Tuesday, August 30, 2011
கிழக்குப் பல்கலை வேந்தராக பேராசிரியை யோகா!
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பேராசிரியை யோகா இராசநாயகம்
நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த
நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை
பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகளில் ஒன்றாக
கருதப்படும் வேந்தர் பதவியினைப் பெறுகின்ற முதல் தமிழ் பெண்மணி இவர் ஆவார்.
நீண்ட காலம் பல்கலைக் கழக உயர் கல்விப் பணியில் ஈடுபட்டுவரும் இவர்
கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைத் துறை பீடாதிபதியாகவும் பதில்
உபவேந்தராகவும் பல தடவை பணியாற்றியு ள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத் தைப் பெற்றுக்கொண்ட இவர், உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் பிரபலமான விருதுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்டவர்.
இவை தவிர தேசிய சர்வதேச ரீதியில் செயற்படும் அமைப்புக்களில் அங்கத்தவராக செயற்பட்டுள்ளார். இவர் உயர் கல்விப் பணியில் அடைந்த அளவிடமுடியாத வெற்றிகளைக் கெளரவித்து கொழும்புப் பல்கலைக் கழகம் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டமளித்து கெளரவித்தது.
கொழும்பிலுள்ள சொண்டா (Zonta) அமைப்பானது கல்வித்துறை மேம்பாட்டுக்காக இவர் ஆற்றிய பணியினைக் கெளரவித்து “சொண்டா பெண்கள் சாதனையாளர் விருதினை” 2004ம் ஆண்டு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 29, 2011
பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு 343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் செயற்பாட்டு ரீதியாகவும்,வளங்கள்
அடிப்படையிலும், அபிவிருத்தியடைந்து வரும் இவ்வேளையில் இப்பாடசாலைகளில்
நீண்டககாலமாக நிரப்பப்படாமல் உள்ள பாடசாலை பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு
343 பேரை நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளதாக
கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரும்,வீதி அபிவிருத்தி, நீர்பாசனம்,வீடமைப்பும் நிர்மானமும்,கிராமிய மின்சாரம்,மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடாக 2008ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 100 கல்வி அலுவலக,காரியாலய ஊழியர்களுக்கான அமைய நியமனம் வழங்குவதற்கும் இவ்வமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 930 முன்பள்ளி ஆசிரியர்கள் எதுவித கொடுப்பனவுகளின்றி நீண்ட காலமாக கடமையாற்றிவருகின்றார்கள். இவர்களால் வழங்கப்படும் சேவையை ஊக்குவிப்பதற்காகவும்,பாலர் பாடசாலைகளில் தொடர்ந்தும் இயங்குவதற்காகவும் அவர்களுக்கு மாதாந்தம் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 3000 ருபாய் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் உதுமாலெப்வை மேலும் தெரிவித்தார்.

Friday, August 26, 2011
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின்
பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாபாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிரேஷ்ட அமைச்சர்களான பீ.தயாரத்ன, அதாவுட செனவரத்ன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைசால் காசீம், சிறியாணி விஜேவிக்கிரம, பி.பியசேன, கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, ரீ.நவரெட்னராஜா, அம்பாரை அரசாங்க அதிபர் சுனில்கன்னங்கரா, உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Thursday, August 25, 2011
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவிப்பு
நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்தார் இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது.
1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது
இலங்கையில்
காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும்
வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட
வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது
அரசாங்கத்தின் 1000 இடைநிலைப்பாடசாலை அபிவிருத்திதிட்டம்
அரசாங்கத்தின் 1000 இடைநிலைப்பாடசாலை அபிவிருத்திதிட்டம் தொடர்பில் கிழக்குமாகாண கல்வித் திணைக்களம் நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் விளக்கமளிக்கும் கூட்டத்ததை நடாத்தினர்.அங்கு மகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா குணராஜா மற்றும் பணிப்பாளர் மன்சூர் உரையாற்றுவதையும் கல்வி அதிபாரிகள் அதிபர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
கிழக்குப் படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் லால் பெரேரா
இராணுவத்தின் கிழக்குப் படைத் தலைமையகத் தளபதியாக மேஜர் ஜெனரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கந்தையில் உள்ள கிழக்குப் படைகளின் தலைமையகத்தில் இவர் நேற்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சீனாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் மேற்படிப்புக்காக செல்லவுள்ளார்.
