கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அனைத்துப் பாடசாலைகளும் தரம் 6
இலிருந்து உயர்தரம் வரையிலான வகுப்புகள் வாரத்தின் ஒவ்வொரு
திங்கட்கிழமையில் மாத்திரம் பிற்பகல் 2.10 மணிவரை கல்வி நடவடிக்கைகள்
இடம்பெற வேண்டுமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம்
தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய விசேட சுற்றறிக்கையை சகல மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.10 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் ஏனைய நாட்களில் வழமைபோல் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் காலையில் இடம்பெறும் மத வழிபாடுகள் மற்றும் கூட்டங்களினால் வாரமொன்றில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவு குறைவடைகின்றமையால், அதனை மீள் நிரப்பும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தாருஸ்ஸலாம்
தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்றது.
சம்மாந்துறை மக்களின் நீண்ட கால குறைபாடாக விருந்த பௌசி மாவத்தை வீதி
அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீரின்
முயற்சியினால் 158 மில்லியன் ரூபா செலவில் நவீன காப்பற் வீதியாக
அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் அண்மையில் வீதி அபிவிருத்தி
திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியிலாளர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில்
நடைபெற்றது.
ஏறாவூர் பகுதியில் பல இடங்களிலும் தரையிலிருந்து நீர் வெளியேறுவதற்கான
காரணத்தைக் கண்டறிவதற்கு மேலும் சில நாட்கள் அந்தப் பிரதேசத்தை அவதானிக்க
வேண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட
இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஹஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில்
புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சனிக்கிழமை நிலத்தில்
வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் ஊடாக நீர் வந்த வண்ணமுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
முட்டையில்
முஹம்மது நபியின் பெயர் தோன்றிய அதிசய சம்பவம் பொத்துவிலில் பிரபலமான
விஞ்ஞான ஆசிரியரும் அல்-கலாம் வித்தியாலயத்தின் அதிபருமான சமீம் ஆசிரியரின்
வீட்டில் இடம் பெற்றுள்ளது. இவ்வதிசய சம்பவத்தை காண பெருந்திரளான மக்கள்
சமீம் ஆசிரியரின் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.