Sunday, December 12, 2010
சது / வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய சாதனையாளர் விழா
சது / வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய சாதனையாளர் விழாவானது
10.12.2010 அன்று மு.ப.9.00 மணிக்கு திரு. S.சந்திரமோகன் அதிபர் தலைமையில்
இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கௌரவ திரு. S.புஸ்பராஜா
(கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், கௌரவ அதிதியாக
திரு.P.பிரசாந்தன் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், வித்தியா
அதிதியாக கௌரவ ஜனாப்.M.K.M.மன்சூர் (வலயக் கல்விப் பணிப்பாளர்,
சம்மாந்துறை) அவர்களும், மேலும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது 2008,2009,2010 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தி எய்திய மாணவர்களுக்கும், 2009 இல் க.பொ.த.(சா.த.) பரீட்சையில்
முதன்மைச் சித்தி எய்திய மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும்
பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சம்மாந்துறை நெல்லுப்பிடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
2010.12.12 ஆகிய இன்று சம்மாந்துறைநெல்லுப்பிடிச் சந்தியில் பி.ப.3.10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இவ்வாறு நடைபெறும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எமது செய்திப் பிரிவானது மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்றது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474566
feature content slider
Content right
.
.
.