இதையடுத்தே புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் லால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் கிழக்குப் பகுதிகளில், மர்மமனிதர் விவகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரிப்பதற்கு மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நடவடிக்கை எடுத்திருந்தார்.

அமெரிக்க விமானங்களில் இருந்து அம்பாறையில் பொதிகள் வீச்சு
இருபது நாடுகளின் விமானப்படை அதிகாரிகள்
பங்கேற்கும் பசுபிக் வான் மீட்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக இன்று அம்பாறை
மாவட்டத்தில் வான்வழியாகப் விநியோகப் பொதிகளை போடும் ஒத்திகைப் பயிற்சி
மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் சி-130 இராட்சத விமானங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மேலாக பொதிகளை போடும் பயிற்சிகள மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகைப் பயிற்சியில் சிறிலங்கா, அவுஸ்ரேலியா, மலேசிய விமானப்படைகளின் தலா ஒரு விமானமும், அமெரிக்க விமானப்படையின் மூன்று விமானங்களும் பங்கேற்கவுள்ளன.
அதேவேளை நாளை சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானங்களில் இருந்து பரா படையினரை தரையிறக்கும் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
Saturday, August 20, 2011
முஸ்லிம்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குல்! அம்பாறையில் சம்பவம்!
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொண்டை வெட்டுவான் பிரதேசத்தில் வயலில்
யானைக் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது ஜீப்பில் வந்த இனம் தெரியாத
குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் அம்பாறை
பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கொண்டை வெட்டுவான் பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எம்.மன்சூர் (வயது45) ஏ.எம்.முகைதீன் பாவா(வயது 44), நிந்தவூரைச்சேர்ந்த எம்.சலீம்(வயது 50) ஆகிய மூவருமே மேற்படி சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்களாவர்.
இச்சம்பவம் பற்றி தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவிக்கையில் தாம்வயலில் யானைக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஜீப் வண்டியில் ஒரு குழுவந்து தம்மிடம் நீங்கள் எந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் என்று கேட்டதாகவும், தாம் இஸ்லாமியர்கள் எனக் கூறியபோது எம்மீது சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறினார். இது தொடர்பாக அம்பாறை பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

கிழக்கில் மர்ம மனிதன் விவகாரத்தால் கூலித் தொழிலாளர் பெரிதும் பாதிப்பு
கிழக்கு மாகாணத்தில் மர்ம மனிதன் விவகாரம் காரணமாக சிவில் நிர்வாகம்
முற்றாக முடங்கும் நிலைமையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக
இந்தச் சம்பவங்கள் காரணமாக மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள் பெரும்
நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களுக்குச் செல்லும் பெண் ஊழியர்களின் வருகை மிகவும் குறைவடைந்த நிலையிலுள்ளதாகவும் இதன் காரணமாக தமது அன்றாட நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக கிராமங்களில் சிறுசிறு கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம மனிதனைப் பயன்படுத்தும் சிலர் வீடுகளில் பாய்ந்து திருட்டுகளில் ஈடுபட்டு வருவதுடன், இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று முறையிடுவதற்கும் பயப்படும் நிலையிலும் உள்ளனர்.
யுத்த காலத்தை விட மிக மோசமான நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மக்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் வீதிகளிலிறங்க பயப்படும் நிலையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலைமையை மர்ம மனிதன் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
தினமும் மக்கள் பயத்தில் உறைந்து நாட்களை கடத்தி வருகையில், கூலித் தொழிலுக்குச் சென்று தமது குடும்பங்களை வழிநடத்தியவர்கள் கடந்த ஒருவாரமாக எதுவிதத் தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மர்ம மனிதன் விவகாரம் காரணமாக மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக பொலிஸாரின் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு முற்றாக செயலிழந்துள்ளது. பொலிஸார் மீது மக்கள் தாக்குதல்கள் நடத்துவதன் காரணமாக வீதி பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் ஈடுபடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் வாகனங்களின் அதிக வேகம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடியில் பொலிஸார் - பொதுமக்கள் மோதலால் பதற்றம்! வீடுகள், வாகனங்கள் சேதம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நேற்று
வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மர்ம மனிதன் தொடர்பாக பதற்றத்தினால்
பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக
பாலமுனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது நடந்த தாக்குதல்களில் சில வாகனங்கள், வீடுகளின் கதவுகள், ஹோட்டல்களின் முன்புற கண்ணாடிகள் என்பனவும் சேதமடைந்தன.
