Sunday, March 4, 2012

சவூதி , அபுதாபியிலிருந்து எண்ணெய் கொள்வனவுக்கு இலங்கை முயற்சி

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா  தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மசகு எண்ணெய் மற்றும் சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை  அதிகரிக்குமாறு சவூதி அரேபியா, அபுதாபி ஆகிய நாடுகளை சம்மதிக்கச் செய்ய முடியுமென இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பெற்றோலிய நிறுவனமான ஆரம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் கம்பனி ஆகியனவற்றுடன் மேலதிக விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தைகளுக்காக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் அடுத்தவாரம் இவ்விரு நாடுகளுக்கும் செல்லக்கூடும் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு இவ்வருடம்  குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் குறைவடையும் எனவும் இதனால் சர்வதேச சந்தையிலிருந்து  சுத்திரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்குமதிக்கான சாத்தியத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம், 1.7 பில்லியன் டொலர் செலவில் 2 மில்லியன் தொன் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்தது.  அவற்றில் 1.93 மில்லியன் தொன் எண்ணெய் ஈரானிலிருந்து 1.6 பில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக சந்தையின் கேள்விப்பத்திரங்களுக்கூடாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து  சுத்திரிக்கப்பட்ட எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் எண்ணெயை இறக்குமதிக்கான  கடன் எல்லையை விஸ்தரிக்குமாறு அந்நிறுவனத்தை கோருவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓமானிடமிருந்தும் இலங்கை உதவிகளை கோரியுள்ளபோதிலும் அந்நாட்டிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவ்வதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானிய எண்ணெய் நெருக்கடியானது எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பாதிக்கவில்லை என அதன்  நிர்வாக இயக்குநர் கே.ஆர். சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கான எண்ணெய் விநியோகம் ரிலையன்ஸ் மற்றும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தமது நிறுவனம் மிக அதிகமாக தங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 40,000 தொன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தை பொறுத்தவரை தட்டுப்பாடு இல்லை எனவும் அவர்கூறினார்.
tamilmirror

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.