Thursday, September 30, 2010

எமது தளமானது எதுவித பக்க சார்புமின்றி உண்மைத் தகவல்களை மட்டுமே காவுகின்றது. தற்பொழுது எமது தளத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்கள், தொழிநுட்ப பிரச்சினைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உணவகங்கள் திடீர் பரிசோதனை

01.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரின் உதவியுடன் உணவகங்களின் தரம்,சுகாதார நிலைமைகளை பரிசோதனை செய்தனர்.இவர்கள் ஹிஜ்றா சந்தியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளை பரிசோதனை செய்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.

சிறுவர் துஷ்பிரயோகமும் உலக சிறுவர் தினமும்

முன்ஸிப் பரீட்கெலிஓயா. ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற் கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளை யும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம்  விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம்  என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதி யினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர் களில் தங்கிவாழ்கின்ற பலவீனர் களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின் றனஇவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிர யோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பதறகாகப் பல கொள்கைகள் மற்றும் பிரக டனங்கள் காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் .நா. சபை யில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்க ளைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் .நா சபையானது 18 வயதுக்குட்பட்ட  அனைவரையும் சிறுவர் கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர் காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் இன் றைய மனித சமுதாயமா னது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன் முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.* பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றுள்  ஏதாவதொரு துஷ் பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர்  துஷ்பிரயோக வடிவங் களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம்  சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்.

Wednesday, September 29, 2010

கெளரவ விருது

2010.09.25 இரத்தினபுரி நகர மண்டபத்தில் அகில இன நல்லுறவுகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஆய்வாளருமான ஜலீல் ஜீ அவர்களின் இலக்கிய,ஆய்வு,ஊடக முயற்சிகளைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக பொன்னாடைபோர்த்தி,சாமசிறி தேசமான்ய கெளரவ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது எமது மண் பதிக்கு பெருமையைத் தருகிறது.
                                                                      

Tuesday, September 28, 2010

இனம் தெரியாத பிரேதமானது கண்டுபிடிப்பு

 சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவிற்குட்பட்ட பள்ளாற்றுப் பகுதியில் இனம் தெரியாத பெண் சடலம் ஆற்றில் மிதந்து வந்ததை பொதுமக்கள் 2010.09.29 அவதானித்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.


ஸ்தலத்துக்கு சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஜெயந்த தஹனாக்க மற்றும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியகட்சகர் மெண்டிஸ்,கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர் பிரசன்னமாகி சடலத்தை ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தினர்.சடலம் இனம் காணப்படாமல் வைத்தியப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.விசாரணைகள் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் திரு.மெண்டிஸிணால் முடுக்கி விடப்பட்டுள்ளது.



Monday, September 27, 2010

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அலசல்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்
இப் பாடசாலையில் சுமார் 40 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.இதில் அதிக புள்ளியாக 183 புள்ளிகளைப் பெற்று மாகண நிலையாக 3 ஐ அச்சி முஹமட் சுஹைப் அத்னான் என்கின்ற மாணவன் பெற்றுள்ளார்.மேலும் இப் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்பு ஆசிரியர்களான MRS.RBM.MANSOOR, MRS.MM.TAHIR, MRS.AU.RIMLAN, ஆகிய ஆசிரியர்களும்,பாடசாலை அதிபர் MR.TM.THOWFEEK அவர்களும் உதவி அதிபர் MR.M.MUSTHAFFA LEBBE அவர்களும் இணைந்த புகைப்படமானது இங்கே இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக செய்திகள் வெகு விரைவில் வெளிவரும்.மேலும் ஒவ்வொரு பாடசாலையிலும் சித்தியெய்திய மாணவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரும்.

சட்டவிரோதமான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் l

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும் இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Saturday, September 25, 2010

மாபெரும் இஜ்திமா


25.09.2010 ஆகிய இன்று மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வாகிய இஜ்திமா ஆனது இன்று சம்மாந்துறை பத்ர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.இதில் பெறும் எண்ணிக்கையான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஏற்பாட்டுக் குழுவினரால் சுமார் 18000 பேர் எதிர்பார்க்கப்பட்டனர்.இவர்களின் எதிர்பார்ப்பானது நிராசை ஆக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான விடயமே.

