Saturday, August 25, 2012

சம்மாந்துறை பெயர் வரலாறு நூல் வெளியீடு

சம்மாந்துறை வாழும் இலக்கிய வட்டத்தினால் வெளியிடப்பட்ட  எம்.ஐ.எம்.சாக்கீர் எழுதிய 'சம்மாந்துறை பெயர் வரலாறு' தெளிவிற்கான ஒரு தேடல்  நூல்  வெளியீட்டு விழா சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இன்று (2012-08-25) சனிக்கிழமை நடைபெற்றது.சம்மாந்துறையின் வரலாற்றில் முதன்முறையாக நூல்வடிவில் வெளிவரும் தனி வரலாற்றுத் தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
நூல் எழுத்தாளரிட்ம இருந்து உத்தியோக பூர்வமாக அமைப்பின் தலைவருக்கு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நூலின் முதல்ப் பிரதியை நூல் ஆசிரியர் மற்றும் அமைப்பின் தலைவரிடமிருந்து  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்  பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் மூத்த இலக்கியவாதி கலாபூஷணம் மாறன். யூ.ஸெயின் அவர்களின் சிறப்புரையும் எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன்  அவர்களின் நூல் அறிமுக உரையும் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் சிறப்பு உரையும் இடம்பெற்றது.. 


சம்மாந்துறை வாழும் இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எம்.சமீர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் போராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத்தலைவர் ஐ.ஏ.ஜப்பார் மற்றும் முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சுர் ஆகியோரும் இன்னும் பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.