காத்தான்குடியை அண்மித்த பாலமுனை கிராமத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.
இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் முரண்பாடு அதிகரித்த நிலையில், பொலிஸாரை நோக்கி பொதுமக்கள் சிலர் கற்களை வீசினர். இதன் பின்னர் அங்கு வரவழைக்கப்பட்ட இரானுவத்தினர் சப்த வேட்டுக்களை தீர்த்து பொதுமக்களை கலைத்தனர்.
இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் மற்றும் வான், அதே போன்று புதிய காத்தான்குடி கர்பலாவீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் என்பவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில ஹோட்டல் கடைகளின் முன்பகுதி கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின் குமிழ்கள் வீட்டின் கதவுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோர் இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசி நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் இன்று அதிகாலையில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன.
இதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சில் எரிந்து கொண்டிருந்த டயர்களை அகற்றி வாகனப்போக்குவரத்தை சீர் செய்தனர்.

Saturday, August 13, 2011
உலக வங்கி பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் உலக வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையுடன் உலக வங்கி அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட இருக்கின்ற எதிர்கால திட்டங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தொடர்ந்து உலக வங்கியானது மத்திய அரசின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண சபைக்கு புதிய பல செயற்த்திட்டங்களை தொடர்ந்தும் எதிர்காலத்தில் வழங்கும் எனவும் உலகவங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டயாரிடோ ஹே தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் சார்பில் சுசின் ரஸாய், சான்டியா சல்கொடா மற்றும் சீனித்தம்பி மனோகரன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை சார்பில் விவசாய அமைச்சர் கலாநிதி து.நவரெட்ணராஜா, பிரதி பிரதம செயலாளர் திட்டமிடல் எஸ்,மகேந்திரராஜா, முதலமைச்சரின் பதில் செயலாளர் கே.கருணாகரன் பிரதி பிரதம செயலாளர் நிதி எஸ். மயுரகிரிநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண்

பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.
இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.
அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.
அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.
Thursday, August 11, 2011
மர்ம மனிதன் சம்மாந்துறையில்? நடந்தது என்ன?
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில்
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில்
பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
இரவுவேளையில் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது
சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும்
அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். இதனை
அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை
தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர். இவர்களை பொலிஸார் அகற்ற
முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் விழுந்துள்ளன. ஆத்திரமடைந்த
பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க
முற்பட்டிருக்கிறார்கள்.
பெண்ணின் கையில் ஏற்பட்ட கீறல்
இது தொடர்பாக களமுனையிலிருந்து
எமது செய்தியாளர் தெரிவிக்கையில்; இங்கு ஒரு பெண்ணின் கையை
இனந்தெரியாதவர்கள் (மர்ம மனிதர்கள்) கிளித்துவிட்டுச் சென்றனர். உடனே
மக்கள் அவரை விரட்டிப்பிடிக்கச் சென்றனர். தீடீரென் அவன் பொலிஸ்
நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளான். பொதுமக்கள் மர்ம மனிதனைத் தேடி வலை
விரிந்திருக்கின்றனர். கையை வெட்டியவனும் மர்ம மனிதனாகத்தான்
இருக்கவேண்டும் என்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மக்கள் ஒன்றுகூடி
அவனைக் காட்டுமாறு கூச்சலிட்டுள்ளனர். மர்ம மனிதனின்மேல் ஆத்திரத்தில்
இருக்கும் மக்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என பொலிஸார் பொதுமக்களைத்
தடுக்கவே, பொலிஸாரை நோக்கி கல்லெறிகள் வீழ்ந்தன. மக்கள் அவனை தங்களிடம்
ஒப்படைக்குமாறு கோஷமிட்டனர். இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார்
கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். தற்போது அங்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் குளித்துக்கொண்டிருந்த இடம்
தற்சமயம் நிலைமை சுமூக
நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும்
வரவில்லை. இதுபற்றி பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது எதுவும் சொல்ல
மறுத்துவிட்டனர். தற்போது மர்ம மனிதன் என்ற பெயரில் சந்தேக நபர்கள்
மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவம் பொலிஸார்
அவர்களைக் காப்பாற்றுவதாலும் பொதுமக்களுக்கு அரசு மீதான சந்தேகம்
வலுப்பெறுவதாக பலமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன?