Friday, September 24, 2010

மாபெரும் ஒன்று கூடல்

25.09.2010 சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மாப் பள்ளிவாசலில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இஜ்திமா ஆனது இடம்பெற உள்ளது.எனவே அனைவரையும் வருக வருக என அழைக்கின்றனர்.இவ் ஒன்று கூடல் நிகழ்வானது அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு இஷாத் தொழுகையுடன் முடிவடையும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

செந்நெல் கிராமத்தில் 30 வருடங்களின் பின் சபூர் சனசக் கட்டிடம் திறக்கப்படவுள்ளது.

25.09.2010 நாளை செந்நெல் கிராமம்-1,11 ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தான சனச கட்டிடத் தொகுதியானாது 1980ம் ஆண்டிற்குப் பின நாளை 30 வருடங்களுக்குப் பின் திறக்கப்படவுள்ளது.இதற்காக அனைத்து மக்களையும் காலை 9.00 மணிக்கு சமூகமளிக்குமாறு சனச பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
          

Wednesday, September 22, 2010

இயந்திர உற்பத்தியில் சாதனை படைக்கும் ஹிலால் என்ஜினியரிங் வேர்க்சொப்

எமது ஊரில் மட்டுமன்றி உலகப்புகழ் பெறும் அளவுக்கு அதி வினைத்திறனான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது.இவர்களின் மற்றுமோர் பாரிய கண்டுபிடிப்பாக வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அதாவது எதுவித மனிதத் தலையீடும் இன்றி சுயமாக அதாவது மின்சக்தியைக் கொண்டு காற்றினால் இயங்கக் கூடிய நெசவு உபகரணம் உற்பத்தி செய்யப்பட்டு வ்ருகின்றது.உண்மையில் இது தன்னியக்க இயந்திரத் தொகுதியாகும்.
                                                                       

Tuesday, September 21, 2010

எமது ஊர் பாடசாலைகளில் பணிக்கூற்றுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எமது ஊரில் புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் வருகையைத் தொடர்ந்து எமது ஊரில் பல்வேறு கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள் இடம் பெற்றுள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டு நிகழ்ச்சி ஊர் மக்கள் சார்பாகவும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.   

Monday, September 20, 2010

கிழக்கு மாகாண கராட்டி சுற்றுப் போட்டி

சோட்டோகன் கராதே தோ கென்சின்காய் அசோசியேசனின் கிழக்கு மாகாணக் கிழையின் 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு (18.09.2010) சனிக் கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மாபெரும் கராட்டி சுற்றுப் போட்டி ஒன்று இடம்பெற்றது. இதில் பல அமைப்புக்களையும் பல கழகங்களையும் சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகள் வயது அடிப்படையிலும் நிறை அடிப்படையிலும் இடம் பெற்றது.
 இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும், மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், மற்றும்பல பிரமுவர்களும் கலந்துகொண்டனர்.
கீழே படத்தில் போட்டியாளர்கள் போட்டியிடுவதையும், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுவதையும், சோட்டோகன் கராதே தோ கென்சின்காய் அசோசியேசனின் கிழக்குப் பிரதிநிதி Sensie.A.R.M.இக்பால் அவர்களால் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்படுவதையும் ரவூப் ஹக்கீம் அவர்களால் சம்மாந்துறைப் பிரதேசசபைத் தவிசாளர் M.I.M.மன்சூர் அவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்படுவதையும் படத்தில் காணலாம்.

இஸ்லாத்தை தழுவினார் சிங்கள சகோதரர்.

எமது ஊரில் நேற்று ஓர் சிங்கள நண்பர் ஒருவர் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டார்.இவரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று பதஹ் பள்ளிவாசலில் இடம் பெற்றது.மேலும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இச் சகோதரருக்கு உதவிய செய்ய விரும்புவோர் பதஹ் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
                                                                       

அங்கீகாரம் இல்லா சுகவீனப் போராட்டமும் மக்களின் கொந்தளிப்பும்

இன்று எமது ஊரின் தேசிய பாடசாலை மற்றும்,அல் மர்ஜான் மகளிர் வித்தியாலய ஆசிரியர்கள் சட்டபூர்வமற்ற ஓர் சுகவீனப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.இது தொடர்பாக எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர் அவர்கள் இது ஓர் தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் மேலும் இது தொடர்பான விளக்கங்களை பொது மக்களுக்கு    வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கினார்.மேலும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தேவையான ஆதரவை பொது மக்கள் பெருவாரியாக வழங்கினர்.மேலும்  400 இற்கும் மேலான மக்கள் கையப்பமிட்டு ஆதரவு வழங்கும் மகஜர் ஒன்றும் கையழிக்கப்பட்டது.




