
நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசத்தை புவிச்சரிதவியல் பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பார்øவயிட்டனர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்களில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கிணறுகளிலும் நீர் நிறமாற்றமடைந்துள்ளதனால் அருந்துவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். நீர் வெளியேறும் இடங்களை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுகின்றனர்.