சம்மாந்துறையில் தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான கேள்வி பதில் தேர்தல் களம் வீடியோ பதிவானது மிக விரைவில் வெளிவரவுள்ளது. காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் பல படைப்போம்.
Sunday, February 13, 2011
க.பொ.த உ/த பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு
2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதியினை நீடித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையினை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரீட்சை விண்ணப்பதாரிகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சம்மாந்துறை அஸ்ஸமா வித்தியாலயத்தில் 2011/02/13ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணி வரை இடம்பெற்றது. இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ் வைத்திய முகாமில் பின்வரும் வைத்தியர்கள் தமது சேவையை வழங்கினர். ஆசில் அஹமட், ஏ.ஏ.கபூர், எம்.எல்.கபூர், இஸானா ஆகிய வைத்தியர்கள். இம் மருத்துவ முகாமானது சம்மாந்துறை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் மெளலவி யூ.எல்.எம். ஸலாஹுதீன் தலைமையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474563
feature content slider
Content right
.
.
.