Sunday, September 19, 2010

தனிப்பட்ட குரோதங்கள் துண்டுப் பிரசுரங்களில்

எமது ஊரில் தற்பொழுது வளர்ந்து வரும் புதுவித கலாச்சாரமாக தனது தனிப்பட்ட பகைகளை பழிவாங்கும் களமாக துண்டுப் பிரசுரம் மாறியுள்ளது.எனவே இவ்வாறான ஓர் கேவலமான கலாச்சார முறையை சில நாசகாரச் செயல்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று கூட ஓர்  இவ்வாறான துண்டுப் பிரசுரமானது பள்ளிகளில் வைக்கப்பட்டு இருந்தது.இவ்வாறான நடவடிக்கைகள் எமது ஊரின் மானத்தை வாங்கக் கூடிய செயலே என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் எமது ஊரின் பெயர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு எமது செய்திப் பிரிவானது கேட்டுக் கொள்கிறது.

Friday, September 17, 2010

சம்மாந்துறை நெயினாகாடு அல்-அக்ஸா வித்தியாலயம்

சம்மாந்துறைக்கு உட்பட்ட நெயினாகாடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சது/அல் அக்ஸா வித்தியாலயமானது மாணவர்கள் கல்வி கற்பதற்கான பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலையாக இயங்கி வருகின்றது.இது தொடர்பான புகைப்படங்கள் கீழே இணைக்கப்படுகிறது.மேலும் இப் பாடசாலையின் எல்லையை உறுதிப்படுத்துவதற்கா மதில் கூட அமைக்கப்படவில்லை இவ்வாறான ஒரு நிலைமையில் இப் பாடசாலையானது இயங்கி வருகின்றது.எனவே இப் பாடசாலைக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுக்குமாறு எமது செய்திப் பிரிவானது உரிய அதிகாரிகளிடம் விணயமாக கேட்டுக் கொள்கின்றது.

                                                    

வெகு விரைவில் சம்மாந்துறையில் LB FINANCE

வெகு விரைவில் சம்மாந்துறையில் இஸ்லாமிய ஷரீஆவிற்கு உட்பட்ட முறையிலான வங்கிச் சேவையினை LB FINANCE நிறுவனமானது எமது ஊரில் ஆரம்பிக்கவுள்ளது.
தொடர்புகளுக்கு-
0771562184

Thursday, September 16, 2010

24 மணி நேர உலக முஸ்லிம் இணையத்தள வானொலி

எமது சம்மாந்துறைச் செய்திகளின் ஊடகப் பங்காளரான F&F MEDIA நிறுவனமானமானது D-MEDIA உடன் இணைந்து தற்பொழுது உலக முஸ்லிம்களை உறுதிப்படுத்தும் இஸ்லாமிய 24 மணி நேர இணையத்தள வானொலியினை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.தற்பொழுது பரீட்சாத்த ஒளிபரப்பு இடம் பெறுகிறது இவ் இணையத்தள வானொலி தொடர்பாக உமக்குத் தெரிந்தவர்களுக்கு பிரபலப்படுத்துமாறு எம்து வானொலிப் பொறுப்பதிகாரி கேட்டுக்கொள்கின்றார்

எமது இணையத்தள முகவரி-
www.najaafm.com

மேலதிகத் தொடர்புகளுக்கு-
0752066666

சம்மாந்துறை வரலாற்று ஆய்வு

சம்மாந்துறையில் வளர்ந்து சமூக சேவை அமைப்புக்களில் ஒன்றான SYDA அமைப்பினர் தற்பொழுது எமது ஊரின் கலை,கலாச்சார,விழுமியங்கள் பற்றிய ஓர் ஆய்வை மேற்க்கொள்ள உள்ளனர்.இதற்காக வருகின்ற புதன் கிழமை அதாவது 22.09.2010 அன்று எம்து ஊர் மக்களை சந்திப்பதற்காக வரவுள்ளனர்.எனவே இவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு .... அமைப்பு தலைவர் கேட்டுள்ளார்.

