின்னடைவுமே ஏற்பட்டுள்ளது. இதனால் எமது பிரேதேச விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எமது ஊரின் பொருளாதாரத்தில் இம் மழையானது பாரிய பின்னடைவையும், பஞ்சம் எனும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
                                                                       

Wednesday, February 2, 2011

சம்மாந்துறையில் மீண்டும் மூன்றாவது தடவையாக வெள்ளம்




தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை நைனாகாட்டைச் சேர்ந்த 153 குடும்பங்கள் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக சுமார் நண்பகல் 12.00 மணியளவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 303 ஆண்களும், 244 பெண்களும் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட 220 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் உணவுகளானது முகாம்களில் கிராம சேவகர்களினூடாக வழக்ங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு உதவ விரும்புவோர் sammanthurainews@gmail.com/ 0752912336 இனூடாக தொடர்பு கொள்ளவும்.

இங்கினியகலா வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம்






இங்கினியாகல வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஆறுகள் மற்றும் வயல் நிலங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். தற்பொழுது மல்வத்தை மற்றும் நைனாகாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தற்பொழுது நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

Tuesday, February 1, 2011

இவ்வாரத்தினுள் எமது தளத்தில் பிரதேச சபைத் தேர்தல் அறிமுக வீடியோ பதிவு காத்திருங்கள்

எமது தளத்தில் இவ்வாரத்தினுள் விசேட இணையப் பக்கத்தில் 2011ம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக வீடியோ காட்சியானது இடம்பெறவுள்ளது காத்திருங்கள். மாற்றங்கள் எம்மை அடையாளப்பதுத்துவதற்கே.

தொடர்ந்து இன்று பலத்த மழையானது பெய்து வருகின்றது.

இன்று எமது பிரதேசத்தில் பலத்த மழையானது பெய்து வருகின்றது. மீண்டும் மூன்றாவது வெள்ளம் வருமா என்ற கேள்விக் குறியுடன் காணப்பதுகின்றது. இவ்வாறு இம் மழையானது தொடருமாயின் பாரிய வெள்ளம் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக எமது வானியல் அவதான பிரிவினர் ஊகம் தெரிவித்துள்ளனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.