Monday, October 22, 2012

நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை


நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகக் கிடைக்கும் அதிகளவு முறைப்பாடுகளே இதற்குக் காரணமாகும். அங்குள்ள நிர்வாகத்தினர் இதனை பெருமளவு அலட்சியப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சில சம்பவங்களில் வார்த்தையளவிலும் உணர்ச்சிகரமாகவும் பௌதீக ரீதியாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதாக அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை உருவாக்குவதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு போதுமான தராதரங்களோ, விதிகளோ இல்லாமை இந்நிலையை மேலும் தூண்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை நிர்வகிப்பதற்கான பலமான சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. யாரிடம் பொருளாதார ரீதியாக அதற்கான இயலுமை இருக்கிறதோ அவர்களே இதனைத் தொடங்குகின்றனர். இப்பாடசாலைகளில் சிறுவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளும் காணப்படுவதில்லை. அத்துடன் ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவதுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விதிகளையும் பிரமாணங்களையும் தயாரிப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட அதிகார சபை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


(நன்றி மீள்பார்வை)

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.