Wednesday, September 15, 2010

சுற்றாடலை சுத்தமாகப் பேணுவோம்

எமது ஊரின் அனேகமான வீதிகளானது மிகவும் அழகான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் காணப்பட்ட போதும் எமது மக்கள் அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அற்றவர்களாக தான் தோன்றித்தனமாக குப்பைகளை வீதியோரங்களில் போட்டு சூழலை மாசடையச் செய்கின்றனர்.இது குறித்து எமது செய்திப் பிரிவானது எமது பிரதேச சபைத் தவிசாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.இவ்வாறு செய்வோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மேலும் இவர்கள் இனங்காட்டப்பட்டு தகுந்த பாடம் புகட்டப்பட வேண்டும் எனவும் எமது செய்திப் பிரிவானது சம்மந்த்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றது.

24 மணி நேர எரிபொருள் நிரப்பு நிலையம்


தற்பொழுது சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையமானது தமது சேவையை 24 மணித்தியாலய சேவையாக விஸ்தரித்துள்ளது.இது ஒரு சிறந்த சேவை என மக்கள் கூறுகின்றனர்.இது வெளி ஊர்களில் இருந்து வரும் மக்களுக்கு சிறந்த ஓர் சேவையாக மேற்க் கொள்ளப்படுகிறது.மேலும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் எதிர் காலத்தில் பல்வேறு சேவைகள் மேற்க்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
                                                                       

Tuesday, September 14, 2010

வைரவிழாக் கொண்டாட்டம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா வித்தியாலயமானது வெகு விரைவில் வைர விழாவினைக் கொண்டாடவுள்ளது.காத்திருங்கள் இது தொடர்பான விரிவான செய்திககளுக்காய்.


பாழடைந்துள்ள பொதுக் கட்டிடங்கள்

எமது ஊரின் வண்டு வாய்க்கால் பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுச் சந்தை,தாபால் நிலையம்,கூட்டுறவுக் கடை என்பன மக்களுக்கு சேவை செய்யவே அமைக்கப்பட்டவை.இருப்பினும் அது தற்பொழுது குப்பை கொட்டும் இடமாகவும்,ஆடு,மாடு,நாய் என்பவற்றின் தங்குமிடமாக மாறியுள்ளது.எனவே இவ்வாறு வளங்கள் காணப்பட்டும் மக்களின் பாவனைக்கு ஓர் குப்பைக் கூடமாகக் காணப்படுவது வருத்தம் தரும் விடயமே.எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்குமாறு எமது செய்திப் பிரிவானது சுட்டிக்காட்டுகின்றது.



  

Monday, September 13, 2010

காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹூம் M.I.M.அன்வர் இஸ்மாயில் அவர்களின் மூன்றாவது சிறார்த்த தினம் 14.09.2010 ஆகிய இன்றாகும் .

எமது ஊருக்காய் பல அபிவிருத்தித் திட்டங்களையும் எமது ஊரின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களின் பட்டியலில் இவரும் ஒரு சிறந்த பங்காளரே
இன்று இவரது வரலாறு தொடக்கம் அவரது சேவை வரை ஓர் சிறு ஆய்வுக் கட்டுரையானது அவருடைய சிறார்த்த தினத்தில் நினைவு கூர்வது எமது ஊர் மக்களின் தலையாய கடமையாக காணப்படுகிறது.அந்த வகையில் அவரது அறிமுகமானது வழங்கப்படுகிறது.அன்வர் இஸ்மாயில் கண்ணாடி மரைக்காரின் மகள் சுபைதாவுக்கும் இஸ்மாயில் மாஸ்டருக்கும் 16.07.1967 இல் பிறந்தவர்.தாறுல் உலூம் ,மகளிர் வித்தியாலயம்,சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆகியவற்றில் பயின்றவர்.ஆரம்பக் கல்வியில் துடுக்குத்தனமிக்கவர்.உயர் கல்விக்குப் பின்பு சங்கங்கள் உருவாக்குவது,பொதுச் சிந்தனைகளில் ஈடுபாடு காட்டுதல் போன்ற விடயங்களில் ஈடுபாடு காட்டினார்.மேலும் இவர் கொழும்பு சட்ட பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.


மேலும் இவரது அரசியல் பிரவேசமானது 2001 இல் இலங்கையின் 12 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக அதிரடியான அரசியல் வாழ்வின் வெற்றிக்கு வித்திட்டது.இவ்வாறு பல் தடைகல்லை வெற்றிப் படியாக மாற்றிய மாபெரும் தலைவராகத் திகழ்ந்தார் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை என்றே கூற வேண்டும்.இவருடைய அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட எமது ஊர் மக்களால் நினைவு கூறப்பட வேண்டியதே. இம் மறைந்த தலைவருடைய ஓர் ஆய்வுக் கட்டுரையானது வெகு விரைவில் காத்திருங்கள்.

பெருநாள் கழியாட்ட நிகழ்வுகள்




சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு கல்யாட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இதில் மிக்கூச் சொரியும் பாதாளக் கிணற்றுக்குள் அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டம்,பைசிக்கள் ஓட்டம்,வித்தியாசமான முச்சக்கர வண்டி ஓட்டம் என்பன  இடம்பெற்றன.இந் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய வீரர்கள் வெல்லஸ ஐச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களின் திறமையானது முழு இலங்கையர்களும் அறிந்ததே.மற்றும் ஓர் எமது கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருக்கோவிலைச் சேர்ந்த சாணக்கிய வீரன் சாண்றோ ரவியின் அற்புதத் திறமைகளும் வெளிக்காட்டப்பட்டன.இது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Saturday, September 11, 2010

நோன்புப் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகள்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அஜ்மிரா ட்ரவல்ஸ் இன் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டமானது இன்று சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்றது.இதில் அதிக எண்ணிக்கையான விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர்.இது சுமார் 22 கிலோமீற்றர் கொண்ட அரை மரதன் போட்டியாகும்.இப் போட்டிக்கு பிரதம அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மன்சூர் அவர்களும் சவூதி அராபிய உயர் அதிகாரி மாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது.இதற்கு அனுசரனை அஜ்மிரா ட்ரவ்ல்ஸ் இனால் வழங்கப்பட்டது.இம் மரதன் ஓட்டப் போட்டியில் வீரர்கள் பெற்ற இடங்கள் வருமாறு-
1ம் இடம் - M.RASKAN
2ம் இடம் - A.M.MOHAMED FARIS
3ம் இடம் - S.JEEVAN KUMAR
4ம் இடம் - M.L.SAFRAN
5ம் இடம் - K.L.ARAFATH
6ம் இடம் - A.J.SAJITH 

                                            





















































சம்மாந்துறையில் மழலைக்கும் கணணி அறிவா?

FAROOK MOHAMED MISBAH
ஆம் எமது சம்மாந்துறையில் மழலைக்கு கணணி அறிவு என்பது சாத்தியமான ஒரு விடயமாகக் உருமாறியுள்ளது.இதற்கு உதாரணமாக சம்மாந்துறை 413/ ,ஸதக்கர் லேன் இல் வசிக்கும் பாறுக் முஹம்மட் மிஸ்பாஹ் எனும் மழலையை உதாரணமாகக் கொள்ளலாம் இச் சிறுவன் மூன்று வயது கொண்டவனாக இருந்த போதிலும் கணணியை தானாகவே இயக்கி கேம் விளையாடும் வல்லமை கொண்டவனாகக் காணப்படுகிறான்.இச் சிறுவனுக்கு பெசும் பேச்சுக் கூட இன்னும் திருந்தாத நிலையில் கூட கணணியில் பாண்டித்தியம் பெற்றுள்ளான். இதை தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பதா?பரம்பரையலகுகளின் ஆட்சியான இயல்பு வெளிக்காட்டல் என்பதா?எவ்வாறாயினும் இது நல்ல முன்னேற்றகரமாகவே கொள்ளலாம்.இவ்வாறான இளம் பிஞ்சு ஒன்று எமது ஊரில் காணப்படுவது எமக்குப் பெருமிதமே.இம் மழலையின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான காட்சியின் இணைக்கப்பட்டுள்ளது.

கீழே காட்சிப் படத்தினுடைய லிங் இணைக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/v/vqRCCzaDKRA?hl=en&fs=1

Friday, September 10, 2010

பெருநாள் கொண்டாட்டம்

எமது ஊரில் பெருநாள் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது இதற்கான விரிவான செய்தி இன்று வெளிவ்ரும்.காத்திருங்கள்.

Thursday, September 9, 2010

சம்மாந்துறையில் முதற் தடவையாக திடலில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம் முறை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் பெருநாள் தொழுகையானது வெகு சிறப்பான முறையில் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.இதில் பெருமளவான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.இது தவ்ஹீத் ஜமாஅத் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் வருகின்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையானது திடலிலேயே தொழுவிக்கப் படும் என சம்மாந்துறை உலமா சபை உட்பட அனைத்து சபைகளும் முடிவெடுத்துள்ளது.மேலும் ஒரு தடவை மாத்திரமே பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
                                        

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.