யார் இந்த கிறீஸ் (மர்ம) மனிதன்? ஏன் பெண்களைக் குறிவைத்து தாக்குதல்
நடத்தவேண்டும்? அல்லது தற்போது மர்ம மனிதன் பெயரைப் பயன்படுத்தி
வெளியாட்கள் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றார்களா? இதற்கான உள்நோக்கம்
என்ன? அரசு ஏன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறான பல
கேள்விக் கணைகளுக்கு விடைதெரியாமல் இந்த மனிதனைப் போலவே மர்மமாக உள்ளது.
கிரீஸ் மனிதனின் கைவரிசை இன்று சம்மாந்துறை மண்ணில் மேலோங்கியுள்ளது

Wednesday, August 10, 2011
பெண்ணிடம் தண்ணீர் கேட்டு ஊசி போன்ற ஆயுதத்தால் தாக்கியவர் மக்களிடம் பிடிபட்டார்
நாடு பூராகவும்
பரவிவரும் பெண்களை இரத்தம் ஓடச் செய்து பலியிடுதல் என்பது இப்போது கிழக்கு
மாகாணத்திலும் பரவி வருகிறது. சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக்
கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில்
கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் இந்தச் செய்தியால் மக்கள்
பீதியடைந்திருந்தனர். நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர்,
அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற
கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற
பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில்
தங்கியிருந்தனர்.
இன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நாவலடியில் வசிக்கும்
பெண்ணொருவரின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டுச் சென்ற இளைஞர் ஊசிபோன்ற கூரிய
ஆயுதத்தைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் இரத்தம் வெளியேறி இப்பெண்
மயக்கமுற்ற நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் ஊரவர்கள் கூடி அந்நபரைப் பிடித்து வாழைச்சேனைப் பொலஸில்
ஒப்படிடைத்தனர். பொலிஸ் இவரை கைது செய்யாது தப்பியோட விட்டதால் கோபமடைந்த
ஊர்மக்கள் ஓட்டமாவடி பிரதான வீதியில் திரண்டு போராட்டம் நடாத்திக்
கொண்டிருக்கி்ன்றனர். இச்சம்பவத்தின் போது போலீஸ் மக்களை நோக்கிச்
சுட்டதில் ஒருவர் தலையில் காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டார். கொழும்பு – மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துப் பாதையும்
மட்டக்களப்பு – திருகோணமலை போக்குவரத்துப் பாதையும் இதனால் முற்றாகத்
தடைப்பட்டுள்ளது.
அண்மையில் இதே போன்ற நிகழ்வுகள் பல எல்லைப்புற கிராமங்களில்
நடந்திருக்கின்றன. இரக்காமத்திலும் ஒரு பெண்ணை தாக்கிய இளைஞர் பொலிஸில்
ஒப்படைக்கப்பட்டும் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்
மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸைத் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களை இரத்தப் பலி கொடுப்பது புதையல் எடுப்பதற்காக இருக்கலாம் என்று
மக்கள் நம்புகின்றனர். நாடுபூராகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால்
அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கிறீஸ் யக்கா என்ற மர்ம மனிதர்கள்
நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ்
யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள்
தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது.
அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள்
உலாவருகின்றது.
இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ்
யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல
பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட
ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத
நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக
பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்
கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என
சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை
அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை,
வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்
மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம்,
ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில்
இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள்
தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று
சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால்
பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி மற்றும் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது
கூறமுடியாவிட்டாலும் சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்
என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன்
பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம்,
புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும் பேசப்படுகின்றது .
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சிறு பிள்ளை விசேட வைத்தியர் இஸ்லால் நியமனம்.
இன்று 10.08.2011 ஆகிய இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொன்னாளென்றே கூறலாம். ஏனெனில் இன்று சிறு பிள்ளை விசேட நிபுணர் டாக்டர் இஸ்லால் அவர்கள் எமது வைத்தியசாலையில் நியமனம் பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்தில் தமது மேற் படிப்பை மேற்கொண்டு முதல் நியமனமாக எமது வைத்தியசாலையில் கடமை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது என சமாந்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய அதிகாரி டாக்டர் திரு.ஏ.இஸ்ஸடீன் அவர்கள் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474563
feature content slider
Content right
.
.
.