Sunday, November 18, 2012

இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி சென்ற வெள்ளிக்கிழமை முதன் முறையாக உலகப் புகழ்பெற்ற ஜாமிஉல்-அஸ்ஹரில் (அல்-அஸ்ஹர் பள்ளிவாசல்) ஜும்ஆ பிரசங்கத்தை நிகழ்த்தினார். “உலகின் முன்னணி பள்ளிவாசல்கள் பலவற்றில் நான் பேசி இருக்கிறேன். ஆனால், அல்-அஸ்ஹரில் பேசுவது இதுவே முதல் முறை“ என அவர் அங்கு குறிப்பிட்டார்.
இதன்போது, காஸாவில் தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதலை கண்டித்தமைக்காக எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கும் கட்டார் நாட்டுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தை அவர் இப்பேருரையில் வன்மையாகக் கண்டித்தார். “கொல்லப்படும் அளவுக்கு காஸா மக்கள் என்னதான் செய்தார்கள்?. இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு. வரலாறு முழுவதும் அது அதனையே செய்து வந்திருக்கிறது“ எனவும் அவர் சாடினார்.

சிரிய மக்களுக்கு எதிராக பஷார் அல் அஸத் செய்யும் கொடுமைகளையும் அவர் கண்டித்துப் பேசினார்.

உலக இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியத்தின் தலைவராக கர்ளாவி உள்ளார். ஜமால் அப்துன் நாஸரின் காலத்தில் எகிப்தில் இருந்து வெளியேறிய அவர் கட்டாரில் தற்போது வாழ்ந்து வருகிறார்.

2011 ஜனவரி 25 புரட்சியின் காரணமாக முபாறக் வீழ்த்தப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், தஹ்ரீர் சதுக்கத்தில் கர்ளாவி குத்பாவை (வெள்ளிக்கிழமை நிகழ்த்தும் மார்க்க உரை) நிகழ்த்தினார். இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
கர்ளாவி 1926 இல் எகிப்தில் பிறந்தார். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அவர், இன்று சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அறிஞராகத் திகழ்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.