கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிப்பர் வாகனத்தில் பயணித்தவரான சம்மாந்துறையைச் சேர்ந்த அர்ஸாத் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி கல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்ட டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.