Thursday, January 26, 2012

இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகாரிக்க முடியாது என சவூதி அரசு கை விரிப்பு!

இலங்கைக்கான ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டாவை அதிகாரிக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


தற்போது மினாவிலுள்ள வசதிகளை கருத்தில் கொள்ளும்போது இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜித்தாவிலுள்ள ஹஜ் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சந்தித்தபோதே அமைச்சர பௌசி இந்த வேண்டுகோளை விடுத்தார். சென்ற வருடம் ஹஜ் யாத்திரிகர்களின் கோட்டா 2800 பேராக இருந்தது. இது இறுதி நேரத்தில் 3800 ஆக அதிகரிக்கப்பட்டபோது இந்த அவசர நிலைமையை பயன்படுத்தி ஹஜ் யாத்திரை ஒழுங்கு செய்யும் முகவர்கள் கூடிய இலாபமீட்டினர் என அமைச்சர் பௌஸி இதன்போது விளக்கினார்.

எனினும் இம்முறை ஒரே தடவையில் கோட்டா வழங்கப்படுமென சவூதி அமைச்சர் கூறியதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார். 2010 இல் வழங்கப்பட்ட கோட்டாவான 5800 பேரை இம்முறையும் வழங்கும்படி கேட்டு கொண்டதாக அமைச்சர் பௌஸி மேலும் கூறினார். இந்த சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை கௌன்ஸல் டாக்டர் ஏ.உதுமாலெப்பையும் கலந்து கொண்டார். METROMIROR.